Thamizhum saraswathiyum September 19 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் குடும்பம் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராகினி வளைகாப்பிற்கு அவர்களை கூப்பிட வேண்டாம் என அர்ஜுன் அம்மா கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுனின் அக்கா ஆமாண்டா ஏற்கனவே அவங்க கிட்ட வாங்கின அடி போதும் இதுக்கு மேல தேவையில்லாத பிரச்சினை எதற்கு எனக் கூற அதற்கு தமிழ் குடும்பம் கண்டிப்பா வந்து தான் ஆகணும் ராகினி ஆசையும் அதுதான்.
அது மட்டும் இல்லாம என்ன அந்த தமிழ் அடிச்சிருக்கான் அதுக்கு நான் பழிக்கு பழி வாங்குவேன் அதுக்கு என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு நான் ஏற்கனவே நாலு ரவுடிகள் கிட்ட சொல்லி வச்சிருக்கேன் என கூற அப்ப அந்த கோதை குடும்பம் மொத்தத்தையும் அடிக்க சொல்லு என அர்ஜுன் அக்கா கூற அதற்கு அவ்வளவுதான எல்லாரையும் அடிக்க சொல்லிடலாம் என அர்ஜுன் கூறுகிறார்.
ஆனால் கண்டிப்பாக கோதை குடும்பம் வளைகாப்பிற்கு வந்து ஆக வேண்டும் எனக் கூற உடனே அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமா இருவரும் கோதை குடும்பத்திற்கு செல்கிறார்கள் அங்கு சென்ற அர்ஜுன் அத்தை என கூப்பிட நடேசன் யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்ன திட்டுகிறார். அது மட்டும் இல்லாமல் கோதை திட்டுகிறார் அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள் ஆனால் அர்ஜுனின் மாமா நக்கலாக பேசுகிறார் சீட்டு வீட்டில் இருந்தும் இன்னும் உங்களுக்கு கௌரவம் போகலையா என பேச அதற்கு சரஸ்வதி இன்னும் கொஞ்ச நேரத்தில் தமிழ் வந்துருவாரு அவர்ட்ட இந்த மாதிரி பேசு உன்னை பொளந்து கட்டுவாரு என கூறுகிறார்.
இப்படியே பேசிக் கொண்டிருக்க நீங்கள் வர வேண்டும் வளைகாப்பு நாளைக்கு கோவிலில் வைத்துள்ளோம் என கூறுகிறார் அர்ஜுன் அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க என நடேசன் ஆவேசப்பட்டு திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் கோதை தன்னுடைய மகள் வளைகாப்பிற்கு போக வேண்டும் என ஆசை இருக்கிறது ஆனால் அனைவரும் போகக்கூடாது என தடுக்கிறார்கள்.
அர்ஜுன் வீட்டிற்கு செல்கிறார் ராகினி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் தன்னுடைய அம்மா வராங்களா இல்லையா என தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார் அர்ஜுன் வந்தவுடன் உங்க அம்மாவிடம் சொல்லிவிட்டேன் கண்டிப்பாக அவர்கள் வருவார்கள் என நம்பிக்கையாக கூறுகிறார் இதனால் ராகினி சந்தோஷமாக இருக்கிறார்.
பிறகு சிறிது நேரம் கழித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சமயத்தில் தமிழ் வருகிறார் கம்பெனி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதை ராகினியை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் உடனே கார்த்தி ஏமா இவ்வளவு சோகமா இருக்க என கேட்க அர்ஜுன் வந்ததைக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்து திட்டுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ராகினி வளைகாப்பிற்கு கூப்பிட்டு விட்டு சென்றான் என கூறுகிறார்கள்.
அனைவரும் வளைகாப்பிற்கு போகலாம் என சரஸ்வதி வசு கோதை முடிவெடுத்தார்கள் ஆனால் தமிழ் அவனே வளைகாப்பிற்கு கூப்பிட்டு இருக்கிறதால் கண்டிப்பாக ஏதோ ஒரு பிளான் இருக்கு தேவை இல்லாம அவன் சொல்றான்னு போய் அசிங்கப்பட்டு நிற்க வேண்டாம். நம்ம வேலையை நாம பார்ப்போம் என கூறுகிறார். தமிழ் இப்படி கூறியதால் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அடுத்த நாள் காலையில் ராகினி தன்னுடைய அம்மா கோதை வருவார் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் போன் செய்து பேசும்பொழுது எங்களால் வர முடியாது என கூறுகிறார் கோதை.
என்னை ஆசீர்வாதம் பண்ண மாட்டீங்களா அம்மா என ராகினி அழுகாத குறையாக கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது