டேய் அர்ஜுன் உண்மை என்னைக்கும் ஜெயிக்கும்டா வசமா மாட்டிக்கிட்டியா.. ஆதாரத்துடன் நிரூபித்த தமிழ்.. விழி பிதுங்கி நிற்கும் கலிவரதன் .

thamizhum saraswathiyum today episode february 16
thamizhum saraswathiyum today episode february 16

thamizhum saraswathiyum today episode February 16 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் குப்பையை கிளறிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார் என் சரஸ்வதியை என்னால காப்பாத்த முடியல என புலம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு வயதானவர் உனக்கு நல்ல வழியை பிறக்கும் என கூப்பிடுகிறார் அப்பொழுது கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கு கொலை நடந்ததே அவங்க உனக்கு வேண்டப்பட்டவங்களா என கேட்கிறார் ஆமாய்யா கொலையை யாரோ செஞ்சுட்டு என் பொண்டாட்டி மேல பழிய போட்டுட்டாங்க என தமிழ் கூற யார் அந்த கர்ப்பிணி பெண்ணா என கேட்கிறார்.

தமிழ் ஆமாம் அய்யா எனக் கூற உடனே நடந்த அனைத்தையும் கூறுகிறார் ஒரு ஐம்பது வயது அம்மாவும் ஒரு இளம் பெண்ணும் ஓடி வந்தாங்க அவர்களை ஒரு ஐம்பது வயது நபரும் ஒரு இளம் பையனும் துரத்திகிட்டு வந்தாங்க முதலில் அந்த அம்மாவை கொன்னுட்டாங்க ஐயோ அம்மா என அந்த பாப்பா அழுதது உடனே அந்த பாப்பாவையும் கொன்னுட்டாங்க. அந்த சமயத்தில் இன்னொரு கார் வந்துருச்சு உங்களை நம்புனது பிரயோஜனமே கிடையாது என சொல்லிவிட்டு கிளம்பிட்டாங்க.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

அந்த கர்ப்பிணி பெண் ஓடிவந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சொன்னாங்க ஆனா அதற்குள் ஓடிட்டாங்க அந்த கம்பேனியில் இருந்து நிறைய பேர் வந்து அடிப்பாவி கர்ப்பிணியா இருந்துட்டு இப்படி ரெண்டு கொலை பண்ணிட்டியே என சொன்னாங்க ஆனா அந்த கொலைய செஞ்சது இவங்க கிடையாது என பேசிக் கொண்டிருக்கிறார். உடனே இதை வந்து கோர்ட்டில் சொல்ல முடியுமா என கேட்க எனக்கு கண்ணு தெரியாது  எனக்கு யாருமே கிடையாது ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாற்றுவது நான் செஞ்ச புண்ணியம் தான் நான் வந்து சொல்றேன் எனக் கூறுகிறார்.

அடுத்த நாள் அனைவரும் காத்துக் கொண்டிருக்க அப்பொழுது அர்ஜுன் மற்றும் கலிவரதன் கெத்தாக நிற்கிறார்கள். சரஸ்வதியை  பார்த்து தமிழ் பேசுகிறார் உடனே அடுத்த கேஸ் உங்களது தான் எனக் கூற உடனே கூண்டில் ஏறுகிறார் சரஸ்வதி. அப்பொழுது எதிர் தரப்பு வக்கீல் வாதாடி விட்டு அதிகபட்ச தண்டனையாக  ஆயுத தண்டனை கொடுக்க வேண்டும் என கூற தமிழ் தரப்பு வக்கீல் வாதாட ஆரம்பிக்கிறார்.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

எங்களிடம் ஒரு சாட்சி இருக்கிறது எனக் கூறியவுடன் அர்ஜுன் மிரண்டு போயிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அந்த வயதானவர் கண்ணு தெரியாதவர் அவர் சாட்சி செல்லுபடி ஆகாது எனக் கூறுகிறார்கள் ஆனால் அவர் சொல்வதை கேளுங்கள் என தமிழ் வாதாடுகிறார். அந்த வயதானவர் நடந்த அனைத்தையும் கூறுகிறார் இந்த பொண்ணு காப்பாத்த தான் வந்துச்சு என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நடந்த அனைத்தையும் டேப்ரி கார்டில் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளேன் என கூறுகிறார் அனைத்தையும் ஜட்ஜ் முன்பு போட்டு காட்டுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சில நபர்களை விசாரித்தால் உங்களுக்கே உண்மை தெரிய வரும் அங்கு இருந்தவர்கள் குரலை கரெக்டாக அடையாளம் காட்டுவார் அவர்களை பேச சொன்னாலே போதும் என கூறுகிறார் தமிழ்.

அதேபோல் நான்கு பேரை அழைத்து பேச சொல்ல கலிவரதன் மற்றும் அவர் மகன் பேசும் பொழுது இவர்கள்தான் அந்த நபர்கள் என அடையாளம் காட்டி விடுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.