நம்பிக்கை துரோகம் செஞ்ச நீ சரியான கோழை டா.! சரிக்கு சமமாக நின்னு அர்ஜுனை போலந்து கட்டும் கோதை.! தமிழும் சரஸ்வதியும் எபிசொட்

thamizhum saraswathiyum 29 september
thamizhum saraswathiyum 29 september

thamizhum saraswathiyum september 29 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீடு பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள் தமிழ் குடும்பம் அந்த சமயத்தில் அர்ஜுன் காரில் வந்து இடிப்பது போல் வருகிறார் உடனே பைக் நிறுத்தி விட்டு யார்ரா இவன் முட்டாள் மாதிரி வரன் என நமச்சி கூற உடனே அர்ஜுன் இறங்குவதை பார்த்து ஆமான்டா நெஜமாலுமே முட்டாள் தான் இவங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே அர்ஜுனின் மாமா இவுங்க முகத்துல ஒரு சோகமே இல்லையே என பேச உடனே கார்த்தி நாங்க எதுக்குடா பீல் பண்றோம் சொத்தை திருட்டுத்தனமா வாங்கிட்டு இவனே ஃபீல் பண்ணல நாங்க எதுக்கு ஃபீல் பண்ணுவோம் என பேசுகிறார்.

உடனே அர்ஜுன் எங்க சொத்தை தானே நாங்க எடுத்துகிட்டோம் என பேச இதே மாதிரி சிம்பதி கதையை சொல்லி எத்தனை பேரை ஏமாற்றுவது ராகினியை மட்டும் தான் உன்னால ஏமாத்த முடியும் இந்த கதையை கேட்டு கேட்டு எனக்கு காது வலிக்குது உங்க அப்பா அம்மாவால கம்பெனி நடத்த முடியாம விட்டுட்டு போனதுக்கு எங்க அப்பா அம்மா என்னடா பண்ணுவாங்க என பேசுகிறார் கார்த்தி.

அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி பங்கிற்கு எல்லாத்தையும் புடுங்கிட்டு உட்டுட்டா எல்லாம் கஷ்டப்பட்டு அழுவோம் என்று நினைத்தாயா நாங்க புதுசா வீடு பார்த்து இருக்கோம் அதுக்கு சீக்கிரம் குடி போக தான் போறோம் என பேசுகிறார் உடனே வாடகை வீட்டுக்கு தான என பேச கூடிய சீக்கிரம் ஒரு புது வீட்டையே நாங்க வாங்குறோம் என பேசுகிறார். அதற்கு அர்ஜுன் நாக்களாக சிரிக்க கோதை ஆவேசப்பட்டு ஆமாண்டா சவால் தாண்டா கண்டிப்பா புது வீடு வாங்குவோம்டா என்ன பேசுகிறார்.

எதிரி மாதிரி நேருக்கு நேரா சரிசமமா நின்னு சண்டை போட்டு இருந்தா உன் மேல எனக்கு மரியாதை இருந்திருக்கும் கூடவே இருந்து முதுகில் குத்துன கோழை நீ என்கிட்ட சொத்த வேணா நீ வாங்கி இருக்கலாம் ஆனா அதைவிட பெருசா நினைக்கிற என் குடும்பம் என் கூடவே தான் இருக்கு பேரபிள்ளையோட சந்தோசமா தான் இருக்க போறேன் என பேசிக்கொண்டு இருக்கிறார். அதிலும் அர்ஜுனுக்கு  நேருக்கு நேராக நின்னு கோழை என பேசும்போது அர்ஜுன் முகம் வாடுகிறது.

அதுமட்டுமில்லாமல் உன் கெட்ட எண்ணத்துக்கு நீ கண்டிப்பா அழிஞ்சு போவ ராகினி ஒரு நாள் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு எங்க கூட தான் வர போற என கோதை பேசுகிறார். அதன் பிறகு தமிழ் அர்ஜுன் முன்னாடி வர எங்க அடி விழுந்திடுமோ என பின்னாடி ஓடுகிறார் அதுமட்டுமில்லாமல் என்னை வெறுப்பேத்தறானே ஏதாவது செஞ்சுட்டு இருந்தா எஇனிமேல் உன்  உடம்புல உசுரு இருக்காது என மிரட்டி விட்டு செல்கிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் வீட்டுக்கு போகிறார் தன்னுடைய அப்பா அக்கா புகைப்படத்துக்கு முன்பு நின்று நாம எப்படி வீட்டை விட்டு வெளியே போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோமா அது மாதிரி கஷ்டப்படுவாங்க நினைச்சா அவங்க சந்தோஷமாக இருக்காங்க என ஃபீல் பண்ணுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுனியின் அக்கா என்னடா தம்பி ஆச்சு என கேட்க பரமு அந்த கோதை குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க இனி வீடு கம்பெனி என்று ரொம்ப ஜாலியா இருப்பாங்க என பேச உடனே அர்ஜுன் அக்காவின் கணவரின் சட்டையை பிடிக்கிறார்.

நான் அவுங்களை சந்தோஷமா இருக்க விடமாட்டேன் என பேசுகிறார் அடுத்த காட்சியில் நமச்சி இடம் தமிழ் நாளைக்கு அந்த வீட்டுக்கு போகணும் எல்லா பொருளையும் எடுத்துட்டு போகணும் பெரிய கார் ஒன்னு சொல்லிடு என பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனா இந்த வீட்டை விட்டு போக மனசே வரல இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் நமக்கு எல்லா நல்லது நடந்தது புதுசா கம்பெனி தொடங்கினோம்  நம்ம குடும்பம் ஒன்று சேர்ந்தது நான் பிரக்னன்ட் ஆன என பேசிக் கொண்டிருக்கிறார் சரஸ்வதி.

அதேபோல் ஒவ்வொருத்தரும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்கம் அர்ஜுன் அவங்கள நான் நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்  புது வீட்டிற்கு ரெடியாகி கொண்டிருக்கிறார்கள் தமிழ் குடும்பம் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.