Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதிக்கு போன் செய்து என்ன செய்கிறார் சாப்பிட்டாளா இல்லையா விசாரிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார் உடனே நமச்சியை பிடித்து நீ போன் பண்ணு என டார்ச்சர் செய்கிறார் ஆனால் நமச்சி இதோட 70 முறைக்கு மேல் கால் பண்ணிட்டேன் இதுக்கு மேல நான் பண்ண முடியாது போன்ல என்னால திட்டு வாங்க முடியாது என கூறுகிறார்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென சரஸ்வதி வேலை செய்யும் மெக்கானிக் செட்டில் இருந்து அந்த சின்ன பையன் தமிழுக்கு கால் பண்ணுகிறார். அந்த சமயத்தில் தமிழ் போனை எடுத்து என்ன ஆச்சு ஏதாச்சு எனக் விசாரித்துக் கொண்டிருக்க சரஸ்வதிக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போய் இருக்காங்க உங்கள வர சொன்னாங்க நீங்க உடனே கிளம்புங்க என கூறுகிறார்.
தமிழ் பதறி அடித்து போய் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அங்கு சரஸ்வதி டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உடனே சரஸ்வதிக்கு ஒன்னும் இல்ல உங்களுக்கு தான் பிரச்சனை நீங்க தான் ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆகுறீங்க அவங்க குழந்தையை அவங்க நல்லா பாத்துப்பாங்க நீங்க நல்லா பாத்துக்குறதா நினைச்சுகிட்டு அவங்கள ரொம்ப போர்ஸ் பண்றீங்க என டாக்டர் அட்வைஸ் செய்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க அது ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா அவங்களுக்கு பிடிச்சதா பார்த்து நடந்துக்கோங்க எனக் கூறுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி டாக்டரிடம் போட்டுக் கொடுத்தது குறித்து கோதை, நடேசன், வசு ஆகியோரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் உடனே நடேசனை பார்த்து உங்க புள்ள உங்கள மாதிரி தான் இருப்பான் என பேசிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் அர்ஜுன் கோதை இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரை தூக்கிவிட்டு லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என போர்டை வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தமிழ் அந்த வழியாக வருகிறார் இவர்களை பார்த்து அர்ஜுன் நாட்களாக சிரிக்கிறார். நாமலே எதிர்பார்க்கல என்றாலும் தானா வந்து அசிங்கப்படுறாங்க என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார் உடனே நமச்சி கோபப்படுகிறார். அந்தப் பெயர் அங்கே இருக்கிறதை விட இல்லாமல் இருக்கிறதா நல்லது இவன் எப்படியும் பிராடு தானே பண்ண போறேன் என்பது போல் நமச்சி இடம் கூறுகிறார்.
வீட்டிற்கு வந்த தமிழ் மற்றும் நமச்சி கோதை இண்டஸ்ட்ரீஸ் போர்டை தூக்கி விட்டதை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார்கள் உடனே கோதை வருத்தத்தில் இருக்கிறார் ஆனால் தமிழ் இப்ப எதுக்கு எல்லாம் சோகமா இருக்கீங்க அந்த பேர் அங்க இருக்குறது தான் தப்பு எப்படியும் அவன் தப்புதான் செய்யப் போறான் பேரு தான் கெட்டுப் போகும் அதுக்கு அந்த பேரு இல்லாம இருந்தா நல்லது தானே என பேசுகிறார்.
உடனே நடேசன் இப்ப கூட தமிழ் உங்க பெயருக்கு கூட கலங்க வரக்கூடாது என்று தான் நினைக்கிறான் அதனாலாதான் தமிழ் உன் மேல ரொம்ப பாசமா இருக்கிறார் என கூறுகிறார். அடுத்த காட்சியில் நடேசன் மற்றும் கோதை இருவரும் மொத்த துணிகளையும் துவைத்து போடுகிறார்கள் இதனைப் பார்த்த சரஸ்வதி நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க நானே செஞ்சுக்க மாட்டேனா எனக் கூறுகிறார் உடனே வசு அவங்க துணியை மட்டும் துவைச்சா பரவால்ல நம்ம துணியும் சேர்த்து துவைக்கிறார்கள் எனக் கூற உடனே சரஸ்வதி இதெல்லாம் ஏன் நீங்க செய்றீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கோதை மற்றும் நடேசன் இதில் என்ன இருக்கு எங்க துணியை நீங்கள் துவைக்கலையா இது ஒரு ஹெல்ப் மாதிரி தானே நீங்க அவங்க அவங்க வேலைய பாருங்க என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள். கார்த்தியும் வசுவும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது குறுக்கே தமிழ் வந்து விடுகிறார் உடனே தமிழ் கிலிட்டியாக ஃபீல் பண்ணுகிறார் அவங்களுக்குன்னு ஒரு பிரவேசியா ஒரு ரூம் வேணும் என யோசிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.