விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கார்த்திக்கு குழந்தை பிறந்துள்ள சந்தோஷத்தில் தன்னுடைய வேலை ஆட்களுக்கு ஸ்வீட் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். அந்த சமயத்தில் சீனியர் ஒர்க்கர் எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்குது சார் என கூறுகிறார் அதற்கு அர்ஜுன் அவரே இப்பதான் வந்திருக்காரு அதுக்குள்ள ஏதாவது சொல்லிட்டு இருப்பீங்களா என கேட்கிறார்.
உடனே கார்த்தி பரவால்ல சொல்லட்டும் என கேட்க அப்பொழுது சீனியர் ஒர்க்கர் ஒருவர் பக்கத்தில் இருந்தவர் ஐந்து நிமிடம் போன் பேசியதற்கு அரை நாள் லீவு கொடுத்து சம்பளத்தையும் புடிச்சிட்டாங்க என கூறுகிறார். உடனே அர்ஜுன் போன் பேசினா சும்மா இருப்பாங்களா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க போன் பேசவா வந்திருக்கீங்க லீவு போட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என கேட்கிறார்.
அதற்கு ஒர்க்கர்ஸ் அதான் லீவு போடாம வேலைக்கு வருகிறோமே அதையும் கொஞ்சம் பார்க்கணும் கரிசனம் காட்டணும் என கூற கோதை என்டர்ப்ரைஸ் இன்னைக்கு இல்ல நாங்க ஆரம்பிச்சதுல இருந்து வேலை செய்றோம் எங்களோட கஷ்டத்தையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க இதுவே தமிழ் இருந்தப்ப எங்களோட கஷ்டம் எல்லாம் தெரியும் என கூறியது உடன் கார்த்தி டென்ஷன் ஆகி நீங்க சாதாரண ஒர்க்கர்ஸ் தான் சீனியரா இருந்தாலும் ஒர்க்கர்ஸ் தான் இங்க வந்து எந்த உரிமையும் கொண்டாட முடியாது எந்த சொந்த பந்தத்துக்கும் பாசமும் கிடையாது நான் ஒன்னும் எமோஷனல் ஃ பூல் கிடையாது என கத்தி விட்டு கிளம்புகிறார்.
அர்ஜுன் போடும் வலையில் மெல்ல மெல்ல கார்த்தி சிக்கிக் கொண்டே வருகிறார். அடுத்த காட்சியில் தமிழ் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் மூணு லேத் லீசுக்கு எடுக்க வேண்டும் என அவரின் நண்பர் சரஸ்வதி இடம் கூற அதற்கு பதினைந்து லட்சம் ஆகும் எனவும் கூறுகிறார் இது நம்ம எப்படி ரெடி பண்ண போறோம் என சரஸ்வதி கேட்க அதெல்லாம் பாத்துக்கலாம் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என தமிழ் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அந்த சமயத்தில் சந்திரகலா வருகிறார் அவர் நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பும் கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அதற்காக லேத் வாங்குவதற்கு 15 லட்சத்தை நான் கொடுக்கிறேன் என சந்திரகலா கூற அதற்கு தமிழ் வேண்டாம் நீங்க மாறினதே போதும் நான் சொந்த கால்ல நிக்கணும்னு நினைக்கிறேன் நானே ட்ரை பண்ணிக்கிறேன் என கூறுகிறார்.
உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா நீங்க பெரிய தொழிலதிபரா வருவீங்க என கூறுகிறார் சந்திர கலா. அதுமட்டுமில்லாமல் குழந்தை எங்க வீட்டுக்கு வந்த பிறகு நீங்க வந்து கண்டிப்பா பாக்கணும் என சந்திரகலா கூறுகிறார் அடுத்த காட்சியில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள் அப்பொழுது கார்த்தியின் அம்மா ஆரத்தி எடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் கார்த்தியின் சகோதரிக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்து கூறுகிறார் சந்திர கலாவின் மகன்.
மேலும் தமிழுக்கு எங்கு அலைஞ்சும் பணம் கிடைக்கவில்லை அதனை சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சந்திர கலா விடம் வாங்கிக் கொள்ளலாமே அவங்களும் திருந்திட்டாங்க தானே அங்க மேல நம்பிக்கை இல்லையா எனக் கூற தமிழ் வேண்டாம் பாத்துக்கலாம் என கூறுகிறார். கம்பெனி வாங்கிய பொழுது ஒரு பினான்சியர் உதவி செய்தார் அந்த பினான்சியரிடம் பணம் வாங்கிக் கொள்ளலாம் என சரஸ்வதி கூற காலையில் போய் பார்க்கலாம் என தமிழ் கூறிவிடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.