Thamizhum Saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் கொடுத்த ஐடியாவால் மேக்னாவின் சோப்பு கம்பெனி விளம்பரம் இரண்டு மடங்காக உயர்ந்தது அது மட்டும் இல்லாமல் இரண்டு மடங்கு ஷேர் கிடைக்கும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் மேகனா தன்னுடைய சந்தோஷத்தை மாமாவிடம் வெளிப்படுத்துகிறார். இதனை தொடர்ந்து உடனே தமிழ் இடம் பேச வேண்டும் என போன் பண்ணி பேசுகிறார்.
அப்பொழுது தமிழிடம் நீங்க கொடுத்த ஐடியா ஒர்க்கவுட் ஆகிவிட்டது இதுக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என புகழ்ந்து பேசுகிறார் அதே போல் தமிழும் புகழ்ந்து பேசிவிட்டு பிறகு சரஸ்வதி இடம் வந்து நான் சொன்ன ஐடியா பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம் அதற்காக புகழ்ந்தார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்.
பிறகு மேகனா பற்றி சரஸ்வதி இடம் தமிழ் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் அடுத்த காட்சியில் மேக்னா ஆபீஸ்க்கு தமிழ் மற்றும் சரஸ்வதி போவதற்கு கிளம்பு கொண்டிருக்கும் பொழுது நமச்சிவந்து சரஸ்வதி போனால் விஷயம் தெரிந்து விடும் என தடுத்து நிறுத்துகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மேக்னாவின் மாமா இருவரும் ஆபிசுக்கு வருகிறார்கள் அப்பொழுது தமிழுக்கு அனைவரும் கைத்தட்டுகிறார்கள் நீங்கள் சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகிவிட்டது நாங்க கூட டவுட்ல தான் இருந்தோம் ஆனா இந்த அளவு ஒர்க் அவுட் ஆகிவிட்டது என பேசுகிறார்கள்.
மேக்னா ஆபீஸ் கேபினில் உட்கார்ந்த மாறி புகழ்ந்து தள்ளுகிறார்கள். அந்த சமயத்தில் தமிழ் பொழப்பை கெடுப்பதற்காக அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமா மேக்னா ஆபீசுக்கு வந்துள்ளார்கள் அப்பொழுது அங்கு இருக்கும் ரிசப்ஷன் லிஸ்ட் மேக்னாவிடம் போன் பண்ணி தமிழின் ரிலேடிவ் வந்துள்ளார்கள் உங்களை பார்க்க வேண்டுமாம் என பேசுகிறார்.
அப்பொழுது மேக்னா தமிழிடம் யார் இவர்கள் என கேட்க இவ என் தங்கச்சியோட புருஷன் என் கம்பெனியை எரிச்சதுக்கு காரணமே இவன்தான் இப்ப ஏதாவது சொல்லி நீங்க எனக்கு கம்பெனி கொடுக்கமா இருப்பதற்கு ஐடியா பண்ணிக்கிட்டு இருக்கான் என பேசுகிறார். உடனே மேகனாவின் மாமா விஷயம் தெரிந்தால் தமிழுக்கு திருமணம் ஆனது தெரிந்துவிடும் என நான் போய் விரட்டி விட்டு வருகிறேன் என அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமாவை நாயை விரட்டுவது போல் கம்பெனியை விட்டு விரட்டுகிறார் மேக்னாவின் மாமா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.