அர்ஜுன் வீசிய வலையில் வசமாக சிக்கிய தமிழ்.! தராசு மாதிரி எந்த பக்கமும் சாய்ந்தாலும் பிரச்னை தான்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

Thamizhum Saraswathiyum 13 july
Thamizhum Saraswathiyum 13 july

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மெக்கானிக் செட்டை வாங்குவது பற்றி கேட்டிருந்தனே என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு தமிழ் எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான் யோசிக்கணும் என்பது போல் கூறி விடுகிறார் ஆனால் சரஸ்வதி ரவி அண்ணே எதற்காக விக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் அவங்க கிட்ட நான் ஏதாவது சொல்லனும் இல்ல எனக் கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் உமாபதி வருகிறார்.

உமாபதி கோதை கம்பெனியில் இருந்து அனுப்பிய நோட்டீசை தமிழிடம் காட்டுகிறார். இதனால் தமிழ் அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் குடும்ப செண்டிமெண்ட்டை வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டாம் தமிழ் ஹானஸ்ட்டா ஒரு முடிவுக்கு வாங்க எனக் கூறுகிறார். அதன் பிறகு தமிழ் அசோசியேஷன் ஆபிசுக்கு வர சொல்லி பேசிப் பார்க்கலாம் எனக் கூறுகிறார். அசோசியேஷன் ஆபிஸில் தமிழ் இருக்கும் பொழுது மற்றவர்கள் என்னதான் இருந்தாலும் தமிழுடைய அம்மா அதனால அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு என உமாபதி இடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை தமிழ் கேட்டுக் கொண்டிருக்கிறார் அதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். இந்த சமயத்தில் நடேசன் தமிழ் வீட்டுக்கு வந்து உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் உமாபதி திடீரென ஆர்டரை கேன்சல் செய்ததால் 20 லட்சம்   நஷ்டம் ஆகிவிட்டது எனவும் அதனை கேட்டு தான் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் லீகலா நம்ம பக்கம் நியாயம் இருக்கிறது என கூறுகிறார்.

ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அர்ஜுன் பேசுவதை கேட்டுக்கொண்டு கோதை நோட்டீஸ் அனுப்பிவிட்டார் என கூறுகிறார் இந்த நிலையில் நீ எடுக்கப் போற முடிவில் தான் நம் குடும்பம் சேருமா இல்ல இப்படியே இருக்குமா என்பது தெரியும் என கூறுகிறார் ஆனால் அதற்கு தமிழ் நான் யார் கூடவும் சேர விரும்பல எனக் கூற அதற்கு நடேசன் மற்றும் சரஸ்வதி எங்களுக்கு சேர்ந்து இருக்கணும்னு ஆசையா இருக்கு என்பது போல் கூறி விடுகிறார்.

நடேசன் வீட்டிற்கு போகிறார் அங்கு எங்க போயிட்டு வரீங்க என கேட்க அர்ஜுன் மாப்ளை பக்கத்து வீட்டுக்கு தான் போயிட்டு வர்றாரு என கூறுகிறார். இதனால் ஆமா நான் தமிழ்கிட்ட தான் பேசிட்டு வரேன் நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்லிட்டு வரேன் எனக்கு கூறுகிறார். உடனே கோதை இதுல தான் எப்படி நல்ல முடிவை எடுக்கணும்னு ஒரு தலைவருக்குள்ள தகுதி தெரியும் என்பது போல் பேசுகிறார்கள்.

ஆனால் அர்ஜுன் இதுல என்ன இருக்கு கண்டிப்பா உமாபதி சாருக்கு தான் சப்போர்ட் செய்வார் என அர்ஜூன் பேச அதற்கு நடேசன் அப்படி கிடையாது கண்டிப்பா நமக்கு தான் சப்போர்ட் பண்ணுவான் தமிழ் நம்ம சைடு நியாயம் இருக்கு என்பது போல் பேசுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி இந்த அர்ஜுன் போட்ட சூழ்ச்சியில எந்த பக்கமும் போக முடியாம நம்ம நினைக்கிறோமே இப்ப என்ன முடிவு எடுக்க போறீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறார் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் வாங்க அங்க போய் பேசிக்கலாம் என தமிழ் கிளம்புகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.