Thamizhum saraswathiyum september 17 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை எபிசோடு ராகினி பரமுவை எங்க அம்மாவை பேசுவதற்கு உங்களுக்கு எந்த ரைட்ஸ்ம் கிடையாது என சண்டை போடுகிறாள். பின்பு அதனைத் தொடர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அர்ஜுன் குடும்பத்தினர் கோதையின் உணவு பட்டியலை பற்றி பேசிக் கிண்டலடித்து கொண்டிருக்கின்றனர்.
உடனே கடுப்பாகி, ராகினி அனைவரிடமும் சண்டை போடுகிறார் சண்டை போட்டுவிட்டு சாப்பிடாமல் சென்று விடுகிறார். உடனே அர்ஜுன் நான் ராகினியை உண்மையாகவே காதலிக்கிறேன் அது மட்டுமில்லாமல் எனது குழந்தை எவ்வளவு வயிற்றில் வளர்ந்து வருகிறது. இப்படி அவள் சாப்பிடாமல் இருந்தால் அவளுக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் ராகினிக்கு பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என தனது அக்கா மற்றும் மாமாவிடம் சண்டை போடுகிறார்.
அது மட்டுமில்லாமல் சொத்து இன்னும் ராகினி பெயரில் தான் இருக்கு எனவும் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் வேலை தேடி தனது நண்பனின் கம்பெனிக்கு போவதாக வசுந்தராவிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு எனக்கு இன்னும் ரெண்டு யூனிட் இருக்கு அத நீ பாத்துக்கோ என கம்பெனிக்கு அழைத்து சென்று அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார்.
மேலும் தனது கம்பெனியில் கார்த்திக்கு ஜிஎம் பதவியும் கொடுக்கிறார். அதை தொடர்ந்து இன்று வெளிவந்த இந்த வாரப் ப்ரோமோவில் ராகினியின் மாமியார் உனக்கு இப்போது எட்டு மாதம் ஆகிறது வளைய காப்பு வைக்க வேண்டும் எனக்
கூறுகிறார். உடனே அதற்கு வளைகாப்பு வைத்தால் எனது அம்மா வரவேண்டும் என சொல்கிறார்.
அதற்கு அர்ஜுனின் அம்மா உங்க அம்மா இந்த வீட்டுக்கு திரும்ப வரவே கூடாது என கோபமாக சொல்கிறார். அப்படி வந்து தான் ஆகணும்னா வளைய காப்பே வேண்டாம் என திட்டவட்டமாக சொல்கிறார். ஆனால் அர்ஜுன் ராகினி விரும்பி கேட்கிறார் அதை கண்டிப்பா செய்தே ஆகணும் என முடிவெடுத்து கோதையிடம் சென்று ராகினிக்கு வளைகாப்பு வச்சிருக்கோம் நீங்க கண்டிப்பா வரணும் என கூப்பிடுகிறார். கோதையோ ஷாக் ஆகி நிற்கிறார். இந்த வாரம் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.