தமிழும் சரஸ்வதியும் முந்தைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதியை பார்ப்பதற்காக குழந்தையை தூக்கி வருகிறார் வசு இதை ஒளிந்திருந்து அர்ஜுனின் மாமா பார்த்துவிட்டு அதை வந்து வீட்டில் இருப்பவரிடம் கூறிவிடுகிறார். அதேபோல் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தி கம்பெனியில் கார்த்தியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் பழையபடி அனைத்து ஷிப்டுகளையும் மாற்ற கூறுகிறார் கார்த்தியிடம் அதற்கு கார்த்தி அதையும் நீங்களே சொல்லிடுங்கள் என கோபமாக கூறுகிறார்.
பிறகு நீ தான் சேர்மன் நாங்க சொல்வதையும் கொஞ்சம் கேட்டுக்கொள் கம்பெனிக்கு தான் நல்லது என கூற உடனே அர்ஜுனை தொழிலாளியை கூட்டி வர கூறுகிறார் கோதை அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் கார்த்தி பழையபடி அனைத்து ஷிப்டுகளையும் மாற்றி விட்டதாக கூற தொழிலாளிகள் அனைவரும் கைத்தட்டி வரவேற்கிறார்கள் இதனால் இன்னும் கடுப்பாகிறார் கார்த்தி.
அடுத்த காட்சியில் கோதை வீட்டிற்கு வருகிறார் அதன் பிறகு வசு மற்றும் அவரின் அம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறார் அதை பார்த்து அனைவரும் கொஞ்சுகிறார்கள். உடனே குழந்தையின் கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து விடுகிறார் கோதை இது என்ன செயின் என்ன கேட்க அதற்கு வசுவின் அம்மா இது நான் போட்டது என பொய் கூறுகிறார் உடனே அர்ஜுனன் மாமா தமிழ் போட்ட செயின் என்று உண்மையை கூறி விடுகிறார்.
அதன் பிறகு வசு எதற்காக மறைக்க வேண்டும் நம்ம ஒன்னும் தப்பு செய்யலையே என நடந்த உண்மையை கூறுகிறார் செயின் தமிழ் போட்டது என்று கூறுகிறார். அதற்கு கார்த்தியின் சகோதரி அவன் எதுக்கு செயின் போடணும் அதை கழட்டு எனக் கூற வசுவுக்கு கோபம் வந்து உனக்கு வேணா அண்ணா வேணாமா இருக்கலாம் ஏன் பையனுக்கு பெரியப்பா கண்டிப்பா வேணும் என கூறிவிடுகிறார். சரஸ்வதி தான் வேலை பார்த்த மெக்கானிக் ஷாப்பிற்கு வருகிறார் அங்கு சரஸ்வதியை பார்த்த மெக்கானிக் வேலை வேணாம்னு சொன்னியே மறுபடியும் ஏன் வந்திருக்க என கேட்க இனிமே வேலைக்கு தான் வரேன் என கூறுகிறார்.
உங்கள் கணவரிடம் கூறி விட்டியா என மெக்கானிக் கேட்க அதெல்லாம் சொல்லிட்டு தான் வரேன் முன்னாடியே சொல்லாததால் தான் கோபப்பட்டார் இப்ப நான் சொல்லிட்டேன் அவரே போக சொன்னாரு ஆனால் மெக்கானிக் ஷாப்பில் இருக்கும் ஒரு பையன் சரஸ்வதியை திட்டிக் கொண்டே இருக்கிறார் பிறகு மெக்கானிக் இங்கே வேலை பாருமா இன்னொரு கடையும் இருக்கு அதையும் பார்த்துக்கலாம் எனக்கூறி விடுகிறார்.
அடுத்த காட்சியில் கார்த்தி அர்ஜுன் இருவரும் தமிழுக்கு லீசுக்கு லேத் கொடுத்த ஓனரை பார்க்க வருகிறார்கள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சி செய்கிறார்கள் ஆனால் கார்த்திக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அர்ஜுன் கார்த்தியை வைத்து இந்த வேலையை செய்கிறார். அங்கு தமிழுக்கு லீசுக்கு கொடுத்த ஓனரை பார்க்க வந்த இடத்தில் உங்க கம்பெனிக்கு நாங்க அவுட்சோர்ஸ் ஆர்டர் கொடுக்கிறோம் அதுக்கு பதில் நீங்க தமிழுக்கு போட்ட அக்ரீமெண்ட் கேன்சல் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் அதனால் கடுப்பான அந்த ஓனர் தமிழ்கிட்ட இருக்கிற நல்ல குணம் உங்களிடம் இல்லையே அந்த நேர்மையால் தான் அவர் முன்னேறாரு உங்களால முன்னேறவே முடியாது என மூஞ்சியில் அடித்தது போல் கூறி விடுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி குழந்தையை பார்த்தது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.