விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை நகர்ந்து செல்கிறது,. இந்த நிலையில் கடந்த எபிசோட்டில் அர்ஜுன் மற்றும் கார்த்திக் செய்த வேலையால் தமிழ் கம்பெனிக்கு மேலும் சில நபர்கள் சென்று விடுகிறார்கள் இதனால் கோதை அர்ஜுன் மற்றும் கார்த்தியை திட்டிக் கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்த ராகினி கோதையிடம் சண்டை போட்டு அவருக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது அதனால் ராகினி அம்மாவுக்கு நெஞ்சு வலிக்கு காரணம் நீதான் என தமிழ் வீட்டில் சென்று கத்துகிறார். அதுமட்டுமில்லாமல் எங்க குடும்ப நிம்மதியையே கெடுக்கிறது நீங்கதான் என சரஸ்வதி மற்றும் தமிழை பார்த்து ராகினி சண்டை போட்டுவிட்டு வருகிறார். இதனால் தமிழ் மனம் உடைந்து கோவிலுக்கு செல்கிறார். கோவிலுக்கு சென்ற தமிழ் தன்னுடைய அம்மா நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். இதனை தமிழ் அப்பா பார்த்து விடுகிறார்.
வீட்டிற்கு வந்த தமிழ் அப்பா கோதையிடம் மற்றும் அர்ஜுன் குடும்பம் என அனைவரும் இருக்கும் நேரத்தில் தமிழ் உனக்காக வேண்டிக்கொண்டான். என்று கூறிய உடன் கோதையின் கண் கலங்குகிறது கண்ணீரில் இருந்து நீர் வடிகிறது. தமிழ் அப்படியே தான் இருக்கான் மாறவில்லை என கோதையின் கணவர் கூறுகிறார்.. ஆனாலும் ராகினி நீங்க தமிழ அப்படியே வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வச்சுக்கோங்க நாங்க வெளியில போயிடுறோம் என பேசுகிறார் அதனால் கோபமடைந்த கார்த்தி ராகினி என கத்துகிறார்.
இப்பதான் எல்லாம் சரியா இருக்கு மறுபடியும் நீ ஆரம்பிக்கிறாயா என திட்டுகிறார். உடனே கோதை இப்ப அவனுக்கு உடம்பு சரியில்லைன்னா நானும் சாமிகிட்ட வேண்டிப்பேன் அதனால அவன் செஞ்சத நியாயப்படுத்த முடியாது. அவனுக்கும் இந்த குடும்பத்துல இருக்கிற உறவுக்கு முடிஞ்சு போச்சு தேவையில்லாத பத்தி யாரும் பேச வேண்டாம் என கோதை கூறி விடுகிறார். பிறகு வசு சரஸ்வதி இடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி வசுவிடம் அத்தை மாமாவும் எங்களை ஆசீர்வாதம் செய்தது மனசுக்கு நிறைவாக இருக்கிறது என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் வசு தமிழ் மாமா அத்தைக்காக வேண்டிக் கொண்டதை சரஸ்வதிலும் கூறுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி தன்னுடைய மாமாவுக்கு பிரியாணி செஞ்சு கொடுத்து அனுப்புகிறார் கோதையின் கணவரும் திருட்டுத்தனமாக தின்று கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுனன் அக்கா கணவர் பார்த்து விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.