Thamizhum saraswathiyum september 20 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி தன்னுடைய அம்மா கோதையிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது திடீரென நடேசன் வந்து ஃபோனை பிடுங்கி உனக்கெல்லாம் அறிவே கிடையாதா என்ன அப்பான்னு கூப்பிடாத உன்னை எப்போது தலைமுழுக்கிடேன் என திட்டி விடுகிறார். உடனே போனை வைத்துவிட்டு இந்த வளைகாப்பு வேணா என்று அர்ஜுனிடம் கூறுகிறார் ஆனால் அர்ஜுன் அவங்க எல்லாம் கண்டிப்பா வருவாங்க நீ போய் கெளம்பு என் உள் மனசு சொல்லுது என ஏதேதோ சொல்லி ராகினியை கிளம்ப சொல்கிறார்.
அடுத்த காட்சியில் அபி கேட்டுக் கொண்டிருப்பது தெரிந்து கொண்டு அர்ஜுன் மற்றும் அவரின் மாமா இருவரும் இந்த வளைகாப்பு நடத்தலாமா வேணாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை கேட்டு அபி உடனே சரஸ்வதிக்கு கால் செய்து வளைகாப்பு நடக்குமா? நடக்காதா என்று தெரியவில்லை, அம்மா வராததாள ராகினி ரொம்ப அழுவுனா அதனால வளைகாப்பு வேண்டாம் எனக் கூறுகிறார். என பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே ஒரு நிமிடம் இரு என கூறிவிட்டு கோதையிடம் பேசுகிறார் நாம தமிழ் மாமா வர்றதுக்காட்டியும் போயிட்டு வந்துடலாம் அப்படியே தெரிஞ்சாலும் நம்ம சொல்லி புரிய வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறார்கள்.
உடனே கோதையும் சரி வாங்க போகலாம் என கிளம்புகிறார்கள் அதேபோல அர்ஜுன் பிளான் செய்தது போல் கோதை குடும்பம் வருகிறது அனைவரும் கோவிலுக்கு வருகிறார்கள். வளைகாப்பிற்கு தடபுடலாக அனைத்தையும் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுனன் மாமா ரவுடியை காமிச்ச இவங்க நாலு பேர்தான் என கூறுகிறார். உடனே அர்ஜுன் தமிழ் போட்டோவை காமிக்கிறார் இவன் கோவிலுக்கு வருவான் வான்டடா வம்பு இழுத்து அடிங்க என கூறுகிறார்.
அதேபோல் தமிழ் ஆபீஸில் இருக்கும் பொழுது நடேசன் வருகிறார் வக்கீலை பார்க்க போனீங்களே என்னாச்சு என கார்த்தி கேட்க வழக்கம் போல் தான் கூறுகிறார் வக்கீல் 50 சதவீதம் கிடைக்கும் 50 சதவீதம் சொத்து கிடைக்காது எனக் கூறுகிறார். உடனே தமிழ் இது தேவையில்லாத வேலை அவன் கிட்ட எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் நீங்க எதுவும் பண்ணத் தேவையில்லை விட்டுடுங்க எனக் கூறுகிறார்.
அந்த சமயத்தில் அர்ஜுன் ஆபீஸ்ல இருந்து போன் வருகிறது கோதையை அசிங்கப்படுத்த அர்ஜுன் ஏற்பாடு செய்ததெல்லாம் அதற்காக தான் வளைகாப்பிற்கு அர்ஜுன் அழைத்துள்ளான் என கூறுகிறார்கள் உடனே தமிழிடம் சொல்லிடுங்க எனக் கூறுகிறார். அதே போல் உடனே ஓடி வந்து தமிழிடம் தன்னுடன் வேலை செய்யும் நபர் ஒருவர் கோதை அம்மாவை அசிங்கப்படுத்துவதற்காக தான் அர்ஜுன் வளைகாப்பிற்கு வரச் சொல்லி இருக்கிறான் என்பதை கூறுகிறார்கள்.
உடனே நடேசன் கோதைக்கு போன் செய்கிறார் ஆனால் சரஸ்வதி போனை எடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார் அதே போல் தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் போன் செய்கிறார்கள் யாரும் எடுக்காமல் இருக்கிறார்கள் கோதை மற்றும் சரஸ்வதி, வசுசு மூவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கு அர்ஜுன் வாங்க அத்தை நீங்கள் வருவீங்கன்னு எனக்கு தெரியும் எனக் கூற அதற்கு கோதை உனக்காக நான் வரல என் பொண்ணுக்காக வந்தேன் என அசிங்கப்படுத்துகிறார்.
அதே போல் தமிழ் நமச்சி கார்த்தி நடேசன் நான்கு பேரும் கோவிலுக்கு கிளம்பி செல்கிறார்கள் அர்ஜுன் இவர்களை அடிக்க ஆள் செட் செய்து வைத்துள்ளார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.