ஐடியா சொல்கிறேன் என கோதையிடம் அசிங்கப்பட்டு நின்ன அர்ஜுன்.! மாப்பிள்ளை மூக்கை உடைத்து அனுப்பிய தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-june-16
thamizhum-saraswathiyum-june-16

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என கூற அனைவரும் கோதை பக்கம் சாய்கிறார்கள் இதனை உமாபதி தமிழிடம் கூற தமிழ் ஐடியா பண்ணி உடனே அசோசியேஷன் ஆபீஸ்ருக்கு வருகிறார்.

அங்கு வந்த தமிழ் வெறும் 40 ஆயிரத்தை கொடுத்து ஒவ்வொரு முதலாளியும் நாற்பதாயிரம் கொடுத்தால் ஒரு கோடியே 20 லட்சம் வருகிறது இதை வைத்து அசோசியேசன் பில்டிங் மிகவும் பிரம்மாண்டமாக கட்ட முடியும் அது மட்டுமில்லாமல் தனிநபர் கட்டி கொடுத்தால் அவருக்கு ஒரு மரியாதையும் மற்றவர்களுக்கு ஒரு மரியாதையும் கிடைக்கும். மேலும் தனி நபர் கட்டிக் கொடுப்பதால் அது தானமாக தான் அனைவரும் நினைப்பார்கள் தனிநபர் கட்டுவதற்கு இது என்ன கெஸ்ட் ஹவுஸ் என  தமிழ் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ஆனால் ஒவ்வொரு முதலாளியும் 40,000 கொடுப்பது மிகவும் எளிதானது ஒன்று. அதனால் மிக எளிதாக இந்த பணத்தை கொடுத்து விடுவார்கள் இதனை அனைத்து முதலாளியும் சப்போர்ட் செய்கிறார்கள். இதனால் கோதை அர்ஜுன் கார்த்தி மூவரும் சோகத்தில் மூழ்கிறார்கள். கோதை  கிளம்பிய பிறகு தமிழ் சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் வருகிறார் அர்ஜுனை பார்த்த நமச்சி ஓவராக நக்கல் அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் என்ன இப்பவே பயம் வந்துருச்சா ரெஸ்யூம் சர்டிபிகேட் எல்லாம் ரெடியா வச்சுக்கோ வேற வேலைக்கு போகணும் என அர்ஜுனை கிண்டல் அடிக்கிறார்.

கண்டிப்பா ஒரே ஒரு லேத்து பட்டறை நான் மூட வைக்கிறேன் இதுல கண்டிப்பா நீங்க தோக்குவீங்க என அர்ஜுன் மீண்டும் சபதம் போடுகிறார் அதுமட்டுமில்லாமல் நமச்சி அவர்களிடம் கைநீட்டி அர்ஜுன் பேசுவதால் மூக்கை உடைத்து அனுப்பி விடுவேன் ஓடிவிடு என அர்ஜுன் கூறுகிறார் அடுத்த காட்சியில் நமச்சி கோதை வீட்டு வேலைக்கார பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அம்மாவும் பிள்ளையும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இது நல்லாவா இருக்கு என நமச்சிடம் கேட்க சரி இல்லை தான் ஆனால் அம்மா கொஞ்சம் கூட விட்டு தர மாட்டேங்குறாங்க அதனால் வேறு வழி இல்ல தமிழ் தான் ஜெயிக்கணும் என நமச்சி கூறுகிறார்.

மேலும் அம்மா மிகவும் சோகமாக இருப்பதாக வேலைக்கார பெண் கூற அதனை தமிழிடம் நமச்சி கூறுகிறார். ஆனால் சரஸ்வதி இனி தமிழ் சார் தான் ஜெயிப்பார் என்பது போல் சரஸ்வதி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார் கோதை வீட்டில் கோதை சோகமாக இருக்கிறார் அப்பொழுது  அர்ஜுன் ஒரு ஐடியா கூறுகிறார் சிறிய முதலாளி நிறைய பேர் கடனில் இருப்பதாகவும் அவர்களில் 20 பேரை செலக்ட் செய்து ஒன்று பணத்தை கொடுக்கலாம் அப்படி இல்லை என்றால் மிரட்டலாம் எனக் கூற அதற்கு கோதை மிகவும் கோபமாக உங்க புத்தி எப்படி இவ்ளோ கீழ் தனமா யோசிக்குது இத நான் எப்படி செய்வேன்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க.

என அர்ஜுனை கிழித்து தொங்க விடுகிறார் அந்த சமயத்தில் கார்த்தி வந்து ஒரு கம்பெனியில் ஸ்ட்ரைக் நடப்பதாகவும் அதனை இப்பொழுது தீர்த்து வைத்தால் நம் பக்கம் மற்றவர்களின் கவனம் வரும் எனவும் கூறுகிறார்கள். இதனால் கோதை கார்த்தியிடம் கற்றுக்கொள் இது எவ்வளவு சூப்பரான ஐடியாவா இருக்கிறது என அர்ஜுனுக்கு கூற உடனே அனைவரும் அந்த கம்பெனிக்கு செல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.