கார்த்தி, அர்ஜுனை நடு வீட்டில் நிற்கவைத்து நாக்கை பிடுங்குவது போல் கேள்விகேட்ட கோதை மற்றும் வாசு.! மாமனாருக்கு வந்த சந்தேகம்.! பரபரப்பான தருணம்

thamizhum-saraswatiyum-may-17
thamizhum-saraswatiyum-may-17

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் திருட சொன்னது அர்ஜுன் தான் என கண்டுபிடித்து கோதை இண்டஸ்ட்ரியஸ்க்கு வருகிறார்கள் உமாபதி கோதையிடம் உங்க கம்பெனியிலிருந்து இப்படி பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல உங்ககிட்ட இருக்கிற நேர்மை அப்படியே தமிழ் கிட்ட மட்டும் தான் இருக்கு வேற எந்த புள்ள கிட்டயும் உங்க பிள்ளை கிட்ட கிடையாது என சொல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கோதை இண்டஸ்ட்ரியல்சில் கொடுத்த அனைத்து அக்ரிமண்டும் நான் ரத்து செய்கிறேன் என உமாபதி சார் கூறிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் பத்தாயிரம் ஸ்பேர் பார்ட்ஸ் எக்ஸ்ட்ரா செய்ய வேண்டும் என தமிழுக்கு புதிய ஆர்டரையும் கொடுக்கிறார். இது அர்ஜுன் கார்த்திக் கோதை அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் நமச்சி  தமிழின் நல்லா மனசுக்கு நல்லது தான் நடக்கும் என கூறுகிறார் அதே போல் சரஸ்வதியும் இப்பயாவது அர்ஜுன பத்தி நீங்க புரிஞ்சுக்கோங்க அத்தை என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் கடைசியாக உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க நான் பாட்டுக்கு என வழியில  போயிட்டு இருக்கேன் தேவையில்லாம என் வழியில் குறுக்க வராதீங்க இதுவரைக்கும் அமைதியா அடங்கி போற தமிழ தான் பார்த்திருப்பீங்க இன்னொரு என்னோட முகத்தை பார்தீங்கனா தாங்க மாட்டீங்க என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் நமச்சி தமிழிடம் கொடுக்கிற தெய்வம் கூரை பிச்சிட்டு கொடுக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி நல்லவங்க இருக்கிற வரைக்கும் யாரு நமக்கு கெடுதல் பண்ணாலும் நம்ம நல்லா தான் இருப்போம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் சரஸ்வதி தான் திருடியதை சரஸ்வதி தான் கண்டுபிடிச்சா அவளுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த காட்சியில் கார்த்தி மற்றும் அர்ஜுனை நிற்க வைத்து கோதை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அது மட்டும் இல்லாமல் நீங்க படிச்சது இதுதானா அடுத்தவங்க வளர்ச்சியை கெடுக்கிறதும் அடுத்தவங்கள வாழ விடாமல் அடிக்கிறதும் இதுதான் படிச்சீங்களா. அர்ஜுன் கோல்டு மெடல் எல்லாம் வாங்கினேன்னு சொன்னீங்களே இப்படித்தான் பிராடுத்தனம் பண்ணி கோல்டு மெண்டல் வாங்கினீங்களா என கேட்கிறார்.

கோதை கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் கார்த்திக் மற்றும் அர்ஜுன் பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள். அடுத்தவங்க கம்பெனியில் இருந்து திருட சொல்ற அளவுக்கு எங்கிருந்து வந்தது இந்த குறுக்கு புத்தி என கோதையின் கணவர் கேட்கிறார். வசுவும் கார்த்தியை பார்த்து உங்க கிட்ட இருந்து நான் இந்த மாதிரி எதிர்பார்க்கல என கேட்க உடனே கார்த்தி இதற்கெல்லாம் நான் காரணம் கிடையாது நான் செய்ய வேண்டாம் என்று தான் சொன்ன அர்ஜுன் தான் என சொல்லும் பொழுதே கோதை ரெண்டு பேரும் சேர்ந்து தானே செஞ்சீங்க என திட்டுகிறார்.

இதே மாதிரி பண்ணுனா கார்த்தி உன்ன சேர்மேன் பதவியில் இருந்து தூகிவிடுவன் என கூறுகிறார் கோதை. தப்பு பண்ண என் புள்ளையவே வீட்டை விட்டு துரத்தினேன் இன்னொரு டைம் இத மாதிரி பண்ணுனீங்கன்னா உங்களுக்கு இந்த வீட்டிலேயே இடம் கிடையாது என கோதை கத்தி விடுகிறார். உங்களால் இப்ப நான் தல குனிஞ்சு உமாபதி சார் முன்னாடி நின்னோம் இவ்வளவு வருஷம் கட்டி காப்பாத்துனேன் மானம் மரியாதை எல்லாம் போச்சு என கோதை கார்த்தியையும் அர்ஜுனனையும் பார்த்து திட்டுகிறார்.

கோதையிடம் கோதையின் கணவர் தமிழ் தப்பு பண்ணி இருக்க மாட்டான். இந்த விஷயத்திலேயே மாப்ள தான் தப்பு பண்ணி இருக்காரு இதுக்கு முன்னாடியும் மாப்பிள்ளை தான் ஏதோ பண்ணி இருக்காரு அதை நாம் எப்படியாவது கண்டுபிடிக்கணும் எனக் கூற, அதெல்லாம் முடியாது தமிழ் தான் அந்த தப்பா செஞ்சிருப்பான் இது வந்து பிசினஸ் ஸ்டேட்டர்ஜிக்காக விளையாட்டுத்தனமா பண்ணிட்டாங்க தமிழ் போகும்போது நம்மளை எப்படி பார்த்தா உங்க கம்பெனிய ஒன்னும் இல்லாம பண்ற மாதிரி பார்க்கிறான் அவன் கண்டிப்பா தப்பு பண்ணி இருப்பான் என கோதை கூறுகிறார்.

ஆனால் தமிழின் அப்பா என் உள் மனசு உறுத்தி கொண்டே இருக்கிறது கண்டிப்பா தமிழ் தப்பு பண்ணிருக்க மாட்டான் என கூறிவிடுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி டீ போட்டுக் கொண்டு தமிழிடம் கொடுத்து ஏதாவது சொல்ல தோணுதா என கேட்கிறார் ஆனால் தமிழ் டீ குடிச்சியா என கேட்டு விடுகிறார் ஏதோ ஒரு நல்ல நாள் சரஸ்வதிக்கு ஆனால் சரஸ்வதி தமிழிடமிருந்து ஏதாவது சொல்வார் என எதிர்பார்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.