தமிழிடம் ப்ரபோஸ் செய்த மேகனா.. அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் நமச்சி…

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வெகு நாட்களாக தமிழுக்கு தொல்லை கொடுத்து வந்த அர்ஜுனை மேகனா ஜெயிலில் உட்கார வைத்து விட்டார் அதுமட்டுமில்லாமல் கம்பெனிக்கும் சீல் வைத்தார் ஆனால் தமிழ் வருத்தப்பட்டு 30 வருட கம்பெனியை மூடக்கூடாது என எண்ணி மினிஸ்டர் இடம் போய் பேசி கம்பெனியை திறக்க வைத்தார்.

ஆனால் இதையெல்லாம் செய்தது ராகினி தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர், இதனை எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என மேகனா தமிழை அழைத்துக் கொண்டு ராகினிடம் சென்று பேசுகிறார் உன் கம்பெனியை திறக்க சொன்னது தமிழ் தான் மினிஸ்டரிடம் பேசியது தமிழ் தான் என கூற நான் ஓபன் பண்ண சொன்னதால் தான் ஒப்பன் பண்ணுனாங்க இப்ப அதையும் நீங்க தான் செஞ்சது மாதிரி சொல்றீங்களா என ராகினி எதிர்த்து பேசுகிறார்.

மாயா உன்ன பத்தி அப்படி சொல்லிட்டா டா யாரையும் நம்பாதே..! சூனியக்காரி பற்றி விக்ரமிடம் புட்டு புட்டு வைத்த தங்கை.

இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க தமிழுக்கு பிறந்தநாள் வருவதால் அதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்கிறார்கள் பார்ட்டி பிரியாணி என அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க தமிழிடம் உன்னோட கோர்ட்டை கொடு ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என கேட்டு நமச்சி அந்த கோர்ட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மேகனாவின் வேலைக்கார அம்மா இப்பொழுது தமிழ் தனியாக தான் இருக்கிறார் உன் மனதில் உள்ளதை கூறு என கூறுகிறார்.

அந்த சமயத்தில் அங்கு நிற்பது நமச்சி என தெரியாமல் மேகனா தமிழிடம் ப்ரொபோஸ் செய்கிறார்.  இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நமச்சி அதிர்ச்சியில் உறைகிறார் ஏனென்றால் இவர் செய்த சிறிய தவறால் எங்கேயோ போய் நிற்கிறது என எண்ணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். நமச்சி வந்ததும் போட்டோ எடுத்துட்டியா கோர்ட்டை கொடு என தமிழ் கோர்ட்டை மாட்டிக்கொண்டு மேகனாவிடம் சென்று நிற்கிறார்.

கோட் ரேட் பற்றி பேசியதால் ரவீனா உறவினர்களை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிக் பாஸ்.! கண்ணீரில் குடும்பம்

மேகனாவிடம் சென்று என்னுடைய வளர்ச்சிக்கு நீங்க தான் காரணம் என்பது போல் பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் மேகனாவிடம் பழகின கொஞ்ச நாள்களையே உங்களுடைய கேரக்டர் உங்களுடைய திறமை ஹெல்பிங் மைண்ட் என எல்லாத்துலயும் என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க இது எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு என் லைஃபை வேற மாதிரி மாத்திட்டீங்க கடவுள் எனக்கு அமைச்ச தேவதை நீங்கதான் என்பது போல் கூறுகிறார்.

ஆனால் மேகனா காதலை புரிய வைப்பது போல் தமிழ் பேசுகிறார் என எண்ணி சந்தோஷத்தில் மிதக்கிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் என் வாழ்க்கை முழுக்க என் லைஃப்ல நீங்க இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என மேகனாவிடம் கூற இன்னும் பட்டர்பிளை பறப்பது போல் சந்தோஷத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

சிவாஜியை பளாரென அறைந்த பத்மினி.. சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் பார்த்த தரமான வேலை.. யாராலும் மறக்கவே முடியாது