Thamizhum saraswathiyum promo : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தி மற்றும் வசு இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் வசு வேண்டாம் யாராவது வந்து விடுவார்கள் என கார்த்தி இடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கார்த்தி விடாமல் அருகில் வருகிறார் அந்த சமயம் பார்த்து தமிழ் கார்த்தியை நாளைக்கு என பேச ஆரம்பிக்கும் பொழுது பதட்டத்துடன் சமாளித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி.
உடனே சரஸ்வதி இடம் கார்த்தியும் வசுவும் பேசிக்கொண்டிருந்தார்கள் தனியாக ஆனா நான் இடையில் போயிட்டேன் எனக்கு ஒரு மாதிரியா கஷ்டமா இருக்கு என தமிழ் கூறிக் கொண்டிருக்கிறார். ஆமா அவங்களுக்கு தனியா ஒரு பிரைவசி கிடையாது என பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே இதுக்கு ஒரு முடிவு கட்டலாம் என தமிழ் கூறுகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் தமிழ் புதிய வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்துள்ளார். வீட்டை சுற்றி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமச்சி பைக்கில் வரும் பொழுது அர்ஜுன் இடிப்பது போல் காரில் வருகிறார்.
அப்பொழுது நடேசன் என் புள்ள எங்களுக்காக ஒரு புது வீடு பார்த்து இருக்கான் என கெத்தாக கூறுகிறார். உடனே சரஸ்வதி சீக்கிரமே நாங்களும் ஒரு சொந்த வீடு வாங்குவோம் என கூறிக் கொண்டிருக்கிறார் உடனே அர்ஜுன் என்ன சிஸ்டர் சவால் விடுகிறீர்களா? என கேட்க ஆமாண்டா சவால் தாண்டா என கோதை நேருக்கு நேராக அர்ஜுன் முகத்தை பார்த்து ஆக்ரோஷத்துடன் பேசுகிறார்.
என்கிட்ட இருந்து சொத்தை வேணா எடுத்து இருக்கலாம் ஆனா என் குடும்பத்தை என்கிட்ட இருந்து உன்னால பிரிக்கவே முடியாது என் பசங்க என் மருமகளோட சந்தோஷமா இருக்கேன், கண்டிப்பா நாங்க நிம்மதியா தான் வாழ்வோம் கூடிய சீக்கிரம் நீ செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் வரும் என கோதை பேசிவிட்டு செல்கிறார் அர்ஜுன் முகத்தில் பயம் தெரிய வருகிறது இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.