தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ், சரஸ்வதி, நமச்சி மூவரும் பெரிய கம்பெனி முதலாளியை பார்த்து பேச வந்துள்ளார்கள் ஆனால் இவர்கள் பேச போனபொழுது பெரிய கம்பெனி முதலாளி அவமானப்படுத்துவது போல் பேசி விடுகிறார் இதனால் கம்பெனியை விட்டு வெளியே வருகிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன், கோதை, கார்த்தி நடேசன் என அனைவரும் வருகிறார்கள்.
அப்பொழுது கார்த்தி என்ன தோத்து விடுவோம் என்ற பயம் வந்துடுச்சா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுனும் தோத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்க வேணாம் நான் வேணா பொட்டிக்கடை வச்சு தரேன் என கேவலமாக பேசுகிறார். பிறகு கோதை அவங்க கிட்ட என்ன வெட்டி பேச்சு வாங்க நம்ம வந்த வேலையை பார்க்கலாம் என்ன போகிறார் ஆனாலும் அர்ஜுன் விடாமல் தமிழை சீண்டி பார்க்கிறார்.
விட்ட சவாலை மறந்து விடாதே தமிழ் மாமா எலக்சன்ல நிக்கறத விட்டுட்டு அடுத்து என்ன தொழில் பண்ணலாம்னு யோசிங்க போட்டிக்கடை வேணா வச்சுக்கலாம் அதையும் நானே வச்சு தரேன் என கேவலமாக பேச சரஸ்வதி கொந்தளிக்கிறார். பிறகு தமிழ், நமச்சி, சரஸ்வதி மூவரும் வீட்டிற்கு வந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பெரிய முதலாளி அனைவரையும் விலைக்கு வாங்கி விட்டார்கள் சின்ன முதலாளி பல பேர் நமக்கு ஆதரவாக இல்லை நாம் எப்படி ஜெயிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் சரஸ்வதி ஒரு ஐடியா கூறுகிறார் சின்ன முதலாளி அனைவரையும் கூப்பிட்டு நாம் பேச வேண்டும் அதற்கு சீக்கிரம் அரேஞ்ச் பண்ணுங்க எனக் கூறுகிறார் அப்படியா இருந்தாலும் பெரிய முதலாளி தான் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தான் அதிக ஓட்டு இருக்கிறது எனக் கூற நீங்கள் கூப்பிடுங்கள் நான் சொல்லுகிறேன் என சரஸ்வதி கூறுகிறார்.
அடுத்த நாள் காலையில் சின்ன முதலாளிகளை வரவைத்துள்ளார்கள் அப்பொழுது சின்ன முதலாளிகளிடம் பெரிய முதலாளிக்கு கீழ்தான் நாம் இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள் அதனால் தான் அவர்களை மட்டும் அழைத்து பேசியுள்ளார்கள் நம்மள மாதிரி சின்ன முதலாளிகளை கூப்பிட்டு கூட பேசவில்லை என தமிழ் மற்றும் சரஸ்வதி கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் நாம் தொழிலாளியாக இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு முதலாளியாக மாறினோம் ஆனாலும் நம்மளை பெரிய முதலாளிகள் மதிப்பதே கிடையாது அந்த வகையில் அவர்கள் ஜெயித்து விட்டால் ஆர்டர் கிடைப்பதில் கூட சிக்கல் வரும் அதையும் பெரிய முதலாளிக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவார்கள் என சின்ன முதலாளிகளுக்கு தமிழ் புரிய வைக்கிறார்.
ஆனாலும் பெரிய முதலாளி ஓட்டு தான் அதிகமாக இருக்கிறது நாம் என்னதான் ஓட்டு போட்டாலும் ஜெயிப்பது கஷ்டம் என்பது போல் கூற அதற்கு சரஸ்வதி பெரிய முதலாளிகள் லிஸ்ட் 140 இருந்தாலும் அவர்களில் பல பேர் வெக்கேஷன்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு சிலர் ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள் நம்மளுடைய பெடரேஷன் எலக்ஷனில் நேரடியாக வந்து ஓட்டு போட்டால் மட்டுமே ஏற்று கொள்வார்கள் அதனால் இது நமக்கு சாதகமாக தான் இருக்கிறது.
நாம 110 பேரும் ஒற்றுமையாக தமிழுக்கு ஓட்டு போட்டால் கண்டிப்பாக நாம் தான் ஜெயிப்போம் பெரிய முதலாளிகளை தோற்கடித்து விடலாம் என்பது போல் சின்ன முதலாளிகளிடம் கூற உடனே சின்ன முதலாளிகள் அனைவரும் தமிழுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
மற்றொரு பக்கம் இந்த விஷயம் கோதைக்கு தெரிய வர இந்த அளவு தமிழ் யோசிக்கிறானா எனக் கூற உடனே நடேசன் அம்மாவும் மகனும் ஒரே மாதிரி யோசிக்கிறாங்க என கூறுகிறார் அதை தான் வசூவும் கூறுகிறார். ஆனால் அதற்கு வசுவிடம் அர்ஜுன் குடும்பம் நீங்க தமிழ் ஜெயிக்கணும்னு நினைக்கிறீங்களா அத்தை ஜெயிக்கணும்னு நினைக்கிறீங்களா என ஏத்தி விடுகிறார்.
இந்த நிலையில் கோதைக்கு பயம் வந்துவிட்டது அப்போ நமக்கு ஓட்டு அதிகமா கிடைக்காதா என கேட்கிறார். ஆறு மாசமா கம்பெனி நடத்துற அவனுக்கே இவ்வளவு யோசிக்கிறான்னா 30 வருஷமா இதிலேயே ஊறி போய் இருக்கேன் எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்பது போல் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.