தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வாசு கார்த்தியிடம் தமிழ் மாமா தான் ஜெயிப்பார் அவரிடம் நேர்மையும் உழைப்பும் இருக்கிறது எனக் கூற அதற்கு கார்த்தி அப்ப அத்தை தோத்துருவாங்கன்னு சொல்றியா இது அவர்களுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா என்பது போல் கூறுகிறார். உடனே நான் அப்படி சொல்லவில்லை தமிழ் மாமாவிடம் உழைப்பையும் நேர்மையும் இருக்கிறது அதனால் ஜெயிப்பார் எனவும் கூறுகிறார்.
இப்படியே வாக்குவாதம் அதிகமானதால் குழந்தை எழுந்து விடுகிறது அதனால் கத்துகிறது உடனே தூக்கிக் கொண்டு ஆர கட்டுகிறார் வசு அதுமட்டுமில்லாமல் கார்த்தி நான் கொஞ்சம் ஓவரா பேசிடன் சாரி வசு என கார்த்தி கூற வசுவும் சாரி கேட்கிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் எப்படி உனக்கு இப்படி ஒரு ஐடியா தோணுச்சு என தமிழ் சரஸ்வதி இடம் கேட்க உடனே சரஸ்வதி அவங்க பெரிய முதலாளியை கூப்பிட்டு பேசும் பொழுது நாம சின்ன முதலாலிய கூப்பிட்டு பேசலாம் என தோணுச்சு இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் நீங்கதான் திறம்பட பேசுனீங்க என கூறுகிறார்.
பிறகு தமிழ் சரஸ்வதிக்கு தேங்க்ஸ் சொல்லுகிறார் அடுத்த காட்சியில் பெடரேஷன் அசோசியேஷன் ஆபீஸில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் உமாபதி அங்கு உட்காருகிறார் அப்பொழுது கோதை மற்றும் கார்த்தி அர்ஜுன் ஆகியோர்கள் வருகிறார்கள் பில்டிங் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் ஆகும் என கோதை கூற அதற்கு அசோசியேஷன் நம்பர் ஆமாம் தமிழ் ஆனால் ஜெயித்தால் கட்டிக் கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் லோன் வாங்கி பணத்தை ரெடி பண்ணி கட்டுகிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார் என கூறுகிறார்.
ஆனால் கோதை அவ்வளவு நாள் நாம் ஏன் வெயிட் பண்ணனும் நானே அந்த பில்டிங்கை கட்டி தரேன் என்னோட சொந்தம் காசுல இந்தாங்க அதற்காக 10 லட்சம் செக் என பத்து லட்சத்தை எடுத்து வீசுகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த உமாபதி உடனடியாக தமிழை வரச் சொல்லி அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். கோதை ஜெயிப்பதற்காக புது யுக்தியை கடைப்பிடித்து வருகிறார் அதனால் பணத்தால் அடிக்கிறார் என உமாபதி கூறுகிறார்.
உடனே தமிழ் ஒரு ஐடியா செய்து உங்களிடம் நாற்பதாயிரம் பணம் கடனாக வேண்டும் என உமாபதி இடம் கேட்க அதை எடுத்துக்கிட்டு உடனே அசோசியேஷன் ஆபீஸ்ர்க்கு செல்ல வேண்டும் எனக் கூற உடனடியாக அனைவரும் கிளம்புகிறார்கள் அங்கு சென்று தமிழ் பேசுவதற்கு முன்பே அர்ஜுன் தமிழை நக்கல் அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் எலக்ஷனில் இருந்து விலகுவதற்காக தான் வந்துள்ளார்கள் என கூற உடனே உமாபதி கோவப்பட்டு அர்ஜுனிடம் கத்துகிறார்.
இதனால் அசோசியேஷன் ஆபிசர் இங்கு சண்டை வேண்டாம் இப்பொழுது தான் ஒரு நல்லது நடந்துள்ளது எனக் கூற உடனே தமிழ் என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சமாவது கேளுங்க என உமாபதி அசோசியேஷன் ஆபீஸில் கூறுகிறார் உடனே தமிழ் இது அசோசியேஷன் பில்டிங் அதனால் எல்லா கணக்கு வழக்கும் பொதுவாக தான் இருக்கணும் தனிநபர் பில்டிங் கட்டிக் கொடுக்க இது என்ன அவங்க கெஸ்ட் ஹவுஸ்ஸா என தமிழ் கேள்வி கேட்கிறார் இதனால் மற்ற முதலாளிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஒரே கேள்வியால் அர்ஜுன் மற்றும் கோதையை அலற விட்டுள்ளார் தமிழ் இதனால் மீண்டும் கோதை தோற்று போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.