Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை சாமியிடம் முறையிடுகிறார் நான் உனக்கு என்ன குறை வச்சேன் தினம் தினம் பூஜை செய்தனே அதற்கு நீ கொடுத்த சன்மானம் தான் இதா என் ஒரத்தியால என் மொத்த குடும்பமும் இப்படி வீதிக்கு வந்துடுச்சு என புலம்பி கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஒரு கெட்டவனை ஜெயிக்க வச்சு எங்களை தோக்கடிச்சிட்டியே இது நல்லா இருக்கா என சாமியை பார்த்து கேள்வி கேட்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கோதை நேர்மை தவறமாட்டால் என்று பெயர் எடுத்தேன் என் புள்ள விஷயத்துலயும் அப்படித்தான் இருந்தேன் ஆனா அந்த நயவஞ்சகன் செய்த சூழ்ச்சியாலதான் என் புள்ளையை நான் சந்தேகப்பட்டுட்டேன் என் புள்ளைக்கு செஞ்ச தப்புதான் என்ன இந்த நிலைமைக்கு வாட்டி வதைக்கிறது என கூறுகிறார் உடனே சரஸ்வதி அப்படி பேசாதீங்க அத்த கண்டிப்பா அந்த அர்ஜுன் நல்லாவே இருக்க மாட்டான் என சாபம் விடுகிறார்.
சரஸ்வதியும் தமிழ் மாமாவும் நம்ம கிட்ட எத்தனை முறை சொன்னாங்க ஆனா அப்ப நம்ம அவங்கள நம்பாம போயிட்டோம் அந்த அர்ஜுன் சொன்னதா நம்பனும் அதனால்தான் இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறோம் என வசு பேசுகிறார் வாங்க வீட்டுக்கு போகலாம் என சரஸ்வதி கூப்பிடுகிறார் ஆனால் கோதை வர மறுக்கிறார் அது மட்டும் இல்லாமல் நாங்க எங்கம்மா போகிறது எங்க தலையெழுத்து இதெல்லாம் அனுபவிக்கனும்னு அதனால நாங்க பார்த்துக்கொள்கிறோம் என கூறுகிறார் ஆனால் சரஸ்வதி நீங்க இங்கே இருங்க நான் உடனே வருகிறேன் என கூறிவிட்டு தமிழைப் பார்க்க செல்கிறார்.
தமிழை உடனடியாக வாங்க என கூப்பிட தமிழ் எதற்கு என கேள்வி எழுப்புகிறார் உடனே அந்த அர்ஜுன் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிவிட்டு அத்தையும் மாமா கார்த்தி வசு என அனைவரையும் வீட்டை விட்டு துரத்தி விட்டு விட்டான் அவர்கள் எங்கே போவது என்று தெரியாமல் கோவிலில் இருக்கிறார்கள் நீங்க வாங்க வந்து கூப்பிடுங்க இன்னும் உங்களுக்கு கோபம் குறையலையா என கேட்க உடனே சரஸ்வதி நமச்சியை அழைத்து கொண்டு நீ போ நான் பின்னாடியே வரேன் என கூறிவிட்டு அர்ஜுன் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு அர்ஜுன் சொத்தை எழுதி வாங்கிய சந்தோஷத்தில் ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அர்ஜுனை வெளியே கூப்பிடுகிறார் தமிழ் வெளியே வந்த அர்ஜுனை நெஞ்சிலேயே எட்டி மிதிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உன்னை இப்படியே விடுவேன் என்று கனவுல கூட நினைக்காத என கொள்வதற்கு முயற்சி செய்கிறார் அந்த சமயத்தில் ராகினி நிறுத்துங்க என கத்துகிறார் உடனே ராகினி பார்த்த தமிழ் கோவத்துடன் கையை அசைத்து ஓரமா நில்லு என்பது போல் கூற ராகினி பயந்து போய் ஓரமாக நிற்கிறார்.
அதன் பிறகு அர்ஜுனிடம் இனிமே உனக்கு நான் தான் எமன் இனி நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் உனக்கு இடிதான் என் குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அது வேற ஆனா அதுக்காக எவன் எவனோ என் அம்மா அப்பாவை அழ வைப்பான் அத பார்த்துகிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் அவங்களுக்கு நான் இருக்கேன் என் தம்பிக்கும் நான் இருக்கேன் என்பது போல் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுனை நீ இந்த தமிழ் சாரிக்கு சமமா நின்னு பார்த்ததில்லை இனிமே நீ பாப்ப ஒவ்வொரு நிமிஷமும் ஏண்டா அந்த குடும்பத்து மேல கைய வச்சேன்னு துடிதுடிக்க வைக்கிறேன் என கோபமாக பேசிவிட்டு செல்கிறார்.
அனைவரும் கோவிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஆதி வாங்க கெஸ்ட் ஹவுஸ் போகலாம் என கூப்பிட வர மறுக்கிறார்கள் சரஸ்வதி அந்த சமயத்தில் வந்து வாங்க அத்தை வீட்டுக்கு போகலாம் என கூப்பிடுகிறார் உடனே தமிழ் வரலையா என கேட்க அவன் வரமாட்டான், அவனும் இப்படித்தான் என்ன மாதிரி எங்க போவதுன்னு தெரியாம நின்னு இருப்பான் அதுக்கு இன்னும் தண்டனையா எனக்கு கொடுத்தால் கூட நான் ஏத்துப்பேன் என கோதை அழுகிறார்.
உடனே தமிழ் கோவிலுக்கு வருகிறார் கண்ணில் கண்ணீருடன் அனைவரையும் பார்த்து ஏங்கி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.