தமிழை ஜெயிக்க மகா மட்டமான வேலையை பார்த்தா அர்ஜுன்.! மாப்பிள உன் குறுக்கு புத்தி உன்ன விட்டு போகாது போல.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum-saraswathiyum-june-20
thamizhum-saraswathiyum-june-20

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ், நமச்சி, சரஸ்வதி மூன்று பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் வசு கால் செய்கிறார். தொழிலாளிக்கு முதலாளிக்கும் ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாக தமிழ் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆகியதால் மொத்த ஓட்டும் இவர் பக்கம் திரும்பியுள்ளது. அதனால் வசுவும் அவருக்கு வாழ்த்து கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் வசுவின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை எலக்சன் முடிந்து வைத்துக் கொள்வதாகவும் அதற்கு கண்டிப்பாக நீங்க வரவேண்டும் மாமா என வசு கூப்பிடுகிறார்.

அது எப்படி என தமிழ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி அப்பொழுது என்ன நடக்கும் என்று பார்த்துக் கொள்ளலாம் என போனை கட் செய்கிறார். கார்த்தி இடம் அர்ஜுன் இப்படியே போனா அத்தை தோத்துருவாங்க கொஞ்சமாவது நம்ம குறுக்கு வழியில போய் தான் ஆகணும் நேர்வழி நேர்வழி என்று போனால் கண்டிப்பாக தோற்று விடுவோம் என கூற இந்த முறை கண்டிப்பாக நம்ம பேர் வெளியே வராது என கூறுகிறார்.

நம்ம பேர் வந்துச்சுன்னா கண்டிப்பா இந்த முறை உனக்கு நான் சப்போர்ட் செய்ய மாட்டேன் என கார்த்தியும் அர்ஜுனிடம் கூறிவிடுகிறார். உடனே கார்த்தி தன்னுடைய மாமாவை வைத்து மிமிக்ரி பேசும் ஆர்டிஸ்டை வரவழைக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே தமிழ் கம்பெனியில் திருடிய நபரையும் வரவழைக்கிறார்.  புது நம்பரில் இருந்து சிறிய முதலாளிகளுக்கு கால் செய்து தமிழ் பேசுவது போல் நான் சொல்வது போல் பேசு என அந்த ஆர்டிஸ்ட் இடம் அர்ஜுன் கூறுகிறார்.

அதேபோல் அந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் தமிழ் பேசுவது போல் சிறிய முதலாளிக்கு கால் செய்து நான் எலக்ஷனில் வந்தால் உங்களுக்கு நல்லது செய்கிறேன் உங்களுக்கு பணகஷ்டமாக இருந்தாலும் பரவாயில்லை அசோசியேஷனில் நிறைய பணம் வரும் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன் என்பது போல் பேசுகிறார். இதனால் அந்த சிறிய முதலாளி குழப்பத்தில் இருக்கிறார் அந்த சமயத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி நமச்சி மூவரும் ஓட்டு கேட்க வருகிறார்கள் நோட்டீசை கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள்.

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என அந்த சிறிய முதலாளி கூற உடனே என்ன சார் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என தமிழ் கேட்க இப்பதான் நீங்க போனில் பேசினீங்க ஆனா இப்ப நேர்ல வந்து ஓட்டு கேக்குறீங்க என கூறுகிறார். போனில் நான் பேசினனா நான் எங்க போனில் பேசின இப்பதான் உங்களை முதல் டைம் நேரிலேயே பார்க்கிறேன் என தமிழ் கூறுகிறார். இப்பதான் போனில் நான் எலக்ஷனில் ஜெயித்து விட்டால் அசோசியேஷன் காசியில் இருந்து உங்களுக்கு நல்லது செய்கிறேன். உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் பணம் தேவை இருந்தால் பணம் கொடுக்கிறேன் என கூறினீர்கள் என்பது போல் கூற நான் அப்படி பேசவே இல்லை என தமிழ் கூறுகிறார்.

உடனே அந்த நம்பரை வாங்கிக் கொண்டு இதனை அசோசியேஷனில் போய் சொல்ல வேண்டும் என மூவரும் கிளம்புகிறார்கள். சரஸ்வதி கோதைக்கு தெரியாம அர்ஜுன் பாக்குற வேலையா இருக்கும் என கண்டுபிடித்து விடுகிறார். அடுத்த காட்சியில் அர்ஜுன் அந்த மிமிக்ரி  ஆர்டிஸ்ட்  வந்தவுடன் பெரிய முதலாளிக்கு கால் செய்து நான் சொல்வது போல் பேசிவிட்டு சாரி சார் சின்ன முதலாளி என்று நினைத்து கால் செய்து விட்டேன் என கூறுகிறார்.

உடனே அந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் அதே போல் பேசி விடுகிறார் இதனால் தமிழ் மீது கெட்ட பெயர் உண்டாக்கி விடுகிறார் அர்ஜுன் எப்படியாவது எலக்ஷனில் அனைத்து ஓட்டையும் வாங்குவதற்கு அர்ஜுன் குறுக்கு வழியை பின்பற்றுகிறார் ஆனால் இது கோதைக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.