அர்ஜுன் செய்த சூழ்ச்சியால் தமிழுக்கு அடிக்க போகும் அதிர்ஷ்டம்.! என்ன மாப்ள மறுபடியும் பல்பு வாங்க ரெடியா..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum-saraswathiyum-june7
thamizhum-saraswathiyum-june7

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நமச்சி சோகமாக தமிழ் வீட்டில் அமர்ந்திருக்கிறார் ஏதோ ஒரு சிந்தனையில் தமிழ் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். மாடியில் இருந்து குதித்து விடுகிறாயா என தமிழ் கேட்க குதிக்கிறேன் என கூறுகிறார், இதற்கு காரணம் அபிக்கு மாப்பிள்ளை பார்ப்பதை நமச்சி கூறுகிறார் அதற்கு சரஸ்வதி உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே என கேட்கிறார் உடனே தமிழ் ஓகே என சொல்லு கல்யாணம் பண்ணி வச்சுக்கலாம் என கூறியவுடன் நமச்சி சந்தோஷமாக இருக்கிறார்.

அசோசியேஷன் எலக்ஷனில் கோதை நிற்கவில்லை என்பதை நமச்சி கூறுகிறார். அதனால் தமிழ் நிற்கலாம் என முடிவு செய்து உமாபதி இடம் கூறி விடுகிறார், உமாவதியும் சந்தோஷமாக இருக்கிறார். அடுத்த காட்சியில் கார்த்தி கோதை நடேசன் மூவரும் ஆஃபீஸில் நடந்து பேசிக்கொண்டு வரும் பொழுது அர்ஜுன் வேக வேகமாக ஓடிவந்து தமிழ் சார் இப்படி செய்வார் என்று நினைக்கவே இல்லை அவர் உங்களுக்கு போட்டியாக நிற்கிறார் என கூறுகிறார்.

ஆனால் நடேசன் கண்டிப்பாக அப்படி வாய்ப்பே இருக்காது ஏனென்றால் எனக்கு தெரிஞ்சவங்க அப்படி சொன்னதாக கூற அதற்கு அர்ஜுன் கார்த்தியிடம் அசோசியேஷன்  நம்பர் குரூப்பில் நீ இருக்க தானே கார்த்தி நீயே பாரு அபிசியல் அனவுன்ஸ்மென்ட் பண்ணி இருக்காங்க எனக் கூற கார்த்தியும் பார்த்துவிட்டு ஆமாம் என கூறுகிறார் உடனே இது எல்லாம் நம்முடைய கம்பெனிக்கு போட்டியாக தான் இது போல் தமிழ் செய்கிறார் எனவும் தமிழ் வேணும் என்றே தான் நிக்கிறார் எனவும் அர்ஜுன் ஏத்தி விடுகிறார்.

இதனால் கோதை கோபமாகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் நீங்கள் எலக்ஷனில் இருந்து வாபஸ் வாங்கி விடுங்கள் ஏனென்றால் தமிழ் சாருக்கு தான் அதிகமாக சப்போர்ட் இருக்கிறது தேவையில்லாம எதுக்கு தோத்துகிட்டு என இன்னும் கோதையை ஏத்தி விடுகிறார் உடனே நடேசன் பேசாம நீ தான் ஓய்வு பெற வேண்டும் என்று சொன்னல்ல வாபஸ் வாங்கி விடு எனக் கூற அதற்கு கோதை வாக்கு கொடுத்தது வாக்கு கொடுத்தது தான் ஜெயிக்கிறோம் தோக்கிறோம் என்பது முக்கியம் இல்ல கண்டிப்பா நிக்கிறேன் என கோபத்துடன் கூறி விடுகிறார்.

அர்ஜுன் போட்ட சூழ்ச்சியில் தமிழும் சிக்கிக்கொண்டார் ஆனாலும் தமிழ் இந்த எலக்ஷனில் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அடுத்த காட்சியில் நமச்சி   தமிழ் ஆபீஸில் கோதை தமிழை எதிர்த்து நிற்பதாக கூறுகிறார் அதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் உமாபதி சார் அவர்களிடம் போன் பண்ணி கூறி விடுங்கள் என நமச்சிக் கூற அதற்கு வேண்டாம் நேரில் பார்த்து சொல்லிவிடலாம் என உமாபதி சார் ஆபீஸிற்கு செல்கிறார்கள்.

அங்கு போய் உமாபதி சாரிடம் எலக்ஷனில் நிற்கவில்லை எனக் கூற அதற்கு உமாபதி சார் அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் உங்க கம்பெனிக்கு எத்தனை ஆர்டர் இருக்கிறது இந்த ஆர்டர் கேன்சல் ஆனால் உங்க நிலைமை என்ன என யோசித்துப் பார்த்தீர்களா உங்களால் எப்படி உங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என அனைத்தையும் யோசித்துப் பார்த்தீர்களா என எடுத்து புரிய வைக்கிறார்.

இதனால் தமிழ் யோசித்து முடிவு செய்து நான் இந்த எலக்ஷனில் நிற்கிறேன் என வாக்குறுதி கொடுத்து விடுகிறார் அதனால் உமாபதி சாரும் சந்தோஷத்தில் இருக்கிறார். பிறகு பைக்கில் வந்து கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் நக்கலாக தமிழ் மற்றும் சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பதவிக்கு போட்டி போடுகிறீர்களே என அர்ஜுன் கூற அதற்கு சரஸ்வதி உன்ன மாதிரி பதவிக்கு போட்டி போடுறவங்க கிடையாது அதுவா தேடி வருவத தான் நாங்க எடுத்துக்கிறோம் என கூறுகிறார்.

அத்தையை எதிர்த்து நீங்க போட்டி போடுறீங்களா என அர்ஜுன் இன்னும் கோபமாக பேசுகிறார் தமிழ் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவே அர்ஜுன் பேசி கொண்டிருக்கிறார். தமிழ் இந்த எலக்ஷனில் ஜெயிப்பதால் அர்ஜுன் மூக்கு உடைய போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.