thamizhum saraswathiyum today episode november 22 : தமிழும் சரஸ்வதி இன்றைய எபிசோடில் தமிழ் நமச்சி சரஸ்வதி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சரஸ்வதி கோவிலுக்கு போனோம் இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க என கூற எந்த கோவிலுக்கு என தமிழ் கேட்கிறார், ஏர்போர்ட்டுக்கு அருகில் இருக்குமே அந்த கோவிலுக்கு தான் போனேன் எனக் கூற உடனே தமிழ் நானும் மேகனாவும் அங்க தான் வந்திருந்தோம் என கூற உடனே சரஸ்வதி எத்தனை மணிக்கு என கேட்க லஞ்ச் முடிச்சுட்டு வந்தோம் என தமிழ் கூற உடனே சரஸ்வதி நமச்சியை பார்க்கிறார் கோபமாக.
நான் அப்பவே சொன்னேன் தமிழ் உங்க வாய்ஸ் கேக்குதுன்னு ஆனா நமச்சி அது வேற யாரோ தமிழ்ல பேசுறாங்க என்ன சொன்னார் என கூறுகிறார். நமச்சி எஸ்கேப் ஆகி வெளியே செல்கிறார் அந்த சமயத்தில் மேகனா தமிழைத் தேடி வருகிறார். ஆனால் சரஸ்வதி குளிப்பதற்கு சென்று விடுகிறார். இதனால் தமிழுக்கு மேகனா தேங்க்ஸ் சொல்லுகிறார் ஸ்வீட் கொடுக்கிறார் நான் தான் இந்த வருட பெஸ்ட் அவார்ட் விருது வாங்குவேன் என்று நினைக்கிறேன் அனைவரும் அது தான் கூறுகிறார்கள் என பேசுகிறார்.
இந்த சமயத்தில் சரஸ்வதி செப்பல் ஹேர் பேண்ட் போட்டோஸ் என அனைத்தையும் நமச்சி மறைத்துக் கொண்டிருக்கிறார்.இதனால் தமிழுக்கு ஏன் இப்படி நெளிகிறாய் என கேட்கிறார் ஸ்வீட் அருமையாக இருப்பதாக கூறுகிறார் இப்படியே சமாளித்து மேகனாவை வெளியே அனுப்புகிறார் நமச்சி அடுத்ததாக சரஸ்வதி வெளியே வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாளை நடக்கும் பங்க்ஷன்க்கு இவர்களை கூப்பிட்டு விட்டு சென்றுள்ளார்.
மற்றொரு பக்கம் அர்ஜுன் இவங்க தமிழுக்கு கல்யாணம் ஆனதை எதுக்காக மறைச்சிருக்காங்க இதுல ஏதோ ஒரு குழப்பம் இருக்கு நாம தமிழ் வேலையை கண்டிப்பா கெடுத்து ஆகணும் என கூறிக் கொண்டிருக்கிறார் அதற்காக நாளை நடக்கும் பங்ஷனுக்கு நாம் போகிறோம் தமிழ் வேலையை கெடுக்கிறோம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நாள் பங்க்ஷன் நடைபெறுகிறது அப்பொழுது சாதித்தவர்களுக்கு விருது கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வருடம் பெஸ்ட் பிசினஸ் அவார்ட் என மேக்னாவை அழைக்கிறார்கள். இதனால் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் உடனே மேகனா மேடைக்கு சென்று என்னுடைய வெற்றிக்கு தமிழ் தான் காரணம் அவர் கொடுத்த ஐடியா தான் இன்று நான் பரிசை வாங்குகிறேன் எனக் கூறுகிறார்.
அதேபோல் சரஸ்வதியும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.