Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் போனில் இருக்கும் மொத்த தகவலையும் எடுப்பதற்கு வசு திட்டம் போடுகிறார் அதற்கு நடேசன் மற்றும் கோதை வீட்டு வேலைக்கார பெண்ணான அபி என அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். சாப்பிட உட்காரும்பொழுது அர்ஜுன் போன் கையிலேயே வைத்திருக்கிறார் பிறகு கீழே வைத்து விட்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி கேட்டுக் கொண்டிருக்க அர்ஜுனும் எலக்ட்ரிக் கார் மேனுஃபாக்சரிங் டிசைன் ஒன்று இருக்கிறது அதை வொர்க் அவுட் பண்ணலாம் அந்த ஜெர்மன் கம்பெனி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார்.
அர்ஜுன் போனை ஆட்டையை போட்டு லேப்டாப்பில் கனெக்ட் பண்ணி மொத்த பேக்கப்பையும் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் மற்றொரு பக்கம் தமிழ் சரஸ்வதி நமச்சி மூவரும் இருக்கும் பொழுது காலையில் தமிழை சாப்பிட கூப்பிடுகிறார் சரஸ்வதி ஆனால் தமிழ் போற வழியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் பார்சல் கட்டிக் கொடு என கூறுகிறார் அதேபோல் சரஸ்வதியையும் நீ என் கண் முன்னாடியே சாப்பிடு இல்லன்னா விரதம் எடுத்து விடுவ எனக் கூற சாப்பிடக் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் அர்ஜுன் போனை பேக்கப் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கார்த்தி வருகிறார் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்க மொபைல் ஹேங் ஆகிறது அதனால் பேக்கப் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என கூறுகிறார். அர்ஜுன் அந்த புதிய கம்பெனிக்கு கால் செய்ய போனை எடுக்கிறார் ஆனால் அதற்கு வீட்டு வேலைக்கார பெண் அபி இந்த டீய குடிச்சிடுங்க என டீயை எடுத்து நீட்ட டீயை குடித்துக் கொண்டிருக்கிறார்.
உடனே நடேசன் அந்த நம்பர் தான் உனக்கு தெரியும் இல்ல நீ போன் பண்ணி கேட்க வேண்டியது தானே எனக்கு கூற உடனே கார்த்தியும் போன் பண்ணி பேச முயற்சி செய்கிறார் ஆனால் நாட் ரீச்சபிள் என வருகிறது அதனால் அர்ஜுனிடம் வேற ஏதாவது நம்பர் இருந்தால் கொடு என கேட்க மொபைல் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது நான் போய் சார்ஜ் போடுகிறேன் என கூற அதற்குள் அபி நானே சார்ஜ் போடுகிறேன் என போனை எடுத்துக் கொண்டு மேலே செல்கிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் சாப்பிடாமல் அந்த தோசையை பெரியவரிடம் கொடுத்து விடுகிறார் அதனை நமச்சி பார்த்து கேட்கிறார் உன் வேலையை மட்டும் பாரு எனக்கூறி விட்டு தமிழ் கம்பெனிக்கு செல்கிறார். அதேபோல் ஜெராக்ஸ் போடச் சென்ற அர்ஜுனனின் மாமா ஒரு காப்பியா ரெண்டு காப்பியா என்ற குழப்பத்தில் போன் செய்கிறார் ஆனால் அர்ஜுனின் போனை வசு வைத்திருப்பதால் போனை அட்டென்ட் பண்ணவில்லை அர்ஜுனின் அக்காவிற்கு ஃபோன் பண்ணுகிறார்.
அர்ஜுனின் அக்கா மாமா இவ்ளோ டைம் கால் பண்றாரு நீ ஏன் போன் எடுக்கல என கேட்க உடனே அர்ஜுன் போன் சார்ஜர் போட்டுக் கொண்டிருக்கிறேன் உடனே அபி நானே எடுத்துக் கொண்டு வருகிறேன் எனக் கூற ஆனால் அர்ஜுனின் அக்கா தான் போனை எடுத்துக் கொண்டு வருகிறார். அதற்குள் வசு சம்பவம் செய்து போனை வைத்து விட்டார்.
நடேசன் மற்றும் கோதையிடம் போனில் உள்ள அனைத்து டேட்டாவையும் எடுத்து விட்டேன் என கூறுகிறார். மற்றொரு பக்கம் தமிழுக்கு சரஸ்வதி சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்துள்ளார் ஆனால் அதையும் சாப்பிடாமல் தமிழ் வெளியே எடுத்துக்கொண்டு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளை போனில் என்னை எவிடன்ஸ் இருக்கிறது என்பது தெரியவரும் என எதிர் பார்க்கப்படுகிறது.