Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு துரத்தி விட்டதால் அனைவரும் கோவிலில் இருக்கிறார்கள் முதலில் சரஸ்வதி வந்து கூப்பிட்டும் வர மறுக்கிறார்கள் பிறகு அர்ஜுன் வந்து அனைவரையும் கூப்பிடுகிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கார்த்தி நான் ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொள்கிறேன் என பேச உடனே அர்ஜுன் நான் என்ன செத்தா போயிட்டான் நீங்க பாட்டுக்கு வர வேண்டியதுதானே வீட்டுக்கு என கூறுகிறார்.
எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுற தமிழ் என நடேசன் கூற அப்புறம் எதுக்கு நீங்க இப்படி நடந்து கொள்கிறீர்கள் ஒவ்வொருத்தரையும் நான் கெஞ்சனுமா என தமிழ் பேசுகிறார் உடனே அனைவரும் தமிழ் கூட போக சம்மதிக்கிறார்கள் ஆனால் கோதை மட்டும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது நடேசன் நீங்க போங்க நான் கூட்டிக்கொண்டு வருகிறேன் என கூறுகிறார் பிறகு கோதையிடம் ஏற்கனவே நம்மலால் தமிழ் அதிகமாக கஷ்டப்பட்டுடான் இப்ப நம்ம போகலன்னா தமிழ் இன்னும் கோவத்துல அவங்க குடும்பத்தையே சேர்த்துக்கள என வீண் பழி அவன் மேல விழும் அது தேவையில்லை என நடேசன் கூற உடனே கோதையும் கிளம்பி செல்கிறார்.
தமிழ் சரஸ்வதி தங்கி இருக்கும் வீட்டை பார்த்து இவ்வளவு நாள் இங்க தான் தங்கி இருக்காங்களா என கோதை கேட்க ஆமா இங்க தான் தங்கி இருக்காங்க என நடேசன் கூறுகிறார். அப்பொழுது அனைவருக்கும் என்னென்ன தேவை என்பதை தமிழ் வாங்க அனைவரிடமும் கேட்கிறார் உடனே கார்த்தி நானும் வருகிறேன் எனக் கூற இல்லை நீ ரெஸ்ட் எடு நானே போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் என தமிழ் கூறி விடுகிறார்.
அது மட்டும் இல்லாமல் தமிழ் வெளியே சென்ற பிறகு கார்த்தி என்னால்தான் இவ்வளவு பிரச்சனையும் என அழுகிறார் அந்த சமயத்தில் குழந்தை அழ குழந்தையை சமாதானப்படுத்துகிறார் கோதை இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் அனைவரும் சாப்பிடுவதற்கு உட்காருகிறார்கள் அப்பொழுது சின்ன வயதில் அனைவரையும் இப்படி தான் உட்கார வைத்து நிலா சோர் நீ கொடுப்ப அதே போல் இப்பொழுதும் நீயே அனைவருக்கும் கொடு என கூறுகிறார் நடேசன்.
கோதையும் சாப்பாட்டை பிசைந்து அனைவருக்கும் கொடுக்கிறார் அப்பொழுது ஒவ்வொருவராக கொடுக்கும் பொழுது அனைவரும் வாங்கிக் கொள்கிறார்கள் தமிழுக்கு கொடுக்க கையை நீட்டும் போது தமிழ் வாங்க மறுக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது தமிழ் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறாரா இல்லை அர்ஜுன் ஏமாத்தி வாங்கிய சொத்தை மீட்டுக் கொடுத்துவிட்டு தான் கோதை கையால் சாப்பிடுவேன் என சபதம் போட போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.