பெத்த மகன் என பார்க்காமல் அர்ஜுன் பேச்சை கேட்டுகிட்டு ஆடும் கோதை.! நடேசன் பேசுவதை மறைந்திருந்து கேட்ட தமிழ்.! இன்றைய எபிசொட்

thamizhum-saraswathiyum-june-12
thamizhum-saraswathiyum-june-12

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ஓட்டு கேட்டு ஒவ்வொரு அலுவலகத்திற்கு சென்றுள்ளார் அப்பொழுது அவர் தமிழ் கொடுத்த நோட்டீசை படித்து பார்த்துவிட்டு உங்களுக்கு சிறு வயதாக இருந்தாலும் இவ்வளவு மெச்சூரிட்டி இருக்கிறது எனவும் ரொம்ப காலமாக கட்டிடம் கட்டுகிறோம் என இடத்தை வாங்கியதோடு சரி இதுவரை எந்த ஒரு கட்டிடமும் கட்டவில்லை எனவும் நீங்கள் ஆனால் விரைவில் கட்டுகிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளதையும் மற்ற பிரச்சனைகளைப் பற்றியும் கூறி ஓட்டு கேட்கிறீர்கள் உங்களுக்கு பக்குவம் நிறையாக இருக்கிறது என கூறுகிறார்.

ஆனால் தமிழ் உங்கள் அம்மா கோதை உங்களுக்கு படிப்பு அறிவு இல்லை எனவும் சரியாக நிர்வாகம் செய்ய தெரியாது எனவும் கோவக்காரர் எனவும் உங்களால் நிர்வாகம் செய்ய தகுதி இல்லை எனவும் நோட்டீஸ் அடித்து கேட்கிறார்கள் என கூறுகிறார் அதனைப் படித்துப் பார்த்த தமிழ் அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்காக என் கோரிக்கையை நான் மாற்றிக் கொள்ள முடியாது நான் நேர்வழியில் தான் போவேன் என்பது போல் அந்த அலுவலக முதலாளி இடம் கூறிவிடுகிறார். அவரும் உங்கள் நேர்மை எனக்கு பிடித்துள்ளது தன்னம்பிக்கை பிடித்துள்ளது எனவும் என்னுடைய சப்போர்ட் உங்களுக்கு தான் என கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் உமாபதி சார் ஆபீஸிற்கு தமிழ் வருகிறார் சூப்பர் தமிழ் நீங்க போட்ட பிளான் பக்காவாக ஒர்க் அவுட் ஆகிறது நாம தான் ஜெயிப்போம் உங்களுடைய தன்னம்பிக்கைக்கு கண்டிப்பா வெற்றி நிச்சயம் என கூறுகிறார் உமாபதி ஆனால் நமச்சி கோதை ஆபீஸில் தவறாக நோட்டீஸ் அடித்து ஓட்டு கேட்கிறார்கள் என கூற அதற்கு தமிழ் யார் எப்படி பேசினால் எனக்கென்ன என்னோட கொள்கையிள் நான் உறுதியாக இருப்பேன் என்பது போல் தமிழ் கூறிவிடுகிறார்.

அடுத்த காட்சியில் நடேசன் சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமச்சி வருகிறார் இவர் எதுக்கு இங்கு வந்தார் எலக்ஷனில் இருந்து வாபஸ் வாங்கணும் என்று கூறுகிறாரா என கேட்க உடனே கொஞ்சம் அமைதியாக இருங்கள் அண்ணா அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க என கூற உடனே நடேசன் என் தங்கத்தை நான் தப்பா நினைச்சுட்டேன் என் தங்கம் கண்டிப்பா தப்பு செஞ்சிருக்க மாட்டான் நானே இந்த கையால அவனை அடிச்சுட்டான் என ரொம்பவும் வருத்தப்பட்டு பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நடேசன் மாறியதில் நமச்சிக்கும் சந்தோஷம்.

நடேசன் என்னனுமோ கூறிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் பக்கத்திலிருந்து தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் தமிழும் மாறுகிறார்  ஆனால் தான் கேட்டுக் கொண்டிருந்ததை யாரும் பார்த்து விடக்கூடாது என திடீர் என கிளம்பி விடுகிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் மற்றும் கார்த்திக் இருவரும் தமிழுக்கு எதிரான சில பாயிண்ட்களை வைத்து ஓட்டு கேட்டு வருகிறார்கள் அதனால் வசு மிகுந்த கோவம் அடைகிறார் அந்த சமயத்தில் நடேசன் வருகிறார்.

நடேசன் இடம் இந்த பாயிண்டை பாருங்கள் என கார்த்தி கூற அதை பார்த்துவிட்டு தமிழ் வேற அப்ரோச்சியில் போய்க் கொண்டிருக்கிறான் நீங்கள் இன்னும் ஏன் இது போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க அதற்கு அர்ஜுன் அவர் வேணும்னே தான் இப்படி பண்ணுகிறார் நம்ம மீது தவறான எண்ணம் மற்றவர்களுக்கு தோன்ற வேண்டும் என்று முதலில் நம்மளை பற்றி தப்பாக பேசி அவரைப்பற்றி தப்பாக பேச வைத்தார் இப்பொழுது அவர் நல்லதை மட்டும் சொல்லி ஓட்டு கேட்கிறார் என அர்ஜுன் கோதையிடம் ஏற்றி விடுகிறார்.

இது முடிந்தவுடன் வசு சரஸ்வதிக்கு கால் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் தமிழ் மாமாவிடம் போனை கொடுங்கள் நான் பேச வேண்டும் என உடனே போனை தமிழிடம் கொடுக்கிறார் தமிழுக்கு வசு வாழ்த்து கூறுகிறார் நீங்க தான் ஜெயிப்பீர்கள் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிரண்டு போய் இருப்பதாகவும் பயந்துவிட்டதாகவும் தமிழிடம் கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.