Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோவிலில் கோதை சாமியிடம் நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன் உனக்கு பூஜை செய்ததெல்லாம் வேஸ்ட்டா இப்படி என்னை ஏமாத்திட்டியே அநீதியை ஜெயிக்க வச்சு நீதியை தோக்கடிச்சிட்டியே என அழுது கொண்டே புலம்புகிறார். அது மட்டும் இல்லாமல் என் புள்ளையை நான் நம்பாமல் இப்படித்தானே இந்த கையால அடிச்சேன் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் அதனால எனக்கு எந்த தண்டனை வேணாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன்.
என்னால என் குடும்பமே இப்ப நடுத்தெருவுக்கு வந்துருச்சு அப்படி என்ன பாவம் செஞ்சேன் என சாமியிடம் அழுது புலம்புகிறார் இப்பவே நான் செத்தா கூட பரவாயில்லை என்பது போல் அழுகிறார். உடனே சரஸ்வதி அழாதீங்க கண்டிப்பா கெட்டவனுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என கூறுகிறார், உடனே சரஸ்வதி அனைவரையும் வீட்டிற்கு அழைக்கிறார் ஆனால் கோதை முடியாது என மறுக்கிறார் நீங்க இங்கேயே இருங்க அஞ்சு நிமிஷத்துல நான் வந்து விடுகிறேன் என சரஸ்வதி தமிழை கூப்பிட செல்கிறார்.
தமிழிடம் சரஸ்வதி நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க வந்து கூப்பிடுங்க என பேசுகிறார் ஆனால் தமிழுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது அதனால் சரஸ்வதி நமச்சி இருவரையும் நீங்க முதலில் போங்க நான் பின்னாடியே வருகிறேன் என கூறிவிட்டு அர்ஜுனை பார்க்க செல்கிறார், அர்ஜுனை எட்டி மிதிக்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜனை கொள்வதற்கு தயங்காமல் பூந்தொட்டியை எடுத்து தலையில் போட பார்க்கிறார் அந்த சமயத்தில் ராகினி வந்து நிறுத்துங்க என கத்துகிறார் அதனால் பாவம் என விடுகிறார் தமிழ்.
அதுமட்டுமில்லாமல் ராகினி பேசுவதற்கு கோபத்துடன் கையாலேயே ஓரமா நின்னுக்கோ என எச்சரிக்கிறார் அதனால் அவரும் ஓரமாக நிற்கிறார் உடனே அர்ஜுனிடம் நீ இதுவரை தமிழ் நேருக்கு நேர் சரிசமமாக நின்னு பார்த்ததில்லை எண்டா அந்த குடும்பத்து மேல கைய வச்சோம் என ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுவ அதை நீ கண்ணால பார்க்க தான் போற என்பது போல் சவால் விட்டு செல்கிறார்.
கோவிலுக்கு சென்ற தமிழ், நடேசன், கோதை, வசு, கார்த்தி என அனைவரையும் பார்த்து என் நினைப்பு உங்களுக்கு வரவே இல்லையா நான் என்ன செத்தா போயிட்டேன் உயிரோட தான் இருக்கேன் வீட்டுக்கு வர வேண்டியதுதானே என தன்னுடைய குடும்பத்தை அழுது கொண்டே கூப்பிடுகிறார். தமிழ் கூப்பிட்டவுடன் அனைவரும் கண் கலங்குகிறார்கள் இந்த ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.