தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நமச்சி தமிழை கம்பெனிக்கு அழைக்கிறார் அப்பொழுது தமிழ் போ நான் வந்து விடுகிறேன் எனக்கு சின்ன வேலை இருப்பதாக கூறி விடுகிறார். பிறகு சரஸ்வதி தமிழிடம் மதியம் என்ன சமைக்க வேண்டும் என கேட்க எதுவும் சமைக்க வேண்டாம் நீ என்கூட வா ஒரு சின்ன விஷயம் வெளியில போயிட்டு வருவோம் என கூட்டிக்கொண்டு செல்கிறார்.
சரஸ்வதியை அவர் வேலை செய்யும் மெக்கானிக்கிடம் அழைத்து செல்கிறார் அங்கு தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கேட்கிறார் தமிழ் அந்த சமயத்தில் உனக்கு புடிச்ச வேலை இது எதற்காகவும் இதை விட்டுக் கொடுக்காதே என சரஸ்வதியிடம் தமிழ் கூறி விடுகிறார். அதனால் மீண்டும் சரஸ்வதி வேலைக்கு சேர்கிறார். பிறகு தமிழ் இவ்வாறு நடந்து கொண்டது சரஸ்வதிக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது அதனால் சரஸ்வதி வசுவுக்கு கால் செய்து நடந்த அனைத்தையும் கூறுகிறார்.
அதற்கு வசு நான் போட்ட சின்ன பிளான் தான் இது டிவிகாரங்களை நான் தான் வர சொன்னேன் அவங்க தான் கேட்டாங்க உங்க வைஃப் வேலைக்கு அனுப்புறீங்களே ரொம்ப பெருமையா இருக்குன்னு சொன்னாங்க என வசு சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் கோதை கம்பெனியில் அர்ஜுன் மற்றும் கார்த்தி நடேசன் அனைவரும் நடந்து கொண்டு வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் புது புது விஷயங்களை கூற அதற்கு கோதை பிடிக்கொடுத்து பேசாமல் இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் கம்பெனி டெவலப் ஆகுவதற்கு புதிய ஐடியா கொடுக்க வேண்டவே வேண்டாம் என மறுத்து விடுகிறார் கோதை இதனால் அர்ஜுனுக்கு சிறிதாக சந்தேகம் வருகிறது. அடுத்த காட்சியில் நமச்சி அவர்களிடம் தமிழ் சரஸ்வதிக்கு சர்ப்ரைஸ் பண்ண போறேன் இன்னைக்கு படம் பார்க்க போறோம் அவளுக்கு புடிச்ச உணவுகளை சாப்பிட போறோம் என கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் சரஸ்வதி தமிழுக்கு கால் செய்ய நாம பாக்க போன படம் சுத்தமா நல்லாவே இல்ல அந்த படத்தை நம்ம பாக்காமலே இருந்தது நல்லதா போச்சு என பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது தமிழும் இன்னைக்கு எனக்கு 400 ரூபாய் மிச்சம் தான் எனக்கு கூறுகிறார் ஏன் எனக் கேட்க இன்னைக்கு படத்துக்கு சர்ப்ரைஸா போகலாம் என நினைத்தேன் ஆனால் நீ தான் படம் நல்லா இல்ல என்று கூறி விட்டாயே அதனால் 400 ரூபாய் மிச்சம் என கூறுகிறார் அதற்கு சரஸ்வதி நாம ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை தான் நினைச்சுட்டு இருந்திருக்கோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த காட்சியில் நடேசன் சரஸ்வதியிடம் பேசுவதற்காக அழைத்துள்ளார் அப்பொழுது தமிழ் அர்ஜுன விஷயத்தில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இருப்பதாகவும் அதனால் சம்பவ இடத்திற்கு சென்று வீடியோ ஃபுட்டேஜ் வாங்கிக்கொண்டு வந்ததாகவும் ஆனால் அதனை யாரோ டெலிட் செய்தது போல் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் சட்டை பட்டன் கீழே கிடந்ததையும் கூறுகிறார் அது கண்டிப்பாக அர்ஜுன்தான் அந்த சட்டை பட்டன் அர்ஜுனுடையது தான் என சரஸ்வதியும் கூறுகிறார்.
இதையெல்லாம் அத்தையிடம் கூறலாமே மாமா என சரஸ்வதி கேட்க, நடேசன் சொல்லிட்டேன் ஆனா அத்தை நம்புற மாதிரி தெரியல கண்டிப்பா இதுக்கு எவிடென்ஸ் வேணும் அப்பதான் நாம சொல்றதை நம்புவாங்க ஏன்னா அந்த அளவு அர்ஜுனை நம்புறாங்க என நடேசன் கூறுகிறார் அதற்கு உடனே சரஸ்வதி அந்த வீடியோ ஃபுட்டேஜ் எங்கு எடுத்தீங்களோ, அங்கேயே இன்னொரு காப்பி இருக்கும் அதை எடுத்துக்கிட்டு வந்தா உண்மை என்னான்னு தெரிஞ்சுக்களாம் என சரஸ்வதி கூற ஆமாம் அதை முதலில் செய்வோம் என நடேசன் கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.