உதவி செய்ததை மறந்து வாய்க்கு வந்தபடி பேசும் அர்ஜுன் குடும்பம்.! சரஸ்வதிக்கு வக்காலத்து வாங்கும் சந்திரகலா.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் வசுவின் மாமனார் ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புறேன் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என கூறுகிறார் உடனே வசுவின் மாமியார் ஆமாங்க வசு கண்ணு முழிச்சதும் பார்த்துட்டு போய் அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன் என கூறுகிறார்.

இந்த சமயத்தில் அர்ஜுனனின் அக்கா, அம்மா என அனைவரும் சரஸ்வதி இங்கே இருந்தால் நம்மளால எதுவும் செய்ய முடியாது என சரஸ்வதி டார்கெட் பண்ணி பேசுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழும் போன் பண்ணி நலம் விசாரிக்கிறார் என அவரையும் அர்ஜுனனின் அக்கா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

உடனே வாசுவின் மாமனார் எந்த நிமிஷத்துல எந்த பேச்ச பேசிட்டு இருக்கீங்க சரஸ்வதில்லன்னா இன்னைக்கு ரெண்டு உசுரு போயிருக்கும். கடவுள் எல்லா நேரத்துலயும் நேர்ல வர மாட்டார். இது மாதிரி யாராவது நல்லவங்களை அனுப்பி தான் வைப்பார் என சரஸ்வதிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார் அர்ஜுனும் அவருடைய அக்காவை  திட்டுவது போல் நடிக்கிறார்.

உடனே வசூவின் அம்மா அர்ஜுனின் குடும்பத்தை கிழித்து தொங்க விடுகிறார். உங்களுக்கு சரஸ்வதி மேல் கோபம் இருந்தால் இப்பதான் காமிப்பீங்களா என திட்டி தீர்க்கிறார் அது மட்டும் இல்லாமல் மெண்டல் பிராப்ளம் இருக்குன்னா அர்த்தம் என அர்ஜுன் அக்காவை பார்த்து கூறுகிறார். அடுத்ததுகார்த்தியின் தங்கையும் சரஸ்வதியை போக வேண்டி தானே கேட்கிறார் அதற்கு கோபப்பட்ட வசுவின் மாமனார் கத்துகிறார். அத்துடன் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

அடுத்த நிமிடம் நர்ஸ் வந்து கண்ணு முழித்து விட்டார் என கூறுகிறார். உடனே அனைவரும் வசுவை பார்க்க போகிறார்கள் அங்கு வசு பீலிங்ஸ் ஆக பேசுகிறார்  வசுவின் அம்மாவும் சாரி கேட்கிறார் உடனே நடந்த அனைத்தையும் வசுவின் அம்மா கூறுகிறார். ரத்தம் கொடுத்ததை கூறியவுடன் வசு கண் கலங்குகிறார். உடனே சரஸ்வதி எங்கே என கேட்க வசுவின் அம்மா அழைத்துக் கொண்டு காட்டுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் தன்னுடன் வேலை செய்யும் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி தருகிறார். நான் பெரியப்பா ஆகிட்டேன் தம்பிக்கு குழந்தை பிறந்திருக்கு என சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். உடனே எனக்கு குழந்தையை பாக்கணும் போல இருக்கு எனக்கு தமிழ் தன்னுடைய நண்பரிடம் கூறும் பொழுது அவர் உடனே வீடியோ கால் பண்ணு பேசு எனக் கூறுகிறார்.

உடனே தமிழ் வீடியோ கால் செய்து சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் வசுவிடம் குழந்தையை பார்க்கவா என கேட்க கண் கலங்குகிறார்கள் பின்பு குழந்தையை பார்த்து தமிழ் கொஞ்சுகிறார் வசு நீங்க குழந்தைய நேர்ல பார்க்க வர மாட்டிங்களா மாமா என் குழந்தைய தூக்கி ஆசீர்வாதம் பண்ண மாட்டீங்களா என கேட்கிறார். உடனே எல்லாத்துக்கும் காலம் வரும் கண்டிப்பா வருவேன் என்பது போல் கூறி விடுகிறார்.

வசுவின் அம்மா தான் நடந்து கொண்டதை உணர்ந்து எனக்கு பாசம்னா என்னன்னு சரஸ்வதி புரிய வச்சுட்டா தமிழும் புரிய வச்சிட்டான் என ஃபீல் பண்ணி பேசுகிறார். உடனே குழந்தை அழகாக இருக்கிறது என தமிழ் கூற அவரை நண்பர் பெரியவங்க பழமொழி சும்மாவா சொல்லி இருக்காங்க தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என கூறுகிறார். அதனால் தமிழ் ரத்தப் பந்தத்தில் ஒரு உயிர் பிறந்திருக்கு அது கிட்ட யாராவது கோபத்தை காமிப்பாங்களா என கூறிக் கொண்டிருக்கிறார்.

உடனே அவரை நண்பர் அப்படியே எல்லாம் ஒன்று சேர்ந்துடலாம் என கூற உடனே தமிழ் கோபப்பட்டு நான் அந்த வீட்ல கால் அடி எடுத்து வைக்க மாட்டான் யார் மூச்சிலேயும் முழிக்க மாட்டேன் எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாம கடைசிவரை எனக்கு இருக்கிறது சொந்தம் நீயும் சரஸ்வதியும் தான் எனக் கூறுகிறார் தமிழ். உடனே ஹாஸ்பிடல் அனைவரும் ஒன்றாக நிற்க அதற்கு நர்ஸ் ஏன் இவ்வளவு பேர் நிக்கிறீங்க எல்லோரும் வெளிய போங்க என கூற அனைவரும் போகிறார்கள் அங்கே சரஸ்வதி கிளம்புகிறேன் எனக் கூற அனைவரும் தேங்க்ஸ் சொல்கிறார்கள் ஆனால்  மாமியார் மட்டும் பேசாமல் நிற்கிறார் அதற்கு மாமனார் ஏதாவது பேசி என கூற  பின்பு பேசுகிறார்.

நீ வெறும் உதவி மட்டும் செய்யல வரமே கொடுத்திருக்க இது எல்லாத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தைல சொன்னா பத்தாது ஆனா வேற என்ன சொல்றதுன்னு தெரியல நன்றி எனக் கூறுகிறார் உடனே சரஸ்வதி நீங்க பேசுனதே எனக்கு பெருசு வசுவ பாத்துட்டேன் குழந்தையும் பாத்துட்டேன் எனக் கூறவே அதுவே நிறைவா இருக்கு நான் எதையும் எதிர்பார்த்து செய்யல என நான் கிளம்புகிறேன் அத்தை என கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version