நேர்மையாக அர்ஜுன் போட்ட பலே திட்டம்.! உமாபதிக்கும் தமிழுக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரிசல்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 12
thamizhum saraswathiyum july 12

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசுவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. அதற்கு தமிழ் மற்றும் சரஸ்வதி நமச்சி மூவரும் வந்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் அங்கு சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோதையும் தமிழ் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார் அப்பொழுது தன்னை அறியாமல் சுவீட்டை எடுத்து தமிழுக்கு வைக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது புற ஏறுவதால் தலையில் தன்னை அறியாமல் தட்டப் போகிறார் கோதை.

அதுமட்டுமில்லாமல் ஒருவரை நலம் விசாரிக்கும் பொழுது நிலை தடுமாறி கீழே விழ போகிறார் கோதை அப்பொழுது தமிழ் தன்னை அறியாமல் தாங்கிப் பிடிக்கிறார். இதையெல்லாம் அர்ஜுன் ஃபேமிலி மற்றும் அர்ஜுன் ராகினி என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து தமிழ் கிளம்புகிறேன் என கிளம்பி விடுகிறார்.

அர்ஜுன் காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி காரை மறித்து இறங்கடா தம்பி உன் முகத்தை நான் பாக்கணும் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் பத்து பச்சை மிளகாய் கடித்தது போல் உன் முகம் இருக்கிறது என கேட்கிறார். நடந்த எல்லாத்தையும் பார்த்தியா அதை மட்டும் தான் நீ பார்த்திருப்ப ஆனா அதனால் உன் முகம் எப்படி இருந்தது நான் தான் மட்டும் தான் பார்த்தேன் என்பது போல் கூறுகிறார்.

மேலும்  நீ ஒரு மானங்கெட்டவன் என பேசுகிறார் கண்டிப்பாக நாங்கள் எல்லாரும் ஒன்று சேருவோம் நீ என்ன திட்டம் போட்டாலும் கண்டிப்பா அது நடக்கும் என்பது போல் கூறுகிறார். உடனே அடுத்த காட்சியில்அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என புது திட்டத்தை தீட்டுகிறார்.

அடுத்த பக்கம் சரஸ்வதி மற்றும் தமிழும் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இனி டெய்லியும் அவனை பாக்கணும் குழந்தையை பாக்கணும் என தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் கார்த்தியிடம் உமா பதியால் தான் நமக்கு மிகப்பெரிய லாஸ் ஆனது.

அதனை சரி செய்ய வேண்டும் அதற்காக என்கிட்ட ஒரு பிளான் இருக்கு எனக் அர்ஜுன் கூற  கார்த்தி நீ ஏதாவது குறுக்கு வழியில் யோசிச்சு என்ன அடி வாங்க வைத்து விடாதே என கூறுகிறார். பிறகு கார்த்தி கோதையிடம் சென்று உமாபதியால் தான் நமக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் ஆயிடுச்சு இதை எப்படி வேணாலும் சரி பண்ணிடலாம் ஆனா எல்லோரிடமும் நம்ம பேர கெட்ட பேர ஆக்குனதுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் அதனால் லீகலா நம்ம ஒரு நோட்டீஸ் அனுப்பலாம் என கூறுகிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது வசு இதெல்லாம் தவறு இப்படி செய்ய வேண்டாம் எனக் கூறியும் அதைக் கேட்காமல் கோதையும் அர்ஜுன் பேச்சை கேட்டுகிட்டு லீகலாக நோட்டீஸ் அனுப்புவதற்கு கார்த்தியிடம் கூறிவிடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இனி உமாபதிக்கும் தமிழுக்கும் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது.