விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை அர்ஜுன் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருக்கும் நிலையில் விரைவில் தமிழ் சரஸ்வதியை தனது குடும்பத்துடன் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியாவது தமிழை இந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என அர்ஜுன் நினைத்து வந்த நிலையில் அவருடைய சதி திட்டத்தால் தமிழ், சரஸ்வதி இருவரும் தங்களது குடும்பத்தை பிரிந்தனர். இதனால் தமிழுக்கு கோதையின் மேல் கோபம் இருந்த நிலையில் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி காட்ட வேண்டும் என பல முயற்சிகளை செய்து தற்பொழுது கோதையுடன் போட்டி போட்ட அசோசியேஷன் எலக்ஷனிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தமிழ் கோதைக்கு உதவி செய்து செய்த நிலையில் இதனைப் பற்றி நடேசன் கோதைக்கு சொன்ன அறிவுரையின்படி இதற்கு மேல் மாப்பிள்ளை அர்ஜுனை நம்பக்கூடாது என்ன நடந்தது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் கோதை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது தமிழ் சரஸ்வதி போகும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கோதையும் செல்கிறார். அங்கு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு வளையல் போடுவதற்காக செல்லும் நேரத்தில் அர்ஜுன் வெளியில் சென்று ஒருவரிடம் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற விஷயத்தை கூறி அனுப்பி வைக்கிறார். அவரும் வந்தவுடன் நிறுத்தமா உனக்கு தான் குழந்தை இல்லையே நீ இதை எப்படி செய்யலாம் என கேட்க சரஸ்வதி அதிர்ச்சி அடைகிறார்.
இதனால் சரஸ்வதி அதிர்ச்சடைய இதனைக் கேட்ட கோதை சபையில கூப்பிட்டு இப்படியா பேசுவீங்க சரஸ்வதி செய்யாத இந்த சடங்கை நானும் செய்ய மாட்டேன் என சொல்ல இதோடு அந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இதன் மூலம் கோதையின் மனம் மாறி இருப்பது தெரிய வருகிறது.