தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் இன்னைக்கு சமைக்க வேண்டாம் வெளியில சாப்பிடலாம் என்பது போல் கூற உடனே நமச்சி அதெல்லாம் வேணாம் இன்னைக்கு கறி எடுத்து வீட்டிலேயே சமைச்சு சாப்பிடலாம் என கூறுகிறார். அதற்கு சரஸ்வதி ஆமாம் அண்ணா நீங்க எடுத்துட்டு வாங்க நம்ம சமைத்து சாப்பிடலாம் என கூற உடனே ஹவுஸ் ஓனர் வருகிறார். தமிழ் ஜெயித்ததற்கு வாழ்த்து கூறிவிட்டு நீங்க சொன்ன மாதிரியே சபதம் போட்ட மாதிரியே ஒன்னு ஒன்னா நிறைவேத்துறீங்க.
கண்டிப்பா நீங்க ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளியா மாறுவீங்க அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் என்பது போல் கூறுகிறார். பிறகு உங்கள கேட்காம நேம் போடு வெச்சுட்டேன் சாரி அண்ணா என சரஸ்வதி சொல்ல அதற்கு இந்த நேம் போர்டு இருக்கிறது என் வீட்டுக்கே பெருமை தான் என சொல்லிவிட்டு செல்கிறார். சரஸ்வதி நாம அங்கிருந்து வந்ததுக்கு பிறகு சொந்த கால நினைக்கிறோம் நிறைய நல்ல மனுஷங்களை சம்பாதித்திருக்கோம் உமபதி சார், ஹவுஸ் ஓனர் என சொல்லிக்கொண்டே போகிறார்.
ஆமாம் என தமிழும் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நீங்க ரெண்டு பேரும் இருக்கிற வரைக்கும் என்னை யாராலும் அசைக்க முடியாது நான் இன்னும் மேலே மேலே சென்று கொண்டே இருப்பேன் என்பது போல் கூற நமச்சி பீல் பண்ணுகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் அவருடைய அக்கா வீட்டுக்காரர் இருவரும் பேசிக் கொண்டு போகும்பொழுது நம சபதம் போட்டிருக்கும் இப்ப கம்பெனிக்கு போகலாமா என கேட்க அதற்காக கம்பெனிக்கு போக முடியாம இருக்க முடியாது என அர்ஜுன் கூறிக் கொண்டிருக்கிறார்.
அர்ஜுன் கம்பெனிக்கு போகும் நேரத்தில் டிராபிக் கான்ஸ்டபிள் நிற்பது போல் தமிழ் கம்பெனிக்கு வெளியே நிற்கிறார் ஆனாலும் அர்ஜுன் உள்ளே போக முயற்சிக்கிறார் அந்த சமயத்தில் தமிழ் அவரை தடுத்து நிறுத்தி சோத்துல உப்பு போட்டு தானே தராங்க அப்படித்தானே சாப்பிடுற போட்ட சபதத்தில் நான் ஜெயித்தால் இந்த பக்கமே வரக்கூடாது அப்படியே ஓடிடு இல்லன்னா அவ்வளவுதான் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் என்ன மீறி உள்ள போ பாக்கும் என தமிழ் கெத்தாக நிற்க அர்ஜுனனின் மாப்பிள்ளை நம்மளால அடி வாங்க முடியாது வா ஓடிடலாம் என இருவரும் போகிறார்கள்.
அடுத்த காட்சியில் சரஸ்வதி வேலை செய்யும் மெக்கானிக் ஷெட்டை விற்பதற்கு ஓனர் முடிவு செய்கிறார் அந்த சமயத்தில் சரஸ்வதி வர அவரிடம் நீ தான் நல்லா தொழில் கத்துக்கிட்ட இந்த மெக்கானிக் செட்டை விலைக்கு வாங்கிக்கோ என கூறுகிறார் திடீர்னு விலைக்கு வாங்க சொன்னீங்கன்னா நான் யோசிக்கணும் தமிழ் கிட்ட சொல்லனும் என கூறுகிறார் நீ கேட்டுட்டே சொல்லுமா என மெக்கானிக் செட் ஓனர் கூறுகிறார்.
கோதை சாப்பிடாமல் இருப்பதற்கு நடேசன் வா சாப்பிடலாம் என அழைக்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் வந்து இதுவும் வேஷம் தானா என வேகமாக மரியாதை இல்லாமல் நடேசனை பார்த்து பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நடேசனைப் பார்த்து தரகுறைவாக அர்ஜுன் பேசும்பொழுது கோதை கொந்தளிக்கிறார் அர்ஜுனை பார்த்து நீ மாப்பிள்ளை என்பதால் சும்மா இருக்க மாட்டன் அவ்வளவுதான் என பேசுகிறார் உடனே அர்ஜுன் நீங்க தோற்றத்திற்கு காரணம் முழுக்க முழுக்க மாமா தான்.
நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க இந்தாங்க இதை பாருங்க என வீடியோவை காட்டுகிறார் வீடியோவை பார்த்த கோதை அதிர்ச்சி அடைகிறார். கோதை எதுவும் பேசாமல் வெளியே செல்கிறார். தமிழ் அர்ஜுனை விரட்டிவிட்ட விரக்த்தியில் அர்ஜுன் வீட்டில் வந்து நடேசன் மீது பாய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.