அர்ஜுன் போட்ட நோபாலிலும் சிக்ஸ் அடித்த நடேசன்.! நான் தோற்றதற்கு நீ தான் காரணம் மாப்பிள வெளுத்து விட்ட கோதை.! தமிழன் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum-saraswathiyum
thamizhum-saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நடேசன் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியதை அர்ஜுன் போட்டுக் கொடுக்கிறார். உடனே அர்ஜுனின் மாமா நான் அன்னைக்கே சொன்னேன் அடிக்கடி அந்த வீட்டுக்கு போயிட்டு வரார்ன்னு அப்ப யாரும் கேக்கல இப்ப பாருங்க கோதைம்மா தோக்குறதுக்கு சாரே காரணமாகிவிட்டார் என எதிர்த்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் அனைவரும் நடேசன் திட்டுகிறார்கள்.

பத்தாதற்கு கார்த்தியும் என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க அம்மா தோக்கறதுக்கு நீங்களே காரணம் ஆகிட்டீங்களே என கூற உடனே வசு நடேசன் எனக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுவதற்கு முன்பே வசுவை திட்டி விடுகிறார் கார்த்தி. ஆனால் அர்ஜுன் இன்னும் நடேசன் கேவலப்படுத்துவது போல் பேசுகிறார் அது மட்டும் அத்தை தோற்றுப்போனதற்கு காரணம் மாமா தான்  தமிழ் சொன்னது போல் அத்தை இப்ப அத்தை நேர்மையில்லாதவராக மாறிவிட்டார் என கூறிக் கொண்டிருக்கிறார்.

எல்லாரும் நிறுத்துங்க அவரை இனி ஒரு வார்த்தை பேசினீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் இந்த காலத்துல பொண்டாட்டி வேலைக்கு போனா கேவலமா நினைக்கிற ஆண்களுக்கு மத்தியில் என்ன கம்பெனியில உட்கார வச்சு அழகு பார்த்தவர் அவர் நான் தோக்கணுன்னு எப்பவுமே நெனச்சதில்ல நான் ஜெயிச்சு முன்ன நிக்கணும்னு தான் நினைப்பாரு. எந்த இடத்துல எங்கயும் என்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.

அவர் நினைச்சிருந்தா எல்லா வேலையும் எல்லா பொறுப்பையும் அவரே பார்த்துகிட்டு என்னை வீட்டிலேயே உட்கார வைத்திருக்கலாம ஆனா அவர் அப்படி செய்யல என்ன உட்கார வச்சு அழகு பார்த்தார் என கோதை நடேசனுக்கு சப்போர்ட் செய்கிறார் அதுமட்டுமில்லாமல் ராகினி என்னம்மா நீ தோத்ததுக்கு அப்பதான் காரணம் எனக் கூற நிறுத்துடி நான் தோத்ததுக்கு காரணம்  உன் புருஷன் இப்படி போஸ்ட் அடிச்சு ஓட்டுனது உன் புருஷன் தானே நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி ஒரு காரியத்தை செஞ்சது அவங்க தானே.

அப்பா சொல்ற மாதிரி நான் சொந்த மகனையே பதவிக்காக போஸ்டர் அடிச்சு ஒட்டி ஜெயிச்சாங்க என கேவலப்படுத்தினால் எனக்கு எப்படி இருக்கும் ஆனா அவரு நான் தோத்தாலும் பரவாயில்லை என் மேல ஒரு கெட்ட பேரு வந்துட கூடாதுன்னு எவ்வளவு நேர்மையா நடந்துக்கிட்டாரு ஆனா உன் புருஷன் எல்லாத்தையும் குறுக்கு வழியில் செஞ்சு தான் என்னை அசிங்கப்படுத்திட்டான் என்பது போல் கூறி விடுகிறார் போதை.

அடுத்த காட்சியில் தமிழ் தன்னுடைய கம்பெனிக்கு வருகிறார் ஆனால் அங்கு நிறைய வேலை இருப்பதாக நமச்சி அவர்களிடம் கூறிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அசோசியேஷன் ஆபீஸிலிருந்து இருவர் வந்துள்ளார்கள் அவர்கள் உடனடியாக அசோசியேஷன் ஆபீசுக்கு செல்ல வேண்டும் பல அக்கவுண்ட்ஸ்களை பார்க்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மினிஸ்டரை மீட் பண்ண வேண்டும் என தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் தமிழ் கம்பெனி வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என கூற அது சரி வராது உடனடியாக நாம் செல்ல வேண்டும் என கூறுகிறார்கள் சரி நமச்சி அனைத்து வேலைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கிளம்பு தமிழ் சங்க வேலையை பாரு என கூறுகிறார். பிறகு டீ குடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நமச்சி போன வேலை முடிந்து விட்டதா என கேட்கிறார் சங்க வேலை நிறையாக இருக்கிறது கம்பெனிக்கு வர முடியாது போல் தோன்றுகிறது என கூற கம்பெனியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என நமச்சி கூறிவிடுகிறார்.

மெக்கானிக் செட்டை வாங்குவதை பற்றி பேசலாமா என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது பேசாமல் விட்டு விடுகிறார் ஏனென்றால் தமிழ் டென்ஷன் ஆக இருப்பதை புரிந்து கொண்டு விட்டு விடுகிறார். அடுத்த காட்சியில் நடேசன் மற்றும் கோதை இருவரும் பெட்டில் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது நான் இவ்வளவு பண்ணி என் மேல கோபமே வல்லையா என நடேசன் கோதையிடம் கேட்க நீங்க எது செஞ்சாலும் என்னுடைய நல்லதுக்கு தான் செய்வீங்க என கோதை சொல்லுகிறார் இதனால் கண்கலங்குகிறார் நடேசன்.

அதுமட்டுமில்லாமல் 30 வருடமா  உங்கள நான் பார்த்து இருக்கேன் எந்த ஒரு விஷயத்தை நான் செய்தாலும் இதுவரை ஏன் என்று கேட்டதில்லை கோதை செய்தால் சரியாக இருக்கும் என கூறினீர்கள் இந்த முறை நான் தோத்தாலும் பரவாயில்லை என ஒரு காரியத்தை செய்துள்ளீர்கள் கண்டிப்பாக என்னுடைய நலனுக்காக தான் இருக்கும் என கோதை சொல்ல நடேசன் சந்தோஷம் அடைகிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் மீது எந்த ஒரு தப்பும் இல்லை கண்டிப்பா அது ஒரு நாள் நீ புரிந்து கொள்வாய் என கூறுகிறார் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது.