கோதை கம்பேனிக்கு போன தமிழ்..! பொறாமையில் பொங்கும் கார்த்தி மற்றும் அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum saraswathiyum may 19
thamizhum saraswathiyum may 19

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் கோதை இன்டஸ்ட்ரியஸில் இரண்டு மிஷன் வீணானதால் எங்கெங்கோ ட்ரை பண்ணி அதை சரி செய்ய ஆள் கிடைக்கவில்லை. அதனால் கடைசியாக தமிழை வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகிறார்கள் தமிழைக் கேட்க அனைவரும் தயங்குகிறார்கள் வேறு வழி இல்லாமல் கோதையும் தமிழை கூப்பிடலாம் என கூறிவிடுகிறார்.

முதலில் தமிழ் மறுக்கிறார் ஆனால் சரஸ்வதிக்கு ஏதாவது வாங்கி தர வேண்டும் என எண்ணம் வந்ததால் நமச்சி ஐடியா கொடுக்கிறார் பிறகு இருவரும் கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு போகலாம் என முடிவெடுக்கிறார்கள். அதேபோல் நமச்சி போன் செய்து நாங்கள் வருகிறோம் சரி செய்கிறோம் எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்க 30 ஆயிரம் என பேசுகிறார்கள். பிறகு கோதை இண்டஸ்ட்ரீஸ்க்கு எப்பொழுது வருவார்கள் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் நமச்சி இருவரும் கம்பெனிக்கு வருகிறார்கள் அப்பொழுது வேலை செய்யும் நபர்கள் தமிழை ஆரவாரமாக வரவேற்கிறார்கள் அதனை பார்த்து கார்த்தி மற்றும் அர்ஜுன் பொறாமைப்படுகிறார்கள் பிறகு பேரம் பேசுகிறார்கள் தமிழ் 45 ஆயிரம் கொடுத்தால் தான் மிஷினை சரி செய்வேன் எனக் கூற அதற்கு முடியாது என அர்ஜுன் கூற உடனே கார்த்தியின் அப்பா அமைதியா இருங்க ரெண்டு நாள் புரோடக்சன் நின்னுச்சினா என்ன நிலைமை தெரியும் தானே நான் பேசுறேன் என கோதையிடம் போய் கேட்கிறார்.

பிறகு கோதை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் 45 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு மிஷினை சரி செய்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார் தமிழ். நமச்சி நைட்டு வரமாட்டோம் லேட் ஆகும் என கூறி விடுகிறார் அதற்கு முன்பே சரஸ்வதியிடம் சரஸ்வதி காலையில் எப்பொழுது வருவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மையாலுமே கல்யாணம் நாளை மறந்து விட்டார்களா என சரஸ்வதி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் வழக்கம்போல் கல்யாண நாளை மறந்தது போல் சரஸ்வதியிடம் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் கடைசியாக கல்யாண நாளை மறக்கவில்லை என சரஸ்வதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அதுமட்டுமில்லாமல் டிரஸ் அனைத்தையும் வாங்கி கொடுக்கிறார் சரஸ்வதியும் தமிழுக்கு வாங்கிய பைக்கை காட்டுகிறார். இந்த நிலையில் சரஸ்வதி இந்த பைக்கை வாங்க தாலி செயினை அடகு வைத்திருப்பார் அதை பார்த்த தமிழ் அதை மீட்டுக் கொண்டு சரஸ்வதிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்.

இன்னைக்கு ஒரு இடத்துக்கு போறோம் அங்க தான் சாப்பிடுகிறோம் என்ன சர்ப்ரைஸ் ஆக சரஸ்வதி கூற எங்கு என தமிழ் கேட்டுக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.