தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் சரஸ்வதி தன்னுடைய திருமண நாள் என்பதால் தமிழ் வாழ்த்து கூறுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ் வேலை பிசியில் எதையும் கண்டு கொள்ளாமல் ஏதேதோ கூறுகிறார் இதனால் சரஸ்வதி கடுப்பாகிறார். பிறகு உண்மையாலும் மறந்துவிட்டார் என எண்ணி சரஸ்வதி கிளம்புகிறாள் தமிழும் கிளம்பி விடுகிறார்.
தமிழ் பைக் இல்லாமல் லிப்ட் கேட்டு நிற்பதை பார்த்த சரஸ்வதி எப்படியாவது நாளை திருமண நாள் என்பதால் பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை போல் அடுத்த காட்சியில் தமிழ் லிப்ட் கேட்டு கம்பெனிக்கு வருகிறார் அப்பொழுது நமச்சிவிடம் சரஸ்வதி ஏதோ சொல்ல வந்தால் ஆனால் என்னன்னு தெரியவில்லை என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சரஸ்வதிக்கு பிறந்த நாளா என நமச்சி கேக்க இல்லை எனக் கூறுகிறார் தமிழ்.
பிறகு இன்னைக்கு என்ன நாள் என போனை எடுத்து பார்க்கும் பொழுது நாளைக்கு எனக்கு திருமண நாள் அதனால்தான் சரஸ்வதி ஏதோ சொல்ல வந்தால் ட்ரெஸ் எடுக்கலாமான்னு கேட்டா இதை கூட மறந்துட்டேனே என தமிழ் வருத்தப்படுகிறார். எத மறந்தாலும் மறக்கலாம் இத நீ எப்படி தமிழ் மறந்த இந்த பொண்டாட்டிங்க பிறந்தநாளையும் கல்யாண நாளையும் மறந்தா என்ன நடக்கும் தெரியுமா என எக்ஸாம்பிள் காண்பிக்கிறார் நமச்சி.
பிறகு தமிழ் சரஸ்வதிக்கு போன் அடித்துக் கொண்டே இருக்கிறார் ஆனால் சரஸ்வதி ஃபோனை எடுக்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறார். பிறகு சரஸ்வதி தான் வேலை பார்க்கும் ஓனரிடம் ஒரு வண்டி வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் என கேட்கிறார் 90 ஆயிரம் வரும் என கூற உடனே சரஸ்வதி அட்வான்ஸ் கிடைக்குமா சார் என கேட்க நீ டெய்லியும் சம்பளம் வாங்கிக்கொள்கிறாயேமா எப்படி என்கிட்ட அட்வான்ஸ் அவ்வளவு பணம் இல்லையே எனக் கூறுகிறார்.
பிறகு இஎம்ஐ பைக் வாங்க வேண்டும் நாளைக்கு கிடைக்கும்படி நீங்கள் செய்யுங்க நான் பணம் அரேஞ்ச் பண்றேன் என கூறுகிறார். அந்த பக்கம் சரஸ்வதிக்கு தமிழ் ஏதாவது செய்ய வேண்டும் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என பிளான் செய்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் கோதை இண்டஸ்ட்ரியல் இரண்டு மெஷின்கள் ரிப்பேர் ஆனதால் மெக்கானிக் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவரால் பார்க்க முடியவில்லை எனக் கூறி விடுகிறார்.
உடனே வெளியூரிலிருந்து மெக்கானிக் வரவேண்டும் என கூற அதற்கு நாளை ஆகிவிடும் அதற்குள் டெலிவரி செய்ய வேண்டும் எப்படி டெலிவரி செய்ய முடியும் ஏற்கனவே உமாபதி சாரோட காண்ட்ராக்ட் போயிடுச்சு இப்ப இதுவும் போச்சுன்னா நம்ம எப்படி சமாளிக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் இதை தமிழ் சார் தான் சரி செய்வார் அவரை வேணால் கூப்பிடலாம் என கூற ஆனால் தமிழுக்கு போன் செய்த பொழுது அவர் வர முடியாது என மறுத்து விடுகிறார் நேரம் பார்த்து தமிழ் பழி வாங்கியது போல் தெரிகிறது அதுமட்டுமில்லாமல் கோதை இதுவே பழைய தமிழா இருந்தால் இந்நேரம் வந்து இருப்பான் எனக்கோதை கூறுகிறார் எப்படிங்க அவனை நம்புறது என கோதை தன்னுடைய கணவரிடம் கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.