தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கம்பெனிக்கு செல்லும் வழியில் வழி மறைத்து தமிழ் எங்க போகிறாய் சபதம் போட்டது மறந்துடுச்சா இல்ல அடி வாங்கணுமா என கேட்கிறார். உடனே அந்த சமயத்தில் கோதை நடேசன் கார்த்தி மூவரும் வருகிறார்கள் அப்பொழுது என்ன பிரச்சனை என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நடேசன் இருமா நான் கேட்டு சொல்றேன் என தமிழிடம் கேட்க அப்பொழுது நமச்சி சபதம் போட்டதை கூறுகிறார்.
நீங்க சபதம் போடுறதுக்கும் பழியை தீர்த்துக் கொள்ள என் கம்பெனி தான் கிடைத்ததா என அர்ஜுனை திட்டுகிறார் கோதை. அதுமட்டுமில்லாமல் கார்த்தி என்னடா இது என்கிட்ட முன்னாடியே சொல்ல மாட்டியா என கேட்கிறார் உடனே கோதை இதெல்லாம் உண்மையா அர்ஜுன் என கேட்க அது வந்து என மழுப்புகிறார் கோதை இன்னும் கோபமாகி திட்டுகிறார். ஏன் கம்பெனி டைரக்டர் நீங்க உள்ள போக கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு அதை நான் சொல்லணும் என்பது போல் கூறிவிட்டு இப்படி சில்ரத்தனமா வேலையை பார்த்துக்கிட்டு இருக்கீங்க போய் கம்பெனில நடக்குற வேலைய பாருங்க எனக் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் நமச்சி வீட்டிற்கு வருகிறார்கள் இன்னும் கம்பெனிக்கு போகலையா என சரஸ்வதி கேட்க அதற்கு இல்ல இன்னும் போகல அந்த அர்ஜுனா பாத்தீங்களா சும்மாவா விட்டீங்க எனக்கு கேட்க அவனை பார்க்க போனோம் தான் அதுக்குள்ள அந்த வீட்டு அம்மா அதைக் கேட்க நீ யார் என்பது போல் கேட்டுவிட்டார்கள் சொந்த காசுல சூனியம் வச்சுக்குறாங்க என கூறிவிட்டார் தமிழ். உடனே சரஸ்வதி மெக்கானிக் செட்டை வாங்குவது பற்றி பேசுகிறார் தமிழிடம்.
ஏற்கனவே ஏகப்பட்ட கடன் அது இல்லாம நீ படிச்சு பெரிய வேலைக்கு போகலாம் எதுக்கு இந்த வேலையை செய்யணும் என்பது போல் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் கோதை ஏன் இன்னும் ஆர்டர் எடுக்கலா என கார்த்தியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுனும் வருகிறார் ரா மெட்டீரியல் அப்படியே இருப்பதால் நமக்கு லாஸ் தான் ஆகிறது இதை சரி பண்ண தான் ரா மெட்டிரியல் எடுத்துக்கிட்டு நமக்கு ஆர்டர் கொடுக்கிறாங்க ஒரு கம்பெனி அதுக்காக தான் கோட் செய்துள்ளோம் என கூறுகிறார்கள்.
ஆனால் அந்த ஆர்டர் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏனென்றால் அதற்கு பல கம்பெனிகள் கோட் செய்துள்ளார்கள் அதனால் மிகவும் கடினம் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே அர்ஜுன் என்னிடம் ஒரு ஐடியா உள்ளது நம்மள மாதிரி கம்பெனி இரண்டு மூன்றுகள் தான் இருக்கும் அவர்கள் என்ன கோட் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் நாம் ஈசியாக இந்த ஆர்டரை பெற்று விடலாம் என கூறுகிறார் அதற்கு நடேசன் அவங்க கோட் செய்யறது நம்ம எப்படி தெரிஞ்சுக்க முடியும் என கேட்க அதற்கு அர்ஜுன் அவங்க கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களிடம் கொஞ்சம் லஞ்சம் கொடுத்து என்ன எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் என கூறுகிறார்.
அர்ஜுன் இவ்வாறு கூறியது கோதைக்கு இன்னும் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது என்ன மாப்ள உங்களுக்கு நேர் வழி என்றால் என்னன்னு தெரியாதா, இப்படித்தான் கோல்ட் மெடல் லிஸ்ட் வாங்கினீங்களா படிச்சவங்க படிச்சவங்க என்கிறீர்கள் குறுக்க வழியில போறதுக்கு பேரு ஸ்டேட்டர்ஜியா என கோதை திட்டி தீர்க்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் வளர்த்த பிள்ளைகளும் சரி பொண்ணும் சரி நேர்வழின்னா என்னன்னு தெரியும் நேர்வழியில் மட்டும் தான் போகணும்னு நினைப்பாங்க ஆனா நீங்க அப்படி கிடையாது இனிமேல் நேர்மைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கங்க தேவையில்லாம இன்னொரு டைம் இந்த மாதிரி நடந்துச்சுன்னா அவ்வளவுதான் என்பது போல் கூறிவிடுகிறார் கோதை.
பிறகு காரில் போகும்பொழுது நடேசன் கோதை இடம் புரிய வைக்கிறார் மாப்பிள்ளையை கவனித்தாயா எங்க போனாலும் குறுக்கு வழியில தான் பண்றாரு சேர்மன் போஸ்ட்க்கு நிக்கும் பொழுது தமிழ தப்பா காமிச்சாரு அதுக்கப்புறம் ஒரு கம்பெனில போய் கமிஷன் வாங்கினார் அப்புறம் லஞ்சம் கொடுக்க பார்த்தாரு நமக்கே கேவலமான குறுக்கு வழி ஐடியாவை கொடுத்தார் என ஒவ்வொன்றாக புரிய வைக்கிறார்.
தமிழ் விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கு ஆனா நம்ம தமிழை நம்பவே இல்ல அவன் பக்கம் இருக்கிற நியாயத்தை கூட கேக்கல தவறு நடந்த இடத்தில் இருந்து சிசிடிவி ஃபுட் ஏஜ் வாங்கிக் கொண்டு வந்தேன் அதையும் அந்த அர்ஜுன் டெலிட் பண்ணிட்டான் கண்டிப்பா அவன் தான் பண்ணி இருக்கேன் என உண்மையை கூறுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி சாமி கும்பிட்டு இருக்கும் பொழுது வசு மற்றும் சந்திரகலா வருகிறார் அப்பொழுது இன்விடேஷனை காமிக்கிறார்கள் சரஸ்வதி மற்றும் தமிழ் பெயர் இன்விடேஷன் இருப்பதால் அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் அத்தையிடம் கேட்காமல் எதற்கு இப்படி செய்தாய் என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.