Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் சரஸ்வதி உன் வண்டவாளத்தை படம் போட்டு காமிப்பேன் என கூறியதால் அர்ஜுன் மிகவும் டென்ஷன் ஆக இருக்கிறார் அப்பொழுது அர்ஜுனின் மாப்பிள்ளை சரஸ்வதி ஒரு ஆளுன்னு அவ சொன்னதையே நினைச்சுகிட்டு டென்ஷனா இருக்கியே மாப்பிள்ளை என கேட்க அதற்கு அர்ஜுன் அவளை சாதாரணமா எடை போடக்கூடாது எதுலையாவது கண்டிப்பா சிக்க வைக்கணும்னு ட்ரை பண்ணுவா ஆனா இப்ப ஏதோ எவிடன்ஸ் கிடைச்சிருக்கு அதனாலதான் இப்படி மிரட்டுறா எனக் கூற உடனே அர்ஜுன் அந்த வீடியோ தான் எனக்கு டவுட்டா இருக்கு எதுக்கும் ஒரு டைம் நீங்க போய் செக் பண்ணிட்டு வாங்க என அக்காவின் கணவரிடம் கூற உடனே அவர் சும்மா கேட்டா தர மாட்டாங்க கொஞ்சம் பணம் கொடுங்க நான் போய் விசாரிச்சுட்டு வரேன் என பேசுகிறார்கள்.
அடுத்த காட்சியில் கோதை மற்றும் நடேசன் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க சாப்பாட்டில் காரம் அதிகமாக இருப்பதால் என்ன சமைச்சு இருக்கீங்க இதெல்லாம் ஒரு சாப்பாடா இவ்வளவு காரம் சாப்பிட்டால் என்னத்துக்கு ஆகிறது? என அர்ஜுன் குடும்பத்தை பார்த்து கோதை கேட்க உடனே அர்ஜுனின் அக்கா நாங்க என்ன வேலைக்காரியா நீங்க சொல்றதெல்லாம் செய்யறதுக்கு என கேட்கிறார் அதுமட்டுமில்லாமல் இப்ப என்னன்னு தானே கேட்டாங்க அதுக்கு ஏன் இவ்வளவு சண்டை புடிக்கிறீங்க என வசு கேட்க வசுவிடம் உங்க அம்மாவை மட்டும் மரியாதை நடத்துறாங்க நாங்க மட்டும் வேலைக்காரியா இந்த வீட்ல சமைச்சு கொடுக்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் ராகினி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆனாலும் கோதை நான் இப்ப எதுவுமே கேட்கலையே எதுக்கு இப்படி வம்பு இழுக்கறீங்க என பேசிக்கொண்டு இருக்க வீட்டோட மாப்பிள்ளையா என் மகன் வந்தது தப்பு தான் அதனால தான் இப்படி கேவலமா மரியாதை கொடுக்குறீங்க என வாய்க்கு வந்தபடி பேசி உடனே ராகினி அவங்கள நீங்க மதிக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல இப்படி எல்லாம் மதிச்சிங்கனா நான் எப்படி இங்கே இருக்க முடியும் என ராகினி கேட்கிறார்.
உடனே நாங்க இங்கிருந்து கிளம்புறது தான் நல்லது என பேசிக் கொண்டிருக்க எனக்கு அண்ணா நகர் வீட்டை எழுதி கொடுங்க ஏன் கணவர் தானே இந்த கம்பெனி வளர்ச்சிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டார் என ஒரே போடாக போடுகிறார் ராகினி வேறு வழியில்லாமல் கார்த்தி என அனைவரும் பேசியும் கேட்காத ராகினி கோதையும் வீடு தானே வேணும் நான் எழுதிக் கொடுக்கிறேன் என கூறிவிடுகிறார்.
பிறகு நடேசன் மற்றும் கோதை இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது இதுவரையும் நமக்கு தெரியாம தான் நடந்துச்சு இப்ப சொத்துக்காக தான் ஆசைப்படறாங்க நல்லா தெளிவா தெரியுது எப்படியாவது அர்ஜுனோட வண்டை வளத்த கண்டுபிடிக்கணும் நம்ம ராகினிக்கு ஒரு பிரச்சனையும் வராது ராகினி அவன நம்பரதால அவளை எதுவும் அவன் பண்ண மாட்டான் என பேசுகிறார்கள் மற்றொரு பக்கம் அர்ஜுன் கம்பெனியில் நமச்சி அர்ஜுன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தேவையில்லாத வேலையில் நீங்க மூக்க நுழைக்காதீங்க நமக்கு லட்சியம் தான் முக்கியம் அர்ஜுன் எப்படியாவது போயிட்டு போறான் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் சரஸ்வதி வருகிறார் வீட்டிற்கு போக வேண்டும் என தமிழிடம் கூற இருவரும் பேசிக் கொள்ளாமல் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் பிறகு ஒரு வழியாக வீட்டிற்கு கிளம்புகிறார்கள் போற வழியில் பூ வாங்கி கொண்டு செல்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.