Thamizhum Saraswathiyum: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது தான் கோதை தமிழ், சரஸ்வதியின் உண்மையான குணத்தை புரிந்துக் கொண்டு அனைவரும் ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளனர்.
அர்ஜுனனின் சூழ்ச்சியினால் தமிழை தவறாக புரிந்துக் கொண்ட கோதை தற்பொழுது தமிழின் நல்ல குணத்தை புரிந்து ஏற்றுக் கொண்டுள்ளார். அப்படி கார்த்தி, வசு, கோதை, நடேசன் மற்றும் தமிழ், சரஸ்வதி என அனைவரும் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் ரோகிணிக்கு அர்ஜுன் வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிலையில் ரோகிணி தனது அம்மா அப்பா வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார். எனவே ரோகிணியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கோதை, நடேசனை நேரில் சென்று அர்ஜுன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு கூறுகிறார்.
அனைவரும் குடும்பத்துடன் ரோகிணியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கு சரஸ்வதி வளையல் போடுவதற்காக செல்லும் பொழுது கர்ப்பமாக இல்லாத நீ ரோகிணிக்கு வளையல் போடக்கூடாது என்று கூறி தடுத்து நிறுத்துகின்றனர் இந்த நேரத்தில் கோதை சரஸ்வதியிடம் வளையல் போட சொல்ல திடீரென சரஸ்வதி மயங்கி விழுகிறார்.
இதனால் தமிழ் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர் பிறகு சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது தெரிய வர தமிழ் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதனை அடுத்து தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் சரஸ்வதி சொம்பில் தண்ணி எடுத்து வர பதட்டமடைந்த தமிழ் ஏன் இப்படி வெயிட்ட வச்சிக்கிட்டு நிக்கிற என்று சொம்பை வாங்கிக் கொள்கிறார்.
பிறகு அனைவருக்கும் தோசை சுடுவதற்காக சரஸ்வதி செல்ல அதனையும் தடுத்து நிறுத்தி தமிழ் அனைவருக்கும் தோசை சுட்டு தருகிறார். இந்த நேரத்தில் சரஸ்வதி இன்னைக்கு ஒரு நாளைக்கு செட்டுக்கு போய் எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்துடுறேன் என்று சொல்ல போக கூடாதுன்னு சொல்றேன்ல என்று தமிழ் கோபப்படுகிறார்.
இதனை பார்த்த நடேசன் சத்தம் போட சரஸ்வதியை அழைத்துக்கொண்டு செட்டுக்கு கிளம்புகிறார். அப்பொழுது மாங்காவும் வாங்கி தருகிறார் தமிழ். மேலும் சரஸ்வதி சின்ன பெட்டி ஒன்றை கையில் எடுத்துச் செல்ல இதனை பார்த்து பதட்டமடைந்த தமிழ் பெட்டியை தூக்காத இரு சரஸ் எனக்கூறி வேகமாக வருகிறார். வெயிட்லா ஒன்னும் இல்ல பாருங்க என்று கூறி சரஸ்வதி கொடுத்துவிட்டு நீங்க முதல்ல போங்க தமிழ் என்று கூறுகிறார். பிறகு தமிழை சரஸ்வதி பெருமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.