thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் மேக்னா மற்றும் கமலா அம்மா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கமலா அம்மா இங்கிருந்து பெங்களூர் செல்வதற்குள் உங்கள் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என கூறுகிறார். அதற்கு திருமணம் ஆகிவிட்டால் நான் ஏன் பெங்களூர் வரப்போகிறேன் என மேக்னா கூற அதற்கு கமலா ஆசையை பாரு என நக்கலாக பேசுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் மேகனா எப்படி இருக்கிறார் என விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர் வீட்டுக்கு வந்து விட்டார் நலமாக இருக்கிறார் என பேசிக் கொண்டிருக்கும்போது அவரை அழைத்து விருந்து வைக்க வேண்டும், உன் உயிரை காப்பாற்றிய வரை அவர் தான் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தமிழ் இப்பொழுது உடனே போன் பண்ணி நாளைக்கு விருந்துக்கு வர சொல்கிறேன் என போன் பண்ண போகிறார் அதற்கு நமச்சி முதலில் தடுக்க அவர் பேச்சியை கேட்காமல் தமிழ் போன் பண்ணி விருந்துக்கு கூப்பிடுகிறார்.
மேகனாவும் கமலா அம்மாவும் நாளைக்கு வீட்டிற்கு போனால் கண்டிப்பாக திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த நாள் காலையில் நமச்சி மேகனாவை அழைக்க வருகிறார் அப்பொழுது எவ்வளவோ முயற்சி செய்து தடுக்க பார்க்கிறார் நமச்சி ஆனால் மேகனா பிடிவாதமாக 12 மணிக்குள் போக வேண்டும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது போல் கேட்கிறார் உடனே தமிழ் வீட்டிற்கு கிளம்புகிறார்கள் அங்கு போய் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமச்சி சரஸ்வதி மற்றும் தமிழுக்கு திருமணமாகிய புகைப்படத்தை பார்த்து விடுகிறார்.
அந்த புகைப்படத்தை மறைத்து வைக்கிறார். சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில் கமலா அம்மா பையனா நல்லா வளர்த்து இருக்கீங்க உங்க பையனுக்கு ஒரு பொண்ணு நல்ல பொண்ணா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள் இவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு எதற்காக மறுபடியும் கல்யாணம் பண்ணனும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கல்யாணம் ஆகிடுச்சா விளையாடாதீங்க தமிழ் என மேகனா பேசுகிறார்.
BIGGBOSS 7 : இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.. தப்பிய நிக்சன்.. அறிவித்த விஜய் டிவி
தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நமச்சி கூறியதாக கமலா அம்மா கூறுகிறார் அதேபோல் மேகனாகவும் உண்மையாலுமே நீங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இல்ல வேற ஏதாவது பிராங் பண்றீங்களா என கேட்க நான் ஏன் பிராங்க பண்ண போகிறேன் சரஸ்வதி தான் என்னுடைய வைஃப் சரஸ்வதி பேர் தான் கம்பெனி இருக்கிறது என பேசுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தையும் பிறக்கப் போகிறது என பேச உடனே நமச்சியை பார்த்து கமலா அம்மா இவர்தான் கல்யாணம் ஆகவில்லை என கூறினார் என பேச உடனே கோதை அதட்டி என்ன நமச்சி இதெல்லாம் என கேட்கிறார் ஆமா நான் தான் பொய் சொன்னேன் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.