இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடில் சரஸ்வதி வசுவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். வசுவின் அம்மா வசுகுன்னு நடந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறாள். மருத்துவரிடம் வசு எந்த நிலையில் இருக்கிறார் என அனைவரும் விசாரிக்கின்றனர்.
அப்போது மருத்துவர் வசு மிகவும் மோசமான சூழலில் இருக்கிறார் எனவும் குழந்தை தாய் இருவரில் யாரேனும் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என கூறுகிறார். இதனால் அனைவரும் மனம் உடைந்து பதறி அழுகின்றனர். அது மட்டுமல்லாமல் வசவக்கு சுகப்பிரசவம் நடக்காது ஆப்ரேஷன் தான் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். ரத்தம் பற்றாக்குறையாக இருக்கிறது உடனே ரத்தம் தேவை எனவும் கூறுகிறார்.
உடனே சரஸ்வதி நானும் வசுவும் ஒரே பிளட் குரூப் தான் என் ரத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். அதற்கு அவரது மாமனாரும் ஆமாம் இருவருக்கும் ஒரே ரத்தம் தான் எனக் கூறுகிறார். சரஸ்வதி வசுவிற்கு ரத்தம் கொடுக்க சென்று விடுகிறார்.
ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்து உட்காருகிறார் அப்போது நர்ஸ் உங்களுக்கு டயர்ட் ஆக இருக்கும் நீங்கள் ரெஸ்ட் எடுத்துக்கோங்க என சொல்கிறார். வசு விட்டு வேலைக்கார பொண்ணு உங்களுக்கு ஏதாவது ஜூஸ் வாங்கி வரவா என சரஸ்வதி இடம் கேட்கிறார்.
அந்த நேரத்தில் ரோகினியின் குடும்பம் வருகிறது. வந்ததும் வசு எப்படி இருக்கிறார் என விசாரித்து விட்டு சரஸ்வதியை பார்த்து இவள் ஏன் இங்கே இருக்கிறார் என கேள்வி கேட்கின்றனர். சரஸ்வதி தான் வசுவை மருத்துவமனையில் அனுமதித்தார் மற்றும் ரத்தமும் கொடுத்துள்ளார் சரஸ்வதி இல்லை என்றால் அவ்வளவுதான் என சரஸ்வதியின் மாமனார் கூறுகிறார்.
மேலும் சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்து வசுவிற்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்றும் தாயும் குழந்தையும் நல்லா நன்றாக இருக்கிறார்கள் எனக் கூறுகிறார். வசுவின் அம்மா மருத்துவருக்கு நன்றி கூறுகிறார் அப்போது டாக்டர் நன்றியை எனக்கோ கடவுளுக்கோ சொல்லாதீங்க.
சரியான நேரத்தில் வசுவை மருத்துவமனையில் சேர்த்து ரத்தமும் கொடுத்த இவங்களுக்கு சொல்லுங்க இவங்க தான் இன்னைக்கு வசுவும் குழந்தையும் உயிரோடு இருக்குறதுக்கு காரணம் என கூறுகிறார். மேலும் குழந்தையை பார்க்கலாமா என கேட்டதும் குழந்தையை பார்க்கலாம் வசுவை நார்மல் வார்டுக்கு கொண்டு வந்ததும் பார்க்கலாம் என டாக்டர் கூறுகிறார்.
நர்ஸ் குழந்தையை வெளியே தூக்கி வருகின்றார். அனைவரும் குழந்தையை பார்த்து கொஞ்சுகின்றனர். சரஸ்வதி குழந்தையை தூர நின்று எட்டி பார்க்கிறார். உடனே வசுவின் அம்மா குழந்தையை சரஸ்வதியின் கையில் எடுத்துக்கொண்டு கொடுக்கிறார்.
உன்னை நான் எவ்வளவோ கஷ்டப்படுத்தி இருக்கேன் அவமானப் படுத்திருக்கேன் ஆனா நீ எதையும் மனசுல வச்சுக்கல வசுவை உன்னோட சொந்த தங்கச்சியா நினைச்சு பாசமா இருந்தா அதனால தான் எங்கயோ இருந்த நீ அவளுக்கு ஒரு கஷ்டம்னு மனசுல தோனி ஓடி வந்துட்ட இந்த குழந்தையை பாரு என அவள் கையில் கொடுக்கிறார்.
சரஸ்வதியும் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார் பின்பு தமிழ் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கிறார் சரஸ்வதி வருவார் என பின்பு தமிழ் சரஸ்வதிக்கு போன் கால் செய்கிறார் அப்பொழுது சரஸ்வதி நடந்த அனைத்தையும் கூறுகிறார் தமிழும் சந்தோஷப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் வசுவை பார்த்துவிட்டு வருகிறேன் என சரஸ்வதி கூற ஓகே என தமிழ் கூறுகிறார் உடனே தமிழ் தன்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஓடி சென்று எதையோ எடுக்க போகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.