thamizhum sarasawthiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் கோதை வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நமச்சி வருகிறார் நீ எதுக்குடா இங்க வந்த என நடேசன் கேள்வி கேட்க அப்பொழுது தமிழ் ஆவேசப்பட்டு நமச்சியை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் எனக்கு ஒரு நண்பன் இருந்தான் அவன் இனி செத்துட்டான் எனக்கு நண்பனே கிடையாது என பேசுகிறார்.
அதேபோல் சரஸ்வதி எந்த பிரச்சனையா இருந்தாலும் அவர்ட்ட சொல்றனோ இல்லையோ உங்க கிட்ட தான் நான் சொன்னேன் நீங்க ஏண்ணா இப்படி ஒரு துரோகத்தை செஞ்சீங்க இவ்ளோ பெரிய விஷயமாகும் நினைச்சு கூட பாக்கல என்ன பேசுகிறார் நமச்சி. அதுமட்டுமில்லாமல் தமிழ் காலை பிடித்துக் கொண்டு நான் உன்னை விட்டு போகவே மாட்டேன் ஒரு நாயாக இருந்தாலும் கடப்பேன் ஆனா உன்னை விட்டு போனா எனக்குன்னு யாருமே கிடையாது என பேசுகிறார்.
மாட்டுப் பொங்கலும் அதுவுமாக மனைவிக்கு முத்தம் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி.! வைரலாகும் புகைப்படம்
ஆனாலும் தமிழ் நமச்சி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இருகின்ற நெருப்பில் குளிர் காய்வது போல் அர்ஜுன் மேகனாவை சந்திக்கப் போகிறார் அப்பொழுது மேகனாவை சந்தித்த அர்ஜுன் எங்க அம்மாவையும் அப்பாவையும் ஏமாத்தி மொத்த சொத்தையும் எழுதி வாங்கிட்டாங்க அவங்க அது மட்டும் இல்லாம எங்க அப்பா அக்காவுடைய சாவுக்கு அவங்க தான் காரணம் அதனால தான் நான் அவுங்களை பழிக்கு பழகி வாங்குறேன்.
இது தெரியாம நீங்க தான் அவங்களை காப்பாத்திட்டீங்க இப்பயாவது உண்மையை தெரிஞ்சுக்கோங்க உங்களுக்கு தமிழ்கிட்ட பழிவாங்குவதற்கு ஏதாவது சப்போர்ட் வேணும்னா நான் முழு சப்போர்ட் செய்வேன் தமிழை பழி வாங்கறது தான் என்னோட நோக்கமே என்பது போல் அர்ஜுன் கூற உடனே நான் யாருன்னு தெரியாம விளையாண்டுட்டான். இனிமேதான் என்னோட முழு உருவத்தையும் பாக்க போறான் என மேகனாவும் கூறுகிறார்.
முத்து, ஆளவந்தான் படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித் படம்.. எது தெரியுமா.?
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் மேகனாவும் அர்ஜுனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் இனிமேல் தமிழுக்கு ஏழரை தான் தமிழ் கால் வைக்க இடம் எல்லாம் கண்ணுபடியாக கண்ணிவெடியாக மாறப் போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்