thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனாவின் மாமா மேகனா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் தமிழரசன் இவர் தான் என ஸ்லைடில் கம்பெனியில் வேலை செய்யும் அனைவருக்கும் காட்டி விடுகிறார் இதனால் மேகனா கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறார் இன்னும் தமிழிடம் நாம் முழுமையாக கேட்கவில்லை அதற்குள் இப்படி மாமா சொல்லிவிட்டார் என புலம்புகிறார்.
அடுத்த காட்சியில் மேகனாவின் மாமா தாலி வாங்கி தமிழுக்கும் மேகனாவுக்கும் திருமணம் செய்து வைத்து விடலாமா என பேசுகிறார் இதற்கு இவ்வளவு டென்ஷன் ஆகிற டா அதெல்லாம் எதுவும் நடக்காது அங்க என்ன நடந்துச்சுன்னு நமச்சி என்னிடம் சொல்லிட்டான். தமிழ் கிட்ட லவ்வ சொல்றேன்னு நமச்சி கிட்ட தான் லவ்வ சொன்னான். அது மட்டும் இல்லாம தமிழ் ஹெல்ப் பண்ணதுக்கு என் தேவதனு சொன்னான் அதுதான் இவ லவ்வுன்னு நெனச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கான்.
இப்ப நாம எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம் இதுக்கு மேல உண்மை தெரிஞ்சாலும் நமக்கு கவலை இல்லை இவ கூனி குறுகி வீட்டிலேயே இருக்கணும் மொத்த சொத்தையும் நம்ம ஆட்டைய போடணும் என தன்னுடைய மகனிடம் மேக்னாவின் மாமா பேசிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் கோதை கோவிலுக்கு சென்று வருகிறார் அப்பொழுது எதற்காக சோகமாக இருக்கிறாய் என கேட்க ராகினியை பார்த்தேன் அவள் ரொம்ப கஷ்டப்படுறா அர்ஜுன வெளியில எடுக்க முடியலன்னு அழுகுறா என வீட்டில் சொல்லும் பொழுது கார்த்தி மிகவும் டென்ஷன் ஆகி அவன் நம்பளையே எனிமியா போட்டியாக தான் பார்க்க போற அவளுக்கு எதுக்கு நீங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு சப்போர்ட் பண்றீங்க தேவை இல்லாம எதுக்கு பேசுறீங்க என கார்த்தி கத்துகிறார்.
எந்த வயதிலும் சாதிக்கலாம்.. 58 வயதில் இமாலய சாதனை படைத்த முத்துக்காளை வாழ்த்தும் ரசிகர்கள்..
உடனே தமிழிடம் கோதை கேட்க நமக்கு 1008 வேலை இருக்கு தேவையில்லாம எதுக்கு நம்ம அடுத்த பிரச்சனையை கையில தூக்கணும் என தமிழும் திட்டவட்டமாக சொல்லிவிடுகிறார். உடனே கோதை திருட்டுத்தனமாக ராகினிக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ராகினி நான் ஒருத்தி புள்ளைய பார்ப்பன கம்பெனிய பாப்பனா கம்பெனியில அவங்க கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல எனக்கு செத்துடலாம் போல இருக்கு என அழுகிறார்.
உடனே கோதை அப்படியெல்லாம் பேசலாமா நான் இருக்கேன் எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம் நாளைக்கு போய் நம்ம தொழிலாளிகள் இடம் பேசலாம் எனக் கூறி சாப்பிட கூறுகிறார். அடுத்த நாள் காலையில் வக்கீலை பார்க்க சென்றுள்ளார்கள் அங்கு வக்கீல் இடம் அர்ஜுனை வெளியே எடுப்பது பற்றி பேசுகிறார்கள் ஒரு அம்மாவா என் பொண்ணு கஷ்டப்படறத என்னால பாக்க முடியல வேற வழியே இல்ல நான் இரண்டு பக்கமும் நின்று கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன் என பேசுகிறார்.
பிரதீப்ப காலி பண்ணியது பத்தாதுன்னு இப்ப லோகேஷா… நைசாக கோர்த்து விட்ட மாயா
உடனே வக்கீல் எப்படி இருந்தாலும் ஆறு மாசம் உள்ளதான் இருந்தாகணும் வேணா ஜாமீன் வாங்கலாம் அதற்கு அந்த தரப்பு வக்கீல் மறுப்பு தெரிவிக்காமல் இருக்கணும் அதனால நீங்க அந்த தரப்பு வக்கீல் கிட்ட போய் பேசுங்க என வக்கீல் திட்டவட்டமாக கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.