Thamizhum saraswathiyum : தொலைக்காட்சிகள் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் கொடுத்தும் வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகின்றன அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் பலருக்கும் ஃபேவரிட் ஆக அமைந்துள்ளன.
அப்படி மக்கள் பலருக்கும் மிகவும் பிடித்து விரும்பி பார்க்கப்படும் சீரியலில் ஒன்று தமிழும் சரஸ்வதியும்.. இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடில்.. சரஸ்வதி சொந்தமாக மெக்கானிக் ஷெட் ஒன்று நடத்த உள்ளார்.
அதற்கான திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. அப்போது அந்த வழியாக காரில் கோதை நடேசன் வசுந்தரா மூவரும் செல்கின்றனர். கார் பஞ்சர் ஆகிறது மூன்று பேரும் இறங்குகின்றனர். எதிரில் பார்த்தால் சரஸ்வதி மெக்கானிக் செட் திறப்பு விழா நடைபெறுகிறது. நடேசன் கோதைக்கிட்ட வந்தது வந்துட்டுடோம் திறப்பு விழாவை நடத்தி கொடுத்துட்டு போயிடலாம்..
அப்படின்னு சொல்றதுக்கு கோதை என்ன பண்றதுன்னு தெரியாம அங்கயே இருக்காங்க உடனே கார்த்தியும் அர்ஜுனும் அங்க வந்து என்னமா இங்க இருக்கீங்க வாங்க நம்ம போலாம் அப்படின்னு கூப்பிடுறாங்க அதுக்கு நடேசன் இருப்பா எதார்த்தமா இங்க வந்துட்டோம் இந்த பங்க்ஷன் முடிச்சு குடுத்துட்டு போயிடலாம் அப்படின்னு சொல்லிட்டு திறப்பு விழாவில் எல்லோரும் கலந்து கொள்கின்றனர்.
வீட்டுக்கு வந்ததும் ராகினி நீங்க ஏமா அங்க போனீங்கன்னு கேட்க அங்க போற மாதிரி சூழ்நிலை உருவாகிடுச்சுன்னு கோதை சொல்றாங்க. இன்னொரு பக்கம் தமிழ் சரஸ்வதிகிட்ட அந்த வீட்டு அம்மா எப்படி இங்க வந்தாங்க எல்லாம் வசுவும் அப்பாவும் பண்ண வேலையா இருக்கும் அப்படின்னு சொல்றாங்க இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது.