முழு கிரிமினலாக மாறிய அர்ஜுன்.! போலீஸ் விசாரணையில் ரவுடி சொன்னதைக் கேட்டு ஆடிப்போன நடேசன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum saraswathiyum august 22
thamizhum saraswathiyum august 22

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி உட்காந்து கொண்டிருக்கும் பொழுது கோதை இப்படியே உட்கார்ந்து கொண்டிருக்காத கொஞ்சம் வேலை செய் அப்பதான் குழந்தைக்கு நல்லது என அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார் அதற்கு ராகினி அதெல்லாம் நாங்க எங்க வீட்டுக்கு போறோம் இல்ல அங்க போய் செய்து கொள்கிறேன் எனக் கூறி விடுகிறார். பிறகு நடேசன் அவர்களுக்கு ஃபோன் வருகிறது, ரவுடி குமார் கண்விழித்து விட்டதாக போலீஸ்கூற உடனே நடேசன் பரபரப்பாக கோதையிடம் கூறுகிறார்.

கோதை மற்றும் நடேசன் இருவரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ராகி இடம் நாங்கள் போயிட்டு வந்தால் நீயும் ஒரு முடிவு எடுக்க வேண்டியது இருக்கும் என திட்டவட்டமாக கூறுகிறார். உடனே அர்ஜுனும் என்னுடைய நண்பருக்கு அடிப்பட்டு விட்டது ஹாஸ்பிடல் போயிட்டு வருகிறேன் என கூறுகிறார். ஹாஸ்பிடலுக்கு சென்ற கோதை மற்றும் நடேசன் போலீஸ் அவர்களிடம் கூறி விசாரிக்க சொல்கிறார்கள்.

அந்த சமயத்தில் அர்ஜுன் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார் அப்பொழுது அர்ஜுன்   இப்பதான் பாபு சொன்னா உனக்கு அடிப்பட்டு விட்டது என பேசிக் கொண்டிருக்க நீங்க எப்ப அத்தை இங்கே வந்தீங்க என  நக்கலாக கேட்கிறார் உடனே போலீஸ் விசாரணை தொடங்குகிறார்கள். எதற்காக ஓடி ஒளிந்தாய் என கேட்க அர்ஜுன் அர்ஜுன் என இழுத்தபடி கூறி அர்ஜுனனின் மாமனார் தான் நான் ஓடி ஒளிய காரணம் எனக் கூறுகிறார்.

மேலும் நடேசன் அர்ஜுனனை கத்தியால் குத்தியது நான்தான் என வீட்டில் வந்து கூற சொல்கிறார் அது என்னால் முடியாது என மறுத்து விட்டேன் என நடேசன் மீது மொத்த பழியையும் தூக்கி போடுகிறார். இதனால் நடேசன் நடுங்கி பயந்தபடியே நான் எப்ப சொன்னேன் என கோபத்தில் கத்துகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் ரவுடியின் செட் அப் வக்கீல் உடன் வந்து கத்துகிறார் வக்கிலும் எதற்காக இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்ளலாம் முதலில் கிளம்புங்க அவர ரெஸ்ட் எடுக்க விடுங்க என கத்துகிறார்.

அர்ஜுன் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார் கோதையும் வீட்டிற்கு போகிறார் வீட்டிற்குப் போன கோதையிடம் என்ன ஆச்சு யாரை பார்க்க போனீங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே கோதை நாங்க போனது ஒன்னு நடந்தது ஒன்னு நாங்க நினைச்சது சரி வரல அவன் வேற ஒன்னு பிளான் பண்ணிட்டான். உடனே கார்த்தி நம்ம கம்பெனில ஏதாவது பிரச்சனையாப்பா சொல்லுங்க வேலைய விட்டு தூக்கிடலாம் என பேசிக்கொண்டு இருக்க நம்ம கம்பெனில எல்லாரும் நல்லவங்க தான் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது.

இது புதுசா முளைத்த விஷ செடி இது அடியோடு தான் வெட்டி வீசணும் அதற்கான நேரம் வரும் எல்லா நாளும் தவிச்சிட்டு இருக்க முடியாது கண்டிப்பா ஒரு நாள் சிக்குவான் என பேசிக் கொண்டிருக்கிறார் கோதை  மற்றொரு பக்கம் சரஸ்வதி நடந்து கொண்டு போகும் பொழுது நடேசன் நண்பன் ஜோசியக்காரர் சரஸ்வதி பார்த்து பேசுகிறார் நடந்த அனைத்தையும் நடேசன் கூறினான் நீ அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்று விரதம் இரு கண்டிப்பாக நல்லது நடக்கும் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.