நடேசன் வீடியோ அனுப்பியதை தெரிந்து கொண்ட அர்ஜுன்.! இனி மாப்பிள்ளையோட ஆட்டம் வெறித்தனமா இருக்குமே..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum episode june 29
thamizhum saraswathiyum episode june 29

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி அசோசியேஷன்  ஆபீஸ்க்கு வருகிறார். வேஷ்டி சட்டையில் தமிழ் வருகிறார் அவரைப் பார்த்து அனைவரும் வரவேற்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்  அந்த சமயத்தில் அர்ஜுன், கோதை, கார்த்தி, நடேசன் என அனைவரும் வருகிறார்கள். தமிழைப் பார்த்து கோதை  கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழுக்கு வாழ்த்து கூறுகிறார்.

சில நிமிடம் கோதையை பேச சொன்னார்கள் ஆனால் கோதை இதற்கு முன்பு என்னை நேரடியாக தலைவராக ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் பேறுவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழரசன் வாழ்த்துக்கள் என கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த எலக்சன் என் நேர்மையை சோதித்தது அனைவரும் என்னை நேர்மை இல்லாதவர்கள் என கூறியுள்ளீர்கள். என் உடலும் மனமும் நல்லா இருந்தால் கண்டிப்பாக நான் நேர்மையானவள் என நிரூபிப்பேன்.

என தமிழை குத்தி காட்டுவது போல் பேசுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சில பேர் சந்தனத்தை பூசி கொள்வதற்காக மற்றவர்கள் மேல் செத்தை அடித்தார்கள் மற்றவர்களின் நேர்மையை பிரச்சாரம் செய்தார்கள் என்பது போல் தமிழை குத்தி காட்ட அடுத்ததாக பேசிய தமிழ் முன்னாள் பிரசிடெண்டுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எலக்சன் ஆரம்பத்தில் இருந்து ஒரே ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்கிறோம் நேர்மை என்ற வார்த்தை நான் கண்டிப்பாக நேர்மையாக நடந்து கொள்வேன்.

என்னுடைய உடலும் உயிரும் ஒரு நேர்மையானவர்களிடமிருந்து வந்தது கண்டிப்பாக அதனால் நானும் நேர்மையாக தான் நடந்து கொள்வேன் என்னை விட அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என தன்னுடைய அம்மாவை பற்றி தமிழ் பேசுகிறார். அந்த இடத்தில் தமிழ் கோதைக்கு தன் மீது எந்த தப்பும் இல்லை என்பதை புரிய வைக்கிறார்.

நடேசன் தமிழுக்கு வாழ்த்து கூறிவிட்டு கோதையுடன் செல்கிறார். டாக்குமெண்டில் சைன் செய்ய வேண்டும் என அசோசியேஷனில் கேட்க அம்மாவோட ஹெல்த் சரியில்ல வீட்டுக்கு எடுத்து கொண்டு வாங்கள் என கூறி விடுகிறார்கள். கோதை சென்றவுடன் தமிழ் தலைவர் சேரில் அமருகிறார் அனைவரும் கைதட்டுகிறார்கள். அந்த சமயத்தில் அர்ஜுன் உள்ளே வர டேய் தம்பி என்ன அப்படியே எஸ்கேப் ஆகுற சவால் விட்டது மறந்துடுச்சா தமிழ் தோத்துட்டா இந்த தொழிலை விட்டு போயிடனும்னு சொன்ன ஆனா தமிழ் ஜெயிச்சுட்டா நீ ஏதோ சவால் விட்டாயா மறந்திருச்சா என கேட்க.

உடனே நமச்சி அதெல்லாம் ரோஷம் உள்ளவங்க செய்யறது எனக் கூற உடனே அர்ஜுன் கோபப்படுகிறார் மாப்பிள கோபப்பட கூடாது ஒழுங்கா கோதை industries விட்டு ஓடுற வழிய பாரு எனக் கூறுகிறார். வெளியே சென்ற அர்ஜுன் தனக்கு ஓட்டு போடாத ஒருவரை பார்த்து என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க ஓட்டு போடறேன்னு சொல்லிட்டு ஓட்டு போடலையே என கேட்க ஆமா ஓட்டு போடல. நீங்க ஏன் தமிழைப் பற்றி தப்பாக போஸ்டர் அடித்து ஒட்டினீர்கள் என கேட்க அது உண்மை தானே சார் என அர்ஜுன் கூறுகிறார்.

அதற்கு அந்த முதலாளி அது உண்மை இல்லை என தமிழ் உடைய அப்பாவே கூறிவிட்டார் என கூறுகிறார் என்ன சொல்கிறீர்கள் நீங்கள் இந்த வீடியோவை பாருங்க என நடேசன் பேசிய வீடியோவை காட்டுகிறார் இந்த வீடியோ எப்படி உங்களுக்கு வந்தது என கேட்க எல்லாருக்கும் வந்திருக்கு என கூறுகிறார். இதனால் அர்ஜுன் அதிர்ச்சடைகிறார் இது நடேசன் பார்த்த வேலை தானே மனசுக்குள்ளயே பேசி கொள்கிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதி நமச்சி மூவரும் காரில் வந்த இறங்குகிறார்கள் ஆனால் நடேசன் வீட்டு முன்பு நின்று வெளியே வெடி வெடிக்கிறார்கள் மேலே நின்று கொண்டு கோதை வேடிக்கை பார்க்கிறார் அதுமட்டுமில்லாமல் மொத்த பேமிலியும் பார்க்கிறார்கள் பின்பு தமிழ் வீட்டிற்கு செல்கிறார் அங்கு புதிய போர்டை நமச்சியை திறக்க சொல்கிறார் சரஸ்வதி அதில் தமிழரசன் தலைவர் என பதிக்கப்பட்டுள்ளது அதற்கு தமிழ் சரஸ்வதிக்கு தேங்க்ஸ் சொல்ல எனக்கு எதுக்கு தேங்க்ஸ் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.