விடா கருப்பு.. பெங்களுருக்கே சென்று தமிழுக்கு ஆப்பு வைக்கபோகும் அர்ஜுன்.! கடைசியில் பல்பு தான் வாங்கபோற மாப்புள .

Thamizhum saraswathiyum today episode : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி கோதையிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உள்ளே வராமல் நமச்சிப் பார்த்துக் கொள்கிறார். அந்த சமயத்தில் தமிழ், மேக்னா, மேக்னாவின் மாமா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தமிழுக்கு திருமணமானதை மறைக்க வேண்டும் என மேக்னாவின் மாமா ஆபிஸ் போய்  பேசிக் கொள்ளலாம் என கூறுகிறார்.

உடனே நமச்சி சரஸ்வதி இருவரையும் ஹோட்டலில் விட்டு விட்டு நான் ஆபீஸுக்கு வருகிறேன் நீங்க ரெண்டு பேரும் காரில் செல்லுங்கள் எனக் கூறி விடுகிறார். வேற வழி இல்லாமல் தமிழும் சரி என ஒப்புக்கொள்கிறார். தமிழ் மேகனாவுடன் ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு மேகனா தன்னை பரபரப்பாக காட்டிக் கொள்கிறார் இதனைப் பார்த்து தமிழ் இம்ப்ரஸ் ஆகிறார்.

நம்ப பசங்க எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாத்தீங்களா… என்ன ரஷ்மிகா மேடம் சிக்கி கிட்டிங்களே இப்படி

அதுமட்டுமில்லாமல் 30 பிசினஸையும் ஒரே ஆளாக சமாளிக்கிறார் என பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் தமிழ், சாப்பிட கூட நேரம் இல்லாமல் மேக்னா பிசினஸை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் அந்த பக்கம் அர்ஜுனுக்கு தமிழ் பெங்களூர் சென்று இருப்பது தெரிந்து விடுகிறது உடனே தன்னுடைய மாமாவிடம் பெங்களூருக்கு இரண்டு டிக்கெட்டை போட சொல்கிறார்.

உடனே ராகினி எதற்காக பெங்களூர் போகிறீர்கள் என கேட்க தமிழ் அந்த ஆர்டரை முடிப்பதற்காக வேறு ஒரு கம்பெனியை பார்க்கப் போகிறார் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால் தான் அந்த ஆர்டர் நமக்கு கிடைக்கும் ஏனென்றால் நிறைய முறை நான் ஆர்டர் கொடுத்தவரிடம் பேசிப் பார்த்து விட்டேன். அவர்கள் எதற்கும் அசைவது போல் தெரிவதில்லை.

உங்க அண்ணன் தமிழ் எல்லாரிடமும் ஆர்டர் கொடுக்கக் கூடாது என சொல்லி வைத்து விட்டார் போல யாருமே ஆர்டர் கொடுக்கவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ராகினியும் அண்ணன் ஏன் இப்படி நடந்துக்கிறார் இவ்வளவு சீப்பா நடந்துக்கிறார்ன்னு தெரியல உங்களுக்கு கம்பெனிக்கு எது நல்லதுன்னு படுதோ அதை செய்யுங்கள் என கூறி விடுகிறார்கள் உடனே அர்ஜுனன் பெங்களூர் கிளம்புகிறார்.

தோல்விகளை கண்டு பயப்படாதவர் அஜித் – சைத்ரா ரெட்டி பேச்சு

மேக்னாவின் கம்பெனி சோப்பு கம்பெனியில் மிகவும் நஷ்டம் அடைவதால் ஆளாளுக்கு ஒரு ரீசன் சொல்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஐடியா கொடுக்கிறார்கள் விலையை குறைக்க வேண்டும் என மேக்னாவின் மாமா பையன் கூற அது நம்ம தரத்தை நாமளே குறைச்சிக்கிட்ட மாதிரி ஆகிவிடும் எனக்கூறி விட்டு தமிழ் இடம் ஐடியா கேட்கிறார் தமிழ் லிக்விட் மாதிரி மாற்றி அதனை செயல் செய்யலாம் என கூறுகிறார்.

இந்த ஐடியா புதுசா இருக்கு இதை எப்படியாவது நம்ம செயல்முறை பண்ணனும் இன்னும் ரெண்டு நாள்ல இந்த லிக்விட் மார்க்கெட்டுக்கு வரணும் அதுக்கு உண்டான வேலையை பாருங்கள் என கூறுகிறார். உடனே சாப்பிட போகலாமா தமிழ் என மேக்னா கேட்க இருவரும் சாப்பிட கிளம்புகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.