தமிழை ஆள் வைத்த அடித்து கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அர்ஜுன் மற்றும் கலிவரதன்.! மேகனா கழுத்தை நெறித்த சரஸ்வதி.

thamizhum saraswathiyum today episode january 26
thamizhum saraswathiyum today episode january 26

thamizhum saraswathiyum today episode January 26 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது நான்கைந்து ரவுடிகள் வழி மறைத்து தமிழை உருட்டு கட்டையால் அடிக்கிறார்கள் அப்பொழுது தமிழ் உருட்டு கட்டையை புடிங்கி அவர்களை அடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் வலுவாக தமிழை அடித்து விடுவதால் நிலை தடுமாறு கீழே விழுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் நமச்சி தமிழை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து யார்ரா நீங்க என ஓடிவந்து தடுக்கிறார் ஆனால் நமச்சிக்கும் பலத்த அடி விழுகிறது தமிழைப் பிடித்து தள்ளி  ஓடிவிடு நான் சமாளித்துக் கொள்கிறேன் என அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் நமச்சியை காப்பாற்ற தமிழ் வந்து மீண்டும் அடி வாங்குகிறார் இப்படி இருவரும் மாறி மாறி அடி வாங்க ஊர் பொதுமக்கள் ஓடி வருகிறார்கள் அப்பொழுது ரவுடிகள் ஓடிவிடுகிறார்கள் உடனே ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள் அப்பொழுது டாக்டரிடம் நமச்சி தமிழை காப்பாற்றுங்கள் என் உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை எனக் கூற நீங்களும் ட்ரீட்மெண்ட் எடுங்க என பேசுகிறார்.

விஜயாவுக்கு ஸ்ருதி கொடுத்த தரமான அடி… மலேசிய மாமாவை நைசாக வெளியே கொண்டு சென்ற முத்து.. வசமாக சிக்கும் ரோகினி

உடனே நமச்சி போன் செய்து சரஸ்வதி இடம் தமிழ் ஹாஸ்பிடல் சேர்த்துள்ளேன் சீக்கிரம் வாங்க என கூறிவிட்டு மயங்கி விழுகிறார் பதறி அடித்து போய் சரஸ்வதி குடும்பம் வருகிறது. வந்து தமிழை பார்க்கிறார்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என கதறி அழுகிறார்கள்.

இவர் பரவாயில்ல ஆனா இவரை கூட்டிட்டு வந்தவர் தான் இப்ப ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்கிறார் என கூறுகிறார். உடனே நமச்சியை சென்று பார்க்கிறார்கள் அந்த சமயத்தில் தமிழ் கண்விழிக்கிறார் தமிழிடம் உங்களை யார் அடித்தது நமக்கு யாரும் எதிரி கிடையாது என பேசிக்கொண்டு இருக்க மேக்னா மேகநாதன் ஆள் வைத்த அடித்தது அவர்கள் மேகனா பெயரை சொல்லி தான் அடித்தார்கள் என கூறுகிறார்.

உடனே சரஸ்வதி மேகனா இருக்கும் கம்பெனிக்கு கிளம்பி போகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா இருவரும் அந்த தமிழ் தப்பித்து விட்டான் ஆனால் பலத்த அடி இடையில் வந்த நமச்சி காப்பாற்றி விட்டான் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மறைந்த பவதாரணி பாடிய பாடல்களில் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அழியாத பாடல்கள்.!

சரஸ்வதி வந்து மேக்னா வெளியே வா என கத்துக்குறார் மேகனா வெளியே வந்தவுடன்  நீ என்னா அவ்வளவு பெரிய ஆளா  தமிழ் உனக்கு நல்லது தானே செஞ்சாரு இப்ப கூட எங்க கம்பெனில தவறான பொருளை வைக்கும்போது உன்னை மாட்டி விட வேண்டாம் என்று சொன்னாரு ஆனா நீ என்ன ஆள் வச்சு கொலை பண்ற அளவுக்கு வந்துட்ட அடுத்தவன் புருஷன் மேல உனக்கு என்ன அவ்ளோ அக்கறை என பேசுகிறார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலிவரதன் மொபைலை வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் இன்னும் ஆத்திரத்துடன் சரஸ்வதி மேகனா கழுத்தை பிடித்து நெரிக்க பார்க்கிறார் அதுமட்டுமில்லாமல் கடைசியாக அவருக்கு ஏதாவது ஒன்னா உசுரோட விட மாட்டேன் என வான் பண்ணி விட்டு வருகிறார்.

அதேபோல் அர்ஜுனையும் கார்த்தி அடித்து என் அண்ணனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ்வளவுதான் என கார்த்தியும் மிரட்டுகிறார் உடனே இவர்கள் சென்றவுடன் மேக்னா அர்ஜுனிடம் நான் தான் செய்யக்கூடாது என்று சொன்னேன்ல அதுக்கப்புறம் ஏன் செஞ்சீங்க என கேட்க அர்ஜுன் உங்க மாமா தான் செய்ய சொன்னார் என மாமாவை போட்டுக் கொடுக்கிறார்.

சூர்யா சார் கூடிய சீக்கியம் மகாகிட்ட முரத்தாலையே மொத்து வாங்கபோரிங்க.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ

உடனே தன்னுடைய மாமாவிடம் நீங்க எதுக்கு இப்படி செஞ்சீங்க அது எவ்வளவு பெரிய பாவம் என பேச வேலைக்கார அம்மாவும் கலிவரதனை மாமா சார் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என கேட்க உடனே வேலைக்காரி நீ எல்லாம் எதுக்கு பேசுற என மேகனாவின் மாமா பையன் பேசுகிறார் அதற்கு மேகனா அவங்க என் அம்மா மாதிரி தேவை இல்லாம பேசாத என திட்டுகிறார்.

உடனே கலிவரதன் உன்னை நான் எப்படி ஆசை ஆசையா வளர்த்தேன் உனக்கு ஒரு கஷ்டம் என்றல் தாங்கிக்க முடியாது என அழுது புலம்பி அதனால்தான் தமிழை அடிக்க ஆள் வைத்தேன் என பேசுகிறார் தப்பா இருந்தா மன்னிச்சிடு எனக் கூறுகிறார் உடனே அடுத்த காட்சியில் மேகனா உள்ளே சென்றவுடன் கலிவரதனின் மகன் என்ன இப்படி ஆயிடுச்சு என கேட்க கொஞ்ச நாள் எல்லாத்தையும் ஓரங்கட்டி வைக்கணும் என பேசுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.