விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார், அது மட்டும் இல்லாமல் சரஸ்வதியும் தமிழும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் நண்பர் வருகிறார் அவன அடிச்சு மூஞ்சி முகரையை உடைக்க போறேன் என கூறுகிறார் உடனே தமிழ் யாரை என கேட்க அதான் அந்த அர்ஜுனன் தான் எனக் கூறுகிறார் ஏன் என்னாச்சு என கேட்கிறார் தமிழ்.
உடனே தமிழுக்கு லேத்துக்கு கொடுத்த ஓனரை சந்தித்து அர்ஜுன் அதைவிட அதிகமா பணம் தரேன் தமிழ்க்கு கொடுக்கக் கூடாது என பேசியதை கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் கூடவே உங்களுடைய தம்பி கார்த்தியும் பேசியதாக கூறியுள்ளார் இதனால் சரஸ்வதி மற்றும் தமிழ் அதிர்ச்சி அடைகிறார்கள், அப்புறம் என்ன ஆச்சு எனக் கேட்க ஆனால் அந்த ஓனர் காசுக்கு மயங்காமல் அக்ரிமெண்ட் போட்டாச்சு என கூறி அனுப்பி விட்டதையும் தமிழ் நண்பர் கூறுகிறார்.
இதனால் சரஸ்வதி மற்றும் தமிழ் வருத்தப்படுகிறார்கள் இது வசுவுக்கு தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவா என கூறுகிறார்கள்இதெல்லாம் சொல்லாத என தமிழ் கூறி விடுகிறார். அண்ணன் தம்பியை குடும்பத்தில் இருந்து பிரிச்சது பத்தாதுன்னு இப்ப கார்த்தியை தூண்டி விட்டுகிட்டே இருக்கான் அந்த அர்ஜுன் என சரஸ்வதி தமிழிடம் கூறுகிறார் இவனுக்கு சுய புத்தி இல்ல அதனால தான் சொல் புத்தி கேட்டுட்டு இருக்கான் என தமிழ் சரஸ்வதியிடம் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் வசுவின் குழந்தை விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. அதனால் கார்த்தி ஏன் கத்துகிறது என கேட்க தெரியவில்லை என வசு கூறுகிறார் உடனே கோதை கீழே குழந்தை கொண்டு வாங்க என கூற டாக்டரிடம் போகலாமா என கார்த்திக் கேட்கிறார் இல்ல பாத்துக்கலாம் என கூறிவிட்டுபேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனனின் குடும்பம் குழந்தையை சரஸ்வதி தூக்கியதால் தான் இப்படி ஆகிவிட்டது அவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை அதனால் தான் இது போல்ஆகிறது என ஏத்தி விடுகிறார்கள்.
கோதையும் என்னை கேட்காம இனி குழந்தையை வெளியில் தூக்கி கொண்டு போகாதே என கூறி விடுகிறார் ஆனால் கோதையின் கணவர் அர்ஜுன் குடும்பத்தை திட்டுகிறார்கள் பின்பு வசு மாம்பழம் சாப்பிட்டதை கூறுகிறார் அதனால் தான் குழந்தைக்கு இப்படி ஆனது என தெரிந்து கொண்டு நாட்டு வைத்தியம் செய்ய போகிறார்கள். வசு கார்த்தியின் அப்பா அனைவரும் அர்ஜுன் குடும்பத்தை ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என கேட்கிறார்கள் இதெல்லாம் குழந்தையின் நன்மைக்கு தான் என கூறி முடித்து விடுகிறார்கள்.
அடுத்த காட்சியில் சரஸ்வதி சுறா புட்டு செய்து வசுவிடம் கொடுக்க சொல்லி வேலைக்கார பெண்ணிடம் கொடுக்கிறார் உடனே அந்த வேலைக்கார பெண் நடந்த அனைத்தையும் சரஸ்வதியிடம் கூறுகிறார் சரஸ்வதியும் எனக்கு இன்னும் குழந்தை பிறக்காததால் இப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது என வருத்தப்படுகிறார். வீட்டிற்கு வந்த சரஸ்வதி சோகமாக இருப்பதை பார்த்து தமிழ் கேட்கிறார் நடந்த அனைத்தையும் தமிழிடம் சரஸ்வதி கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நான் தூக்கியதால்தான் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கும் என கூற அதற்கு தமிழ் நீ என்ன முட்டாள் மாதிரி பேசுற அப்படியெல்லாம் ஏதும் இருக்காது அந்த அர்ஜுன் குடும்பம் தான் ஏதாவது ஏத்தி விட்டுட்டே இருக்கும் எனக்கு கூறுகிறார் .
அடுத்த காட்சியில் வசு சரஸ்வதிக்கு போன் செய்து அபி அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டார். எனக்காக தான் ஆசை ஆசையா சமைச்ச அதை எடுத்துக்கிட்டு வா எனக் கூற அதற்கு சரஸ்வதி வேணும் சரஸ் எதற்காகவும் என்கிட்ட குழந்தையை கொடுக்காத குழந்தை நல்லா இருக்கணும் நாம தான் கேர்புல்லா இருக்கணும் என கூறி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.