கார்த்தியை கோதையிடம் சிக்க வைத்த அர்ஜுன்.! ஆனாலும் மாப்பிள்ளை பாட்சா பலிக்கல.! தமிழ் எடுத்த அதிரடி முடிவு.! இன்றைய முழு எபிசோட்..

thamizhum-saraswathiyum-may-4
thamizhum-saraswathiyum-may-4

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சந்திரகலா இனி எப்பொழுதும் நான் பழைய சந்திரகலாவ மாற மாட்டேன் என கூற அதற்கு வசு அழுது கொண்டு நீ எப்பவுமே இப்படியே இருமா என கூறுகிறார். நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சிடுமா என வசு அழுது கொண்டே இருக்கிறார். அடுத்த காட்சியில் கோதை இண்டஸ்ட்ரியல்ஸ்  கம்பெனியிலிருந்து பத்து நபர்கள் தமிழ் கம்பெனிக்கு வந்துள்ளார்கள்.

அங்கு நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறி வேலை கேட்கிறார்கள் ஆனால் தமிழ் அங்கிருந்து இங்க வந்தா நான் தான் வேணும்னே கூப்பிட்டது போல அவர்கள் பேசுவார்கள் அந்த பேச்சுக்கு நான் ஆளாக விரும்பவில்லை என கூறுகிறார்.  சண்முகம் நீங்க வேலைக்கு வச்சுக்கலனாலும் பரவால்ல நாங்க வேற கம்பெனிக்கு போகுமே தவிர இனிமே அங்க போக மாட்டோம் என கூற உடனே தமிழ் யோசித்து நில்லுங்கள் அண்ணா எனக் கூறி மறுபடியும் இவர்களை கம்பெனியில் வேலை செய்ய அனுமதிக்கிறார்.

உடனே அவர்களும் வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள் அடுத்த காட்சியில் கார்த்தி ரா மெட்டீரியல் ஸ்டாக் முன்னாடியே வாங்கி வைத்ததால் பல கோடி நஷ்டம் அடைந்துள்ளது இது கோதைக்கு தெரிந்து வீட்டின் நடுவில் நிற்க வைத்து கார்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கிறார் இதுதான் உன்னுடைய படித்த முட்டாள்தனம். கொஞ்சமாவது அனுபவம் இருக்கா உனக்கு இப்படி பண்ணிட்டியே என கூறுகிறார்.

அந்த நேரத்தில் அர்ஜுன் கார்த்தியை சிக்க வைப்பது போல் நான் முன்னாடியே உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் ஆனா கார்த்தி சார் கம்பெனி நல்லதுக்காக தான் செய்கிறார் என்று விட்டுவிட்டேன் எனக் கூற உடனே அர்ஜுனனின் மனைவி இதைத்தான் அன்னைக்கு நீங்க முன்னாடியே சொல்லணும்னு நைட் ஃபுல்லா புலம்பிக்கொண்டு இருந்தீர்களா என கேட்க அதற்கும் கார்த்தியை கோதை திட்டிக் கொண்டிருக்கிறார் உடனே அர்ஜுனன் மாப்பிள்ளை நடந்தது நடந்து போச்சு இனிமே சேர்மன் பதவியில் இருந்து தூக்கவும் முடியும் என கூற அதற்கு அதிர்ச்சடைகிறார்கள் அனைவரும்.

கார்த்தி தான் இனிமேல் சேர்மன் ஆனா நானும் அப்பாவும் கம்பெனிக்கு டெய்லியும் வருவோம் எல்லா முடிவும் நாங்கதான் எடுப்போம் என கூறுகிறார். உடனே அர்ஜுன் நம்ம கம்பெனியில் இருந்த சண்முகம் இப்ப தமிழ் கம்பெனிக்கு போயிட்டாங்க எனக்கூறியவுடன் கோதையின் கணவர் அதிர்ச்சி அடைகிறார் அவர் நம்ம கம்பெனி ஆரம்பிச்சதுல இருந்து இருக்காரு நமக்காக எவ்வளவு பாடுபட்டார் என கார்த்தியை பார்த்து திட்டிக் கொண்டிருக்கிறார்.

இதுல என்ன பண்ணி வச்சிருக்க கார்த்தி என கேட்க கம்பெனி நல்லதற்காக டைம் மேனேஜ்மென்ட் கொஞ்சம் மாத்தி இருக்கார் என அர்ஜுன் போட்டுக் கொடுக்கிறார் இதனால் கோபப்படுகிறார் கோதை அதையும் அர்ஜுன் தமிழ் தான் இது அனைத்திற்கும் காரணம் என தமிழையும் போட்டுக் கொடுக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருக்க உடனே கோதை இனிமே கோதை இண்டஸ்ட்ரீஸ் vs சரஸ்வதி இன்டஸ்ட்ரியல்  என்று பார்த்து விடலாம் என சபதம் போடுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் உட்கார்ந்து கொண்டிருக்க நமக்கு எல்லாமே நல்ல அமைந்து கொண்டு வருகிறது. ஆனால் கோதை இண்டஸ்ட்ரீஸ் ஆளுங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க இனிமே நமக்கு இன்கம் வர ஆரம்பித்து விடும் எனக் கூறிக் கொண்டிருக்க தமிழ் நான் யாரையும் அந்த கம்பெனியிலிருந்து கூப்பிடல அவங்களா வந்தாங்க நான் வேலைக்கு வச்சிக்கிறேன் அவ்வளவுதான்.

அவங்க என்னைக்கு நல்லபடியா பேசி இருக்காங்க இதையும் தப்பா தான் பேசுவாங்க அவங்க பேசினா பேசிட்டு போகட்டும் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் தமிழ்  அந்த நேரத்தில் வசு போன் செய்கிறார் இங்கு என்ன நடக்குது சரஸ்வதி என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது