தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கடைசி நேரத்தில் என்ன செய்ய முடியும் என தமிழ் மற்றும் சரஸ்வதி பேசிக்கொண்டிருக்கும் பொழுது நடேசன் என் கூட வாங்க கோயில் வெளியில் போஸ்டர் ஒட்டி இருக்ங்கல்ல அங்க வாங்க என அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு நமச்சியை வீடியோ எடுக்க சொல்கிறார் நடேசன். அப்பொழுது தமிழை பக்கத்தில் நிற்க சொல்ல தமிழ் யோசிக்கிறார் பிறகு பக்கத்தில் நிற்கிறார்.
அப்பொழுது நடேசன் இந்த போஸ்டர் அடித்து ஒட்டியது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் தமிழ் தோக்கணும் என்று இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டார்கள். இந்த போஸ்டரை பார்த்து தயவுசெய்து ஒரு முடிவுக்கு வர வேண்டாம் தமிழ் தப்பு செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் தான் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தமிழ் ரொம்ப நல்லவன் சங்கத்துக்கு நல்ல கட்டடம் கட்டிக் கொடுக்க திட்டம் சொல்லி இருக்காரு முதலாளிகள் பிரச்சினையை தீர்த்து வச்சிருக்கார். எல்லா ஓனருக்கும் கால் செய்து பேரம் பேசியது தமிழ் என குற்றம் சொன்னப்ப கூட நிரூபிச்சிட்டாரு இப்படி எத்தனை முறை தான் ஒருத்தன் நல்லவன்னு நிரூபிச்சிட்டு இருக்க முடியும்.
தமிழ் நான் ரொம்ப நல்லவன் இந்த போஸ்டர பார்த்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் உங்க ஓட்ட யாருக்கு போடணும்னு நினைக்கிறீங்களோ அவங்களுக்கு போடுங்க என் வீட்டுல தான் இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்க இத சொல்ல வேண்டியது என்னோட கடமை என்பது போல் நடேசன் வீடியோவில் பேசுகிறார். உடனே சந்திரகலா ரொம்ப ஆச்சரியமா இருக்கு நடேசன் சார் தன்னுடைய மனைவியை விட்டே கொடுக்க மாட்டாங்க ஆனா தமிழுக்காக இப்படி பண்ணி இருக்காரு ரொம்ப தமிழ் மீது பாசமாக இருக்கிறார் எனக் கூற.
அத்தை நினைத்தால் தான் கவலையா இருக்கு என சரஸ்வதி கூறுகிறார் உடனே சந்திரகலா இதுவே அவங்க ஜெயிச்சிருந்தா இப்படி வருத்தப்படுவாங்களா. இப்ப வசுவும் சம்மந்தி தான் வருத்தப்பட்டு இருக்காங்க என சந்திர கலா கூறுகிறார் ஏன் ஆய்ஸ் வரைக்கும் இனி அந்த வீட்டுக்கு போக மாட்டேன் என்பது போல் தமிழ் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் வசு சரஸ்வதிக்கு போன் செய்கிறார் அந்த சமயத்தில் வசு தமிழுக்கு வாழ்த்து கூறிக் கொண்டிருக்கிறார் இந்த எலக்ஷனில் ஜெயிச்சதற்கு காரணம் நீ தான் வசு ரொம்ப தேங்க்ஸ் என தமிழும் கூறுகிறார்.
பிறகு குழந்தை எப்படி இருக்கிறது என தமிழ் கேட்க உடனே குழந்தையை காமிக்க வசு செல்கிறார் உடனே வேணாம் வசு என போனை புடுங்கிக் கொள்கிறார் சரஸ்வதி குழந்தை நல்லா இருக்கணும் நாம பாத்தா ஏதாவது ஆயிடும் என்பது போல் சரஸ்வதி கூற அந்த அர்ஜுன் குடும்பம் சொன்னத நெனச்சு இப்படி பேசுறியா அவங்க எல்லாம் ஒரு ஆளா என்பது போல் சந்திரகலா மற்றும் வசு இருவரும் கூறுகிறார்கள்.
வசு அப்செட் ஆக இருக்க சந்திரகலா ஆறுதல் கூறுகிறார் அடுத்த காட்சியில் கோதை டென்ஷன் ஆக நடந்து கொண்டிருக்கும் பொழுது நடேசன் வந்து இண்டஸ்ட்ரியல் இருப்பவர்களுக்கு உன்னைப் பற்றி நன்றாக தெரியும் அதனால் ஏன் இப்படி இருக்க என கேட்க அதற்கு கோதை இப்ப தமிழ் சொன்ன மாதிரி நேர்மை இல்லாதவள ஏமாற்றுக்காரியயா எல்லாருக்கும் தெரியும் தானே என்பது போல் பேசுகிறார். சாப்பிட்டு மாத்திரை போடு உடம்புக்கு நல்லது கிடையாது எனக் கூற அதெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம். உன் மனசு ரொம்ப கஷ்டப்படுது அதனால வா கோவிலுக்கு போயிட்டு வரலாம் எனக் கூற அதெல்லாம் வேண்டாம் என கோதை மறுக்கிறார்.
நான் எதுக்குமே லாயக்கில்லாதவ பேசாம நான் எலக்சன் நினைக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கணும் மத்தவங்க பேச்சை கேட்டுட்டு நின்னது தப்பா போச்சு என்பது போல் கூறுகிறார். எனக்காக இந்த மாத்திரையை போடு என நடேசன் கூற மாத்திரையை முழுங்குகிறார் கோதை. அந்த சமயத்தில் சரஸ்வதி கால் செய்கிறார் ஆனால் நடேசன் கட் செய்கிறார். வெளியே வந்து சரஸ்வதி இடம் பேசுகிறார் அப்பொழுது அத்தைக்கு என்ன ஆச்சு என சரஸ்வதி கேட்க அவ அப்படியே தான் இருக்கா மாத்திரையை போட்டு தூங்க வச்சிருக்கேன் நான் நேர்ல வந்து சொல்றேன் என்பதை கூறி விடுகிறார்.
நேரில் வந்த நடேசன் சரஸ்வதி நமச்சி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நீங்க மட்டும் அந்த வீடியோவை எல்லாருக்கும் அனுப்பவில்லை என்றால் இந்நேரம் உங்க மாப்பிள்ளை சொன்ன மாதிரி கம்பெனியை மூடியே இருப்போம் மாப்ள எங்க இருக்கிறார் என எனக் கேட்க நடேசன் அவன் இந்நேரம் ஒரு மாசம் லீவு போட்டுட்டு எங்கேயாவது போயிருப்பான் என கூறுகிறார். எப்பவுமே அத்தைக்கு தான் நீங்க சப்போர்ட்டா இருப்பீங்க ஆனா முதல் முறையா அத்தைக்கு தெரியாம தமிழுக்கு உதவி செஞ்சி இருக்கீங்க என கூறும் பொழுது என் பையன் ஜெயிச்சா எனக்கு தானே சந்தோஷம் என நடேசன் கூறுகிறார்.
சரஸ்வதி நமச்சி நாண்டேசன் மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் பார்க்கிறார் அப்பொழுது நடேசன் நான் கிளம்புகிறேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் தமிழ் அப்பா என கூப்பிடுகிறார். அதுமட்டுமில்லாமல் நான் ஜெயிச்சதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்க தான் அப்பா ஸ்வீட் சாப்பிடுங்க என ஸ்வீட் எடுத்துக் கொண்டு வந்து ஊட்டி விடுகிறார் அதேபோல் நடேசன் தமிழுக்கு ஊட்டி விடுகிறார். இரண்டு பேரும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.