Thamizhum saraswathiyum : தமிழும், சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்.. பரமு பிரேம்சந்த் கம்பெனியை வாங்க போறதே தமிழ் தான் நம்ப வாங்க போறோம் என்று சொன்ன தொகையோட பத்து லட்சம் அதிகமா குடுத்து தமிழ் தான் வாங்க போறாரா என்று சொன்னவுடன் அனைவரும் ஷாக் ஆகறாங்க..
உடனே ராகினி நம்ம கம்பெனியை க்ளோஸ் பண்ண தான் அந்த தமிழ் இப்படி எல்லாம் பண்றான் என்று பேசுவதற்கு நடேசன் அப்படி எல்லாம் இருக்காது நான் தமிழை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டு விட்டு என்று சொல்லிவிட்டு போராரு… அங்க போய் தமிழ் கிட்ட கேட்டா ஆமாம்பா நான் தான் அந்த கம்பெனியை வாங்க போறேன்.
ஆனா நீங்க வாங்கறதா இருந்தீங்க என்கிற விஷயம் எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நான் வாங்கி இருக்க மாட்டேன் நான் வேணும்னா குடுத்த அட்வான்ஸ திரும்பி வாங்கிக்கிறேன் நீங்களே அந்த கம்பெனியை வாங்கிக்கோங்க என்று சொல்கிறார்.. இதை நடேசன் வீட்டில் வந்து சொல்லும் பொழுது ராகினி ஏற்றுக்காமல் அந்த தமிழ் பொய் சொல்கிறான் என பேசுவதற்கு நடேசன் தமிழ் சொன்னது உண்மை தான்.
நீ மாப்பிள்ளையே தமிழ் தான் கத்தியால குத்த வந்தாருன்னு சொன்ன பாத்தியா அதுதான் உண்மை இல்லை என்று சொல்லும் பொழுது ராகினி அப்ப நான் பொய் சொன்னேன்னு சொல்றீங்களா அப்பா என எமோஷனலாக பேசி அழுகிறார். அடுத்து வீட்டில் நடந்த பிரச்சனையை வசு சரஸ்வதியிடம் கூற சரஸ்வதி ராகினி ஏன் இப்படி இருக்கா மாசமா இருக்கும் போது இப்படி எல்லாம் கோவப்பட கூடாதே..
எனப் பேசி விட்டு பின்பு கோவிலுக்கு சென்று ராகினி நல்லா இருக்கணும் அவ குழந்தை நல்லா பொறக்கணும் என்று சரஸ்வதி வேண்டிக்கிறாங்க.. அதே கோவிலுக்கு ராகினியும் அர்ஜுனும் வந்திருக்காங்க சரஸ்வதி ராகினிய பார்த்ததும் வீட்ல நடந்த பிரச்சனையை வசு போன் பண்ணி சொன்னா ஏன் இப்படி கோபப்படுற..
கம்பெனி வாங்கப் போறது தெரியாம நடந்த விஷயம் நாங்க தான் அட்வான்ஸ திரும்பி கொடுக்கிறோம்னு சொன்னமே என சரஸ்வதி சொல்வதற்கு ராகினி அதெல்லாம் உங்க டிராமா தமிழுக்கு நாங்க நல்லா இருக்கிறதே பிடிக்காதா அவன் பண்ண பாவத்துக்கு தான் உங்களுக்கு இன்னும் குழந்தை இல்ல..
அப்படியே உங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது ஒரு கொலைகாரனோட குழந்தை என்று நான் எல்லோரும் சொல்வார்கள் என ராகினி சரஸ்வதியை பார்த்து கோபமாக பேசிவிட்டு கிளம்பிவிடுகிறார். ராகினி பேசியதை நினைச்சு ரொம்ப உடைஞ்சு போய் சரஸ்வதி நிக்கிறாங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.