Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் தன்னுடைய திருமண நாளை கோலாகலமாக கொண்டாட ரெடியாகி கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என கூற அப்பொழுது சரஸ்வதி வந்து நிறுத்துடா உன் சர்ப்ரைஸை தம்பி என கூறுகிறார். உடனே அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார் ஏனென்றால் ஆள் வைத்து தாக்கப்பட்ட ஆதி அவர்களுடன் வந்துள்ளார்.
ஆதி அர்ஜுனனை பார்த்து நான் வருவேன் என்று எதிர்பார்க்கல என பேசுகிறார் உடனே கோதை நடேசன் வசு என அனைவரும் உன் முகத்திரை இன்னைக்கு கிழிக்க போறோம் என பேச ஆரம்பிக்கிறார்கள் அப்பொழுது கார்த்தி நீ என்ன பேசுற ஏன் இப்படி பேசுற என வசுவை பார்த்து கேட்கிறார் உடனே நீ சும்மா இரு கார்த்தி இவ்வளவு நாளா நீ நம்பிகிட்டு இருக்கியே உன் பிரண்டு அர்ஜுன் எவ்வளவு மோசமானவன் தெரியுமா என பேசுகிறார்.
அது மட்டும் இல்லாமல் வசு ஆதியிடம் அந்த வீடியோவை போட்டு காமி எனக் கூற வீடியோவை போடுகிறார் வீடியோ ஸ்டக் ஆகிறது பிறகு வீடியோ ஓடுகிறது அப்பொழுது தமிழ் அர்ஜுனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறார் ஆனால் அர்ஜுன் தன்னைத்தானே ஆள் வைத்து குத்திக் கொண்டது தென்னந் தெளிவாக தெரிகிறது இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இந்த ஆதாரம் போதுமா அர்ஜுனனை பார்த்து கேட்கிறார்கள். கார்த்தி கடுப்பாகி அர்ஜுனனை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உன்ன போய் நம்புன என் அண்ணனை கூட நான் நம்பலையே என வருத்தப்படுகிறார்.
அடுத்த காட்சியில் ராகினிடம் அனைவரும் நீ என்ன முடிவு எடுக்கப் போகிற என கேட்கிறார்கள் உடனே ராகினி அர்ஜுன் தமிழை குத்தவில்லை என்பது எனக்கு எப்பவோ தெரியும் என பெரும் அணுகுண்டை வீசுகிறார். இதனால் கோதை அதிர்ச்சி அடைகிறார் நடேசன் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தானே இன்னும் அவனுக்கு சப்போர்ட் பண்றியா என திட்டுகிறார். உடனே அர்ஜுன் என்ன சொன்னான் என்பதை அனைவரிடமும் கூறுகிறார் அர்ஜுன் தன்னுடைய அப்பாவுக்கு ஒரு கம்பெனி இருந்ததாகவும் அதனை ஏமாற்றி தான் கோதை மற்றும் நடேசன் வாங்கியதாகவும் ராகினி இடம் அர்ஜுன் கூறிக் கொண்டிருக்கிறார்.
இதனால் ராகினி மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அக்கா கல்யாணமாகாமல் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமும் உங்கள் அம்மா மற்றும் அப்பா தான் அதற்காக தான் அவர்களை பழி வாங்குவதற்காக தான் உங்க வீட்டுக்குள் வந்தேன் இதை எப்படி உன்னிடம் என்னால் சொல்ல முடியும் என ராகினி மண்டையை கழுவுகிறார். ராகினியும் அர்ஜுனை முழுமையாக நம்பி விடுகிறார் உடனே ராகினி எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் அம்மா என கோதையை பார்த்து கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.